வட மாநிலங்களில் டள்பதி ரீல்ஸ்.. பண்ணையார் மாதிரி பட்டு வேட்டி சட்டை.. ஸ்டாலின் சொன்ன மேட்டர்!
திருப்பூர்: தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இடைத்தேர்தல் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் சூழலில், திமுகவினர் முழு வேகத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தாராபுரம் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது ஸ்டாலின், வட மாநிலங்களில் தவெக சார்பாக வெளியிடப்படும் ரீல்ஸ்களையும் சாடி இருந்தார். தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக முன்னிறுத்தி வருகிறது. அதற்கேற்ப விஜய் மற்றும் தவெக தொடர்பாக பல்வேறு பொய் செய்திகள் ரீல்ஸாக வெளியிடப்பட்டு வந்தன.

இதனால் இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் விஜய் அடுத்த பிரதமருக்கான ரேஸில் 9.1% ஆதரவுடன் 3வது இடத்தை பிடித்தார். இந்த விவகாரத்தை ஸ்டாலின் கையில் எடுத்து பேசி இருக்கிறார். இதுதொடர்பாக ஸ்டாலின், கோடிக்கணக்கில் காசு கொடுத்து வட மாநிலங்களில் எல்லாம் டள்பதி.. டள்பதி விஜய்.. இப்படி டிசைன் டிசைனாக பொய் செய்தியை பரப்ப தொடங்கிவிட்டார்கள்.
பெண்கள் பாதுகாப்புக்காக ஒவ்வொரு தெருவிலும் டிரோன் மூலமாக கண்காணிக்கிறார்களாம். இதெல்லாம் பொய்னு தெரிந்தவர்கள் தமிழ்நாட்டை எவ்வளவு கேவலாக நினைப்பார்கள். இதெல்லாம் ஏன் செய்கிறார்கள் தெரியுமா.. 4 மாதத்தில் சாதனை என்று சொல்ல எதுவும் இல்லை.. மின் வெட்டு.. அரிவாள் வெட்டு, பாலியல் வன்கொடுமை, அரிசி விலை உயர்வை சொல்வதா?
கடன் தள்ளுபடி என்று விவசாயிகளை ஏமாற்றியதை சொல்வதா? இதன் காரணமாகவே எல்லாம் ரீல்ஸ். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு மக்கள் முன் முதல்வர் நடிக்க தொடங்கிவிட்டார். மக்களை போராடவிட்டு முதலமைச்சர் மட்டும் பண்ணையார் மாதிரி பட்டு வேட்டி சட்டை அணிந்து பந்தா செய்து கொண்டிருக்கிறார். ஜோசியர் அப்படிதான் சொல்லி இருக்கிறார்.
காவிரி விவகாரத்தில் கூட கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறார். சிஎம் சார்.. ப்ரோ.. என்ன பயம்னு கொஞ்சம் சொல்லுங்க? குறுவை சிறப்பு தொகுதிப்புக்கும், வறட்டி நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாத முதல்வர்.. கொஞ்சம் பேப்பர் படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications
