கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் 75 வயது முதியவருக்கு நேர்ந்த கதி.. உயிரே போச்சு

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மும்பையில் இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 75 வயது நிரம்பிய முதியவர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

gyanesh-kumar-row-75-year-old-man-died-at-cockroach-janta-party-protest-in-mumbai

SIR விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற 2 தேர்தல் ஆணையர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் இதே கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டு வருகிறது.

இன்று மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில் ஏராளமானவர்கள் திரண்டு ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதில் இளைஞர்கள் மட்டுமின்றி, முதியவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் தான் போராட்டத்தில் பங்கேற்ற 75 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் கோபாலகிருஷ்ண சுப்பையா பிள்ளை. இவர் கேரளாவை சேர்ந்தவர். மும்பை அருகே தானேவில் உள்ள தோஸ்தி மேற்கு கவுண்ட்டி பி விங்க் பகுதியில் வசித்து வந்தார்.

தான் வசிக்கும் தானே பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் இருந்தாலும் அதனை கடந்து மும்பை சிவாஜி பார்க்கில் இன்று நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் பங்கேற்றார்.

மாலை 4.30 மணிக்கு அவர் போராட்டத்தில் பங்கேற்றார். அரை மணிநேரத்தில் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கினார். இதையடுத்து அங்கிருந்த போலீசார், டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ண சுப்பையா பிள்ளை இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+