Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடல்ல நண்டு இருக்கே.. இதயத்துக்கு நல்லது.. ஆண்மையை பெருக்கும்.. ஹெல்த் பெனிஃபிட்ஸ் என்னென்ன தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகிலுள்ள உயிரினங்களிலேயே பக்கவாட்டில் நடக்கக்கூடியது நண்டு இனம்தான்.. உடலுக்கு நன்மையை தரக்கூடிய கடல் உணவுகளில் நண்டு தவிர்க்க முடியாதது.. அடிக்கடி நண்டு சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அவை என்ன? நண்டு யார் யார் சாப்பிடலாம்? மருத்துவ குணங்கள், சத்துக்கள் என்னென்ன? அவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

நூறு கிராம் நண்டுவில், 59 மிகி கால்சியம், 1.5 கிராம் கொழுப்பு, 19 கி.புரோட்டீன், 29IU வைட்டமின் A, 7.6 mg வைட்டமின் C, 9.78 mg வைட்டமின் B12 போன்றவை அடங்கியுள்ளன.. 1.5 கிராம் அளவுக்கு மட்டுமே கொழுப்பு உள்ளதால் ஆரோக்கியமான உணவாக நண்டு கருதப்படுகிறது.

Health Crab Benefits

நண்டில் உள்ள சத்துக்கள்

நண்டு சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, நம்முடைய உடலிலுள்ள திசுக்கள், செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க நண்டுவிலுள்ள செலீனியம் சத்துக்கள் உதவுகிறது.. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், நண்டினை தேர்ந்தெடுக்கலாம். இதில் கொழுப்பு இல்லை..

வைட்டமின் A நிரம்பியிருப்பதால், தெளிவான பார்வை பெற நண்டுகள் உதவுகின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம், செலெனியம், தாமிரம் போன்ற சத்துக்கள் கொண்டிருப்பதால், இதயத்துக்கு மிகவும் நல்லது. எனவே இதய நோயாளிகள் நண்டு அளவாக சாப்பிடலாம்.

வளரும் பிள்ளைகளுக்கு நண்டு சாப்பிட தரலாம். ஏனென்றால், மூளை சிறப்பாக செயல்படுவதற்கும், நரம்பு மண்டலம் செயல்படுவதற்கும் நண்டு உதவுகிறது.. எலும்பு தேய்மானத்தால் அவதிப்படுவோர் கால்சியம் அதிகமாக உள்ள இந்த நண்டினை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ளலாம். நண்டு சாப்பிடுவோர் முடக்குவாதம் பாதிப்புகளுக்கு ஆளாவதில்லை.

காயங்களை ஆற்றும்

ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, கிட்னி சிறப்பாக செயல்பட நண்டு பயன்படுகிறது. குரோமியம் நிறைய உள்ளதால், ரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவினை குறைக்க முடிகிறது.. குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீரான நிலையில் பராமரிக்க நண்டு பயன்படுகிறது. காயங்களை ஆற்றக்கூடிய தன்மை நண்டுக்கு உண்டு.

பாலின உணர்வுகள்

நண்டில் உள்ள சில முக்கியமான கனிமங்கள், பாலின ஹார்மோன்களை தூண்டுவதற்கு உதவுகிறதாம். அதாவது அணுக்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்வதுடன் செக்ஸ் ஆர்கன்களைத் தூண்டி, உடலை வெப்பமேற்றி, செக்ஸ் ஆர்வத்தை தூண்டிவிடும் தன்மை நண்டுவுக்கு உண்டு என்பார்கள்.

புரோட்டின் சத்துக்கள் அதிகம் என்பதால், சருமம், முடி போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டின் சத்து அதிகமாக உள்ளதால் தசைகள் சீரமைப்பிற்கு நல்ல மருத்துவ குணம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

யார் யார் தவிர்க்கலாம்

நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்தம் பாதிப்புள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பாதிப்புள்ளவர்கள் நண்டு சாப்பிடுவதை குறைத்து கொள்ளலாம். அதிலும் கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடவே கூடாதாம். எனவே டாக்டரின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது நல்லது.

உயிருள்ள நண்டுகளையே தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். எண்ணெயில் வறுக்காமலும், பொறிக்காமலும், சூப், குழம்பு செய்து சாப்பிடும்போது, முழு ஊட்டச்சத்தினை பெறலாம். அதுமட்டுமல்ல, நண்டு உஷ்ணத்தை தரக்கூடியது என்பதால், மழைக்காலங்களில் சாப்பிடலாம். அல்லது சளி, இருமல் தொல்லை இருந்தால், சூப் வைத்து மிளகு சேர்த்து குடிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+