ஆட்டு ரத்தத்தின் ஆரோக்கியம்.. ஆட்டுக்கறி உள்ளிட்ட சிவப்பு இறைச்சியை சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா? ஓஹோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்டுக்கறி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? ஆட்டுக்கறியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? நீரிழிவு அபாயத்தில் சிவப்பு இறைச்சியின் பங்கு என்ன? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

இதயநோய், சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளிட்டவர்களை தவிர மற்றவர்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறையாவது சிறிதளவு மட்டன் சாப்பிடலாம் என்கிறார்கள்.

Mutton blood red meat diabetes

ஏனென்றால், ஆட்டுக்கறி அதிக சத்துக்களை கொண்டது.. உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் உஷ்ணத்தை தணிக்கக்கூடியது.. சரும ஆரோக்கியத்தை காக்கக்கூடியது.

மட்டன் சாப்பிடுவதால் நன்மைகள்

மட்டன் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுவதில்லையாம்.. ஆட்டு கொழுப்புகள், இடுப்புப் பகுதிக்கு பலம் தரக்கூடியது.. அளவுக்கு அதிகமான வலிகள், புண்களுக்கு சிறந்த மருந்தே ஆட்டுக் கொழுப்புதான்.

ஆட்டு ரத்தத்தில் சோடியம், கால்சியம், ஒமேகா-3 , பாஸ்பரஸ், வைட்டமின்கள், புரோட்டீன் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த ஆட்டு ரத்தத்தில் இருப்பதால், வளரும் பிள்ளைகளுக்கு நல்லது. அதேபோல, இரும்பு சத்து நிறைந்துள்ளது.. ரத்தசோகை கோளாறு நீங்குவதுடன், புதிய ரத்தமும் ஊறச்செய்யும்.

ஆட்டு ரத்தம் இத்தனை நல்லதா

அசைவ உணவுகளை சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்கும் என்பார்கள்.. ஆனால் ஆட்டு ரத்தப் பொரியல் எடையை குறைக்கிறதாம்.. ஏனென்றால், இதிலுள்ள வைட்டமின் B, உடலிலுள்ள உள்ள கொழுப்பை எரிக்க செய்கின்றன. மட்டன் மட்டுமேயில்லாமல், கோழிக்கறியிலும் நிறைய புரதங்கள் உள்ளன..

எனினும், சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும் என்பார்கள்.. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை அனைத்துமே சிவப்பு நிறமாக இருப்பதால், இதற்கு சிவப்பு இறைச்சி என்று சொல்கிறார்கள்..

சிவப்பு இறைச்சிகள்

பொதுவாக, சிக்கன் , மீன் இறைச்சி சாப்பிடுவது பெரும்பாலானோருக்கு நல்லது. அதுமட்டுமல்லாமல், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) குறைவாக உள்ளது. அதனால், சிக்கன் அனைவருக்கும் ஏற்ற உணவாக உள்ளது.. ஆனால், பொறித்த வடிவிலோ வறுத்த வடிவிலோ சாப்பிடும்போதுதான், உடலுக்கு தொந்தரவை தந்துவிடுகிறது.

மீனிலும், நிறைய புரதங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (omega 3 fatty acids ) போன்ற ஆரோக்கியத்திற்கு நன்மையான பொருட்கள் உள்ளன. குறிப்பாக, வைட்டமின் D,வைட்டமின் B6, B12 அடங்கியிருப்பதே மீன்களின் தனிச்சிறப்பாகும்..

சர்க்கரை நோயாளி

கடந்த 2018ம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு (Type 2 diabetes) டைப் 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 48 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.. எனவே, சிவப்பு இறைச்சியை குறைவாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+