ஆட்டுக்கால் போல சத்துள்ள கோழிக்கால்.. சருமம், ரத்த அணுவின் ஆரோக்கியம்., குழந்தைகளுக்கான கோழி கால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்டுக்கால்களுக்கு தரும் முக்கியத்துவம் கோழியின் கால்களுக்கு தரப்படுவதில்லை.. கோழிக்கால்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கோழி கால்களை சாப்பிடுவதால் தீரும் வியாதிகள் என்னென்ன? எப்படி சாப்பிட வேண்டும்? சரும ஆரோக்கியத்துக்கு கோழியின் கால்கள் தரும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே காணலாம்.

கோழிக்கறியில் கால்சியம், பாஸ்பரஸ் , இரும்புச்சத்துக்களும், A, B, D போன்ற வைட்டமின்களும் அடங்கியிருக்கின்றன. சிக்கனிலுள்ள அமினோ ஆசிட் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகள், பற்களுக்கு பலத்தையும் தருகின்றன.. சிக்கனிலுள்ள மக்னீசியமும், புரோட்டீன்களும் பெண்களுக்கு தேவையான சத்துக்கள் ஆகும்.

கோழியின் இறக்கை

சிக்கனிலுள்ள ஜிங்க் சத்துக்கள், ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. சிக்கனிலுள்ள நியாசின், கொலஸ்ட்ரைலை குறைக்கிறது. சிக்கனிலுள்ள செலீனியம் மூட்டு வலி பிரச்சனையை சீராக்க உதவுகிறது. சிக்கனிலுள்ள வைட்டமின் B5 மன அழுத்தத்தை விடுவிக்க உதவுகிறது..

சிக்கனிலுள்ள B6 இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க தூண்டுகிறது. சிக்கனில் தவிர்க்க வேண்டிய பாகங்கள், கோழியின் கால்கள், இறக்கை, தொடைப்பகுதியாகும்.. ஏனெனில் இந்த பகுதிகளில் கொழுப்பு நிறைய உள்ளதால், வயதானவர்கள், இதய நோயாளி, சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தவிர்த்துவிடலாம்.

கோழி கால்கள்

அதேபோல சிக்கனில் பலரும் அறியாதது, கோழியின் கால்களிலுள்ள சத்துக்கள்.. கோழியின் கால்களில், புரோட்டீன், கால்சியம் நிரம்பி கிடக்கின்றன.. எனவே, எலும்புகள், பற்கள் பலமாவதுடன், காயங்களை சீக்கிரமாக குணமாகவும் உதவுகின்றன.

நொறுங்கிய எலும்பை விரைந்து சேர்வதற்கு ஆட்டுக்கால் எப்படி தூண்டுகோலாக உள்ளதோ, அதேபோல், பல்வேறு கோளாறை நீக்க கோழி கால்கள் பயன்படுகின்றன. கோழியின் காலில் உள்ள கொழுப்பானது, மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டு இறைச்சியைவிட குறைவு என்கிறார்கள்.

உடல் சுருக்கம் நீங்கும்

சிக்கன் கால்களில் இரும்புச்சத்தும், கொலாஜன் சத்தும் உள்ளன. உடல் சுருக்கத்தை தள்ளி போடக்கூடிய சக்தியும், கெட்ட கொழுப்பை வெளியேற்றக்கூடிய சக்தியும், இந்த கொலாஜினுக்கு உள்ளது. எனவே, சிக்கனில் கோழி கால்களையும் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும். இதனால், தோல் தொடர்பான வியாதிகள் நீங்குவதுடன், ரத்த சிவப்பணுக்கள் அளவும் அதிகரிக்க செய்யும்..

கோழி கால்களை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி, தண்ணீர் ஊற்றி வேகவைத்து குழந்தைகளுக்கு சூப் போல செய்து தரலாம்.. இதனால் அவர்களின் பற்கள், எலும்புகள் உறுதிப்பெறும்.

அதற்காக சிக்கன் கால்களை அதிகம் சாப்பிடக்கூடாது.. இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்ல, கால்களில் பல ஹார்மோன்கள் உள்ளன. இந்த ஹார்மோன்களை அதிகம் எடுக்கும்போது, அது உடலின் ஆரோக்கியத்தை அழித்து, பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


சிக்கன் தோல், தலை, கழுத்து

அதேபோல, சிக்கனின் நுரையீரலில் நிறைய ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால், இதை தவிர்க்க சொல்கிறார்கள். ஏனென்றால், நுரையீரலை எவ்வளவு சுத்தமாக கழுவி, உயர் வெப்பநிலையில் வேக வைத்தாலும், அதிலுள்ள கிருமிகளை அழிக்க முடியாது.. எனவே, சிக்கன் நுரையீரலை உட்கொள்வதைத் தவிர்த்துவிடலாம்.

கோழி கறியின் கழுத்து பகுதியையும் தவிர்க்கலாம்.. காரணம், கோழிக்கறி கழுத்தில் நச்சுக்கள், கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் இருக்கின்றன.. இது கேன்சர் அபாயத்தை அதிகரித்துவிடுமாம்..

சிக்கன் தலையையும் தவிர்க்கலாம். மனித ஆரோக்கியத்தை அழிக்கும் சில ஆபத்தான பொருட்கள் கோழியின் தலையில உள்ளதால், தலையை தவிர்த்துவிட்டே வாங்க சொல்கிறார்கள். சிக்கன் தோலில் ஒரு சத்தும் இல்லை என்பதால் அதையும் தவிர்க்கலாம். சத்துக்கள் இல்லையென்றாலும், கொழுப்புக்கள் நிறைய உள்ளன.. கோழியின் தோலில் மீதுதான் பல ஒட்டுண்ணிகள், கிருமிகள் சேர்ந்திருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+