பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி சிஎம்டிஏ அனுமதி.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய தலைமைச் செயலகமான பட்டினப்பாக்கம் நிலத்தின் வகைப்பாட்டை மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளது. பட்டினப்பாக்கம் நிலம் பல்வேறு வகைகளாக இருந்த நிலையில், வணிக பயன்பாடு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், தலைமைச் செயலகத்தை அங்கு கட்ட வேண்டுமென்றால், அந்த நிலத்தின் வகைப்பாட்டை நிறுவன பயன்பாட்டு மண்டலமாக மாற்ற வேண்டும்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதன்பின் புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கடற்கரைக்கு அருகில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இடம் விஜய்யின் வீட்டில் இருந்து 50 மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது.

New Secretariat

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், அது 9 மீனவ கிராமங்களை பாதிக்கும் என்று தெரிய வந்தது. இதனால் அங்கு புதிய தலைமைச் செயலகம் அமையக் கூடாது என்று திமுக, அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கம்யூனிஸ்ட்டுகள் மீனவர்களுடன் இணைந்து தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தலைமைச் செயலகம் கட்டுமான இடம் தொடர்பாக முதல்வர் விஜய் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். இதனால் விஜய்க்கு தெரியாமல் ஏன் அரசாணை வெளியிடப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த விவகாரத்தில் பட்டினப்பாக்கம் பகுதியிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

பட்டியனப்பாக்த்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட இருக்கிறது. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலக கட்டுமானத்திற்கான நில வகைப்பாடு வணிக பயன்பாட்டு மண்டலமாக மாற்ற சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே வணிக வளாகம் கட்டுவதற்காக இந்த நிலத்தை வணிக பயன்பாட்டு மண்டலமாக மறுவகைப்பாடு செய்யக்கோரி சிஎம்டிஏ-விடம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த சிஎம்டிஏ, நில வகைப்பாட்டை மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், தலைமைச் செயலகத்தை அங்கு கட்ட வேண்டுமென்றால், அந்த நிலத்தின் வகைப்பாட்டை நிறுவன பயன்பாட்டு மண்டலமாக மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+