செந்தில் பாலாஜி போட்ட ஒரு போட்டோ.. “எங்க அகராதியிலேயே இடமில்லை”.. வரிந்துகட்டி இறங்கிய அருண்ராஜ்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தவெக வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக, சேலை, காமாட்சி விளக்கு உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்ட நிலையில், அவருக்கு, "காசை வீசி வாக்குகளைப் பறிக்கும் கறைபடிந்த அரசியல் எங்களுடையது அல்ல" என பதில் கொடுத்துள்ளார் தவெக அமைச்சர் அருண்ராஜ்.

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக, வாக்காளர்களைக் கவர பணப் பட்டுவாடா, அன்பளிப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி, காமாட்சி விளக்கு, சேலை உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.

Dharapuram By Election dharapuram by election tvk

இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "தூய சக்தியின் தூய அரசியல்.. தாராபுரம் தொகுதி குண்டடம் மேற்கு ஒன்றியம் மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம்.. மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல்.. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார்.

அதற்கு பதிலடியாக அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "ஊழல் இருளில் உழல்வோர், ஒளியைப் பழிப்பதா? தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில், தோல்வி பயத்தால் தத்தளிக்கும் திமுக நிர்வாகி செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது வீசியுள்ள அபாண்டமான அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறோம். நிராகரிக்கிறோம். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. புனையப்பட்டது.

இடைத்தேர்தல் வரலாற்றிலேயே ஜனநாயகத்தைப் பணச்சலங்கையிட்டு ஆடவிட்ட பெருமை திமுகவையே சாரும். வாக்காளர்களை ஆட்டு மந்தைகளாக மண்டபப் 'பட்டிக்குள் அடைத்து' வாக்கு வேட்டையாடிய பிதாமகர்கள், இன்று எங்களைப் பார்த்துத் 'தூய அரசியல்' எனக் கூறியதை விமர்சித்துப் பேசுவது விந்தையிலும் விந்தை!

சேலை, விளக்கு, பிரியாணி எனத் தாங்கள் காலங்காலமாகச் செய்யும் தகிடுதத்தங்களை எங்கள் மீது திணிப்பது, இருள் ஒளியைப் பார்த்துப் பழிப்பதற்குச் சமம். அதிகார பலத்தாலும் பண மமதையாலும் வாக்குகளை விலைக்கு வாங்கிப் பழகியவர்களுக்கு, எங்கள் மீது மக்கள் காட்டும் தன்னெழுச்சியான அன்பு கண்களை உறுத்துகிறது.

அவர்கள் காட்டும் புகைப்படம், வஞ்சகத்தால் புனையப்பட்ட அப்பட்டமான பொய்! காசை வீசி வாக்குகளைப் பறிக்கும் கறைபடிந்த அரசியல் எங்கள் மரபல்ல; அறமே வடிவான எங்கள் தலைவரின் அகராதியிலேயே அதற்கு இடமில்லை. எளிய மக்களின் தூய அன்பை மட்டுமே நம்பி நிற்கும் எங்களுக்கு, ஊழல் குறுக்கு வழிகளில் பயணிக்கும் இயல்பே எக்காலத்திலும் கிடையாது!

அவதூறு சேற்றை வாரி இறைத்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்கும் செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினர் மீது, த.வெ.க உறுதியான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பணத்தால் ஜனநாயகத்தை ஏலம் கேட்கும் எத்தர்களுக்கு, தாராபுரம் மக்கள் தங்கள் விரல் மையால் தகுந்த தீர்ப்பெழுதுவார்கள்!" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+