முருங்கையிலை சூப் 1 கப் குடிப்பதால் கிடைக்கும் நன்மை பாருங்க.. சத்தான முருங்கைக்கீரை மூலிகை அமிர்தம்
முருங்கையின் பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என ஒட்டுமொத்த மரமும் மருந்தாக பயன்படக்கூடியவை. இதில் இளசான இலைகளை வைத்து சூப் செய்யலாம். இதற்கு முருங்கைக்கீரையை கைப்பிடி எடுத்து அலசிக்கொள்ள வேண்டும்..
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் ஊற்றி முருங்கையிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலக்க வேண்டும். 2 கிளாஸ் நீர், 1 கிளாஸ் வரும்வரை சுண்டியதுமே அடுப்பை நிறுத்திவிடலாம். இந்த சூப்பை அனைவருமே குடிக்கலாம்.

நெஞ்சு சளி, தலைபாரத்துக்கு உதவும்
நெஞ்சு சளி தலைபாரம், சளி, தொண்டைவலி, இருமல் இருந்தால், வேறு மாதிரியாக சூப் வைக்கலாம். ஒரு பாத்திரத்தில், அரிசி ஊற வைத்த நீரை ஊற்ற வேணடும்.
அந்த தண்ணீர் நன்றாக கொதித்ததுமே சுத்தம் செய்யப்பட்ட முருங்கைக்கீரையை சேர்த்து வேக வைக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் கீரையிலேயே கொட்டி வேக விட வேண்டும்.. பிறகு தேங்காய் பால், மிளகு தூள், சீரக தூள் சேர்த்து கலக்க வேண்டும். இறுதியாக மற்றொரு வாணலில், எண்ணெய், சீரகம், கருவேப்பிலை தாளித்து கொட்டினால் சூப் ரெடி.
சூப் குடிப்பதால் நீங்கும் தொந்தரவு
ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த இந்த சூப் குடித்தால் மலச்சிக்கல் தீரும்.. மெட்டபாலிசத்தைத் தூண்டி கலோரிகளை வேகமாக கரைக்கும்.. உடலிலுள்ள கெட்ட கொழுப்பு அளவை குறைக்கும். தொண்டை வலி, சளி பாதிப்பு கோளாறுகள் நீங்கும். ஆஸ்துமா நோய் அண்டாது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த சூப் கை கொடுத்து உதவுகிறது. மாதவிடாய் சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு பெண்களுக்கு தீர்வு தரும்..
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.. காரணம், முருங்கையில் உள்ள குர்செடின், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இந்த குளோரோஜெனிக் அமிலம், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது..ஆனால், குழந்தைகள், வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சையில் உள்ளவர்கள் மட்டும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று இதனை குடிக்கலாம்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications