ஹார்ட் அட்டாக்கை அண்டவிடாத கெளுத்தி மீன்.. வெயிட் லாஸுக்கு பெஸ்ட்..கெளுத்தி மீனின் அற்புத சத்துக்கள்
சென்னை: கடல்வாழ் உயிரினங்கள் பெரும்பாலும் உடலுக்கு நன்மையை தரக்கூடியது என்பார்கள். அந்தவகையில் மீன்களிலுள்ள மருத்துவ குணங்கள் அளப்பரியது.. இதில் கெளுத்தி மீனிலுள்ள சத்துக்கள் என்னென்ன? இந்த மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
பெரிய மீசையுடன் கடலில் வலம் வரும் இந்த கெளுத்தி மீன்களுக்கு, இரவு நேரத்தில் கண் தெரியாதாம். இந்த மீனை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டு வரும்போது, நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.. உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கின்றன.

சத்துக்கள் கெளுத்தி மீனில் வைட்டமின் A, C, D, B12 மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சாச்சுரேட்டடு கொழுப்பு, பாலிஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு, மோனோசாச்சுரேட்டடு கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், கால்சியம், கார்போஹைட்ரேட் போன்றவை உள்ளன..
சோடியம் மிகவும் குறைவாக உள்ள மீன்களில் இந்த கெளுத்தி மீனும் ஒன்றாகும்.. அதேபோல துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம் போன்றவையும் மிதமாகவே உள்ளதால், உடலுக்கு பாதுகாப்பு தரும் மீனாக கெளுத்தி உள்ளது. இதனால், மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களும் எளிதில் நெருங்குவதில்லை..
முக்கியமாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் இரண்டுமே இந்த மீனில் உள்ளதால், இதயத்துக்கு போதுமான பாதுகாப்பை தருகிறது.
சத்துக்கள்: இந்த மீனிலுள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்துகிறது.. அத்துடன், கெளுத்தி மீன்களிலுள்ள புரதம், கார்போஹைட்ரேட் போன்றவவை உடலுக்கு நல்ல ஆற்றலை தரக்கூடியவையாக உள்ளன. அதேபோல நம்முடைய நரம்புகள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், அதற்கு B12 வைட்டமின் கட்டாயம். இந்த B12 சத்துக்கள் கெளுத்தி மீனில் அடங்கியிருக்கிறது. இதனால் நரம்புகள் வலுவாகும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, கெளுத்தி மீன் பெஸ்ட் சாய்ஸ் எனலாம். ஏனென்றால், 6.1 கிராம் கெளுத்தி மீனில், வெறும் 122 கலோரி மட்டுமே உள்ளதாம். கலோரி குறைந்த மீனாக மட்டுமல்லாமல், கார்போஹைட்ரேட்கள் அதிகமாக இல்லை.. அதுமட்டுமல்ல, இந்த மீனிலுள்ள வைட்டமின் B12, உடல் எடை குறைப்போருக்கு மிகவும் நல்லது என்பார்கள். ரத்தம் அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள். பார்கின்சன் பாதிப்பு உள்ளவர்கள் கெளுத்தி மீன்களை தவறவிடக்கூடாது.
பண்ணை மீன்கள்: ஆனால், பண்ணையில் வளர்க்கப்படும் கெளுத்தி மீன்களில் பல்வேறு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதாக சொல்கிறார்கள். இந்த ரசாயனங்கள், பூச்சிகொல்லிகளை நாம் உட்கொள்ளும்போது, புற்றுநோயை உண்டாக்குவதாக ஆண்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் பண்ணை மீன்களை வாங்கும்போது, ரசாயணம் எதுவும் இல்லாமல் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மீன்களாக பார்த்து வாங்குவது மிகவும் நல்லது.












Click it and Unblock the Notifications