சின்ன வெங்காயம் அவசியம்.. மூலம், நரம்பு தளர்ச்சியை குணமாக்கும்.. சின்ன வெங்காயத்தின் ஹெல்த் சீக்ரெட்
சென்னை: ரத்த மூலம், நுரையீரல் பிரச்சனை, நரம்புத்தளர்ச்சி பாதிப்பு என அத்தனை நோய்களுக்கும், உடனடி தீர்வை தரக்கூடியது சின்ன வெங்காயம்.. உணவில் மட்டுமல்ல, மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத பலனை அள்ளித்தருகிறது சின்ன வெங்காயம். எப்படி தெரியுமா?
100 கிராம் சின்ன வெங்காயத்தில் 72 கலோரிகள் மட்டும்தான் உள்ளன.. ஆனால், கார்போஹைட்ரேட்டுகள்: 16.8 கிராம், சர்க்கரைகள்: 7.9 கிராம், நார்ச்சத்து: 3.2 கிராம், புரதம் 2.5 கிராம், கொழுப்பு 0.1 கிராம், வைட்டமின் C 8 மி கி, வைட்டமின் A 2 மி.கி, கால்சியம் 37 மி.கி, இரும்பு: 1.2 மிகி, பொட்டாசியம் 334 மி.கி, ஃபோலேட் (வைட்டமின் B9) 34 மி.கி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதைத்தவிர, ஃபிளாவனாய்டுகள், குவெர்செடின், சல்பர் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன..

ரத்தம் உறைதல், அடைப்பை நீக்கி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடிய தன்மையும் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.. மண்ணீரல் கோளாறுகளையும் அகற்றுகிறது..
கெட்ட நீரை வெளியேற்றுகிறது
நம்முடைய உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் சக்தி சின்ன வெங்காயத்துக்கு அதிகமாக உள்ளது.. ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தம் உண்டாவதை சின்ன வெங்காயம் தடுக்கிறது.. இதனால் செல்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியும் முன்கூட்டியே தடுக்கப்படுகிறது.
டீ, காபி அதிகமாக சாப்பிட்டு, உடலில் பித்தம் நிறைந்துவிட்டால், 4 சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து, சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். அஜீரணம் மலச்சிக்கல் இருந்தால், நார்ச்சத்து அதிகமான சின்ன வெங்காயத்தை நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட வேண்டும். இளைப்பு, வாதம், பித்தக் கிறுகிறுப்பு, ஈரல் கோளாறு போன்ற உபாதைகளையும் குணமாக்கக்கூடிய சக்தி சின்ன வெங்காயத்துக்கு உண்டு
மூல நோயாளிகளுக்கு மருந்து
மூல நோயாளிகள் தவிர்க்கவே கூடாதது சின்ன வெங்காயம்.. 50 கிராம் வெங்காயச்சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து 15 நாட்களுக்கு குடித்து வரும்போது ரத்த மூலமும் கட்டுக்குள் வரும். அல்லது வெங்காயத்தை துண்டுகளாக்கி, சிறிது இலவம் பிசின், சிறிது கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டாலும் மூலக்கோளாறுகள் நெருங்காது. வெங்காயத்தில் இன்சுலின் நிறைய உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க கூடாது.
நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடை குறைப்போரும் சின்ன வெங்காயத்தை பச்சையாகவே சாப்பிடலாம். இந்த சின்ன வெங்காயத்தின் சாறு, கொழுப்பை கரைக்கக்கூடியது.
நரம்பு தளர்ச்சி பாதிப்பை கொண்டவர்கள், வெறும் சின்ன வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.. ஆண்களுக்கு விறைப்பு தன்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும். காரணம், டெஸ்டோஸ்டிரோனின் அளவை இந்த சின்ன வெங்காயம் அதிகரிக்க செய்வதாக ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளன.
நுரையீரல் ஆரோக்கியம்
சளி, இருமல், காய்ச்சல், மற்றும் நுரையீரலில் நச்சுக்கள், கழிவுகள் இருந்தால் அனைத்தையும் வெளியேற்றும் தன்மை சின்ன வெங்காயத்தின் சாற்றுக்கு உண்டு.. இந்த சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால், அனைத்து சுவாச கோளாறுகளும் சீராகும். அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் தொற்று இருக்கும்.. இவர்கள், வெங்காய சாற்றை தினமும் 3 வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சுத்தமாகும்.
மூட்டு வலி, முழங்கால் வலிக்கு வெங்காய சாற்றில், கடுகு எண்ணெய் கலந்து தேய்க்கலாம். சின்ன வெங்காயத்தில் உள்ள வைட்டமின் E, கண்களுக்கு கூர்மையான பார்வையை தருகின்றன.. இந்த வெங்காய சாற்றில், சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே, மாலைக்கண் நோய் குறைபாடு தீரும். பல் வலி இருந்தாலும், சின்ன வெங்காயத்தை ஒரு துண்டு, வலியுள்ள பல்லில் வைக்கலாம். இதனால் சொத்தை பற்களும் சீராகி, தொற்று இருந்தாலும் நீங்கிவிடும்.
சருமம், தலைமுடி ஆரோக்கியம்
சின்ன வெங்காயத்தில் வைட்டமின் C உள்ளதால் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்த செய்கிறது.. மேலும் இதிலுள்ள செலினியம், ஜிங்க் சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலையும் அதிகரிக்க செய்கிறது.
சின்ன வெங்காயத்தில் வைட்டமின் A,C,K நிறைந்திருப்பதால், இதனை சருமத்துக்கு ஃபேஸ்பேக் போல அரைத்து பயன்படுத்தலாம். முகப்பரு, காயங்கள் இருந்தால், இந்த சாறை தடவக்கூடாது. தலைமுடி ஆரோக்கியத்திலும் சின்ன வெங்காயத்துக்கு பங்கு உள்ளது.. வெறும் சின்ன வெங்காய சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்து வரலாம்.












Click it and Unblock the Notifications