ஆட்டு ரத்தம் ஆரோக்கியம்.. ஆட்டிறைச்சி ரத்தத்தில் இவ்ளோ சத்துக்களா? எடை குறைக்க உதவும் மட்டன் ரத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்டிறைச்சியின் பாகங்கள் அனைத்துமே, ஒவ்வொரு நன்மையை உடலுக்கு தரக்கூடியது. அந்த வகையில் ஆட்டு ரத்தம் நல்லதா? ஆட்டு ரத்தத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன? இதை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பயன்கள் என்னென்ன?

ஆட்டுக்கறியின் ஒவ்வொரு பாகங்களிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால்தான், மட்டனை முழுமையாக தவிர்த்துவிடலாம், ஆரோக்கியம் கருதி மாதம் ஒருமுறையாவது குறிப்பிட்ட அளவில் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

Mutton Blood Aattu ratham weight loss

ஆட்டுக்கறி: அந்தவகையில், ஆட்டுக்கறி நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. சருமத்துக்கு ஆரோக்கியத்தையும் பளபளப்பையும் தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குகின்றன. தெளிவான பார்வை கிடைக்க தூண்டுகோலாகின்றன.

அதேபோல, உடல் சூட்டால் அவதிப்படுகின்றவர்களுக்கு சிறந்த மருந்தாக இருப்பது ஆட்டினுடைய நாக்குப்பகுதி தான். ஆட்டு கொழுப்புகள், இடுப்புப் பகுதிக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. அத்துடன், உடம்பில் எப்பேர்ப்பட்ட வலி, புண்கள் வந்தாலும், அதனை ஆற்றக்கூடிய குணம் இந்த ஆட்டுக் கொழுப்புகளுக்கு உள்ளது.. அம்மை நோய், அக்கி நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக ஆட்டுக் கொழுப்பை சாப்பிடலாம்.

ஆட்டு மூளை: ஆட்டின் மூளை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும். ஆண்களுக்கு ஆண்மை விருத்திக்கும், தாது பலம் பெறுவதற்கும் சிறந்த உணவாக மூளை இருக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். ஆட்டின் கால்களும் எலும்புக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நெஞ்சு சளியை வெளியேற்றும். கால்களுக்கு உறுதி, பலத்தை தரும்.

அந்தவகையில், ஆட்டு ரத்தத்திலும் மிக அதிகமான இரும்பு சத்து உள்ளது.. இதனால் ரத்தசோகை பாதிப்புள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த ஆட்டு ரத்தம்தான்.. இதனால் ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்வதுடன், புதிய ரத்தம் ஊறும்.. மேலும் ஆட்டு ரத்தத்தில் சோடியம், கால்சியம், ஒமேகா-3 ,இரும்பு சத்து , பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

வைட்டமின்கள்: அதேபோல, வைட்டமின்கள், புரோட்டீன் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த ஆட்டு ரத்தத்தில் இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு இதை தருவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அசைவ உணவுகளை சாப்பிட்டால் பொதுவாக எடை அதிகரிக்கும் என்பார்கள்.. ஆனால் ஆட்டு ரத்தப் பொரியல் எடையை குறைக்க உதவி புரிகின்றது.. இந்த ஆட்டு ரத்தத்தில் B வைட்டமின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் புரோட்டீன்களும் நிறைந்துள்ளன..

பெஸ்ட் மருந்து: அதேபோல, மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ஆட்டு ரத்தம் மிகவும் சிறந்த உணவாகும். ஆட்டு ரத்தத்தில் CLA உள்ளதால், இது புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு அமிலம் மற்றும் இது வீக்கத்தை தடுக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+