ஆட்டுக்கறி சாப்பிடறீங்களா? இறைச்சி உறுப்புகளின் நன்மை.. ஆட்டு ரத்தம், ஆட்டின் கால்களின் ஹெல்த் பலன்
சென்னை: மட்டனின் சதைப்பகுதியை விரும்பி சாப்பிடும் அளவுக்கு பலரும், அதன் பாகங்களை விரும்பி வாங்குவதில்லை.. ஆனால், மட்டனின் உறுப்புகளில் உள்ள சத்துக்கள், சதைப்பகுதியைவிட அதிகமாம்.. இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், பருமன் உள்ளவர்கள் மட்டனை அதிகமாக சாப்பிடக்கூடாது.. அதேசமயம், ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஆட்டு இருதயம், ஆட்டு ரத்தம் போன்றவற்றை சாப்பிடுவதால் மருத்துவ நன்மைகள் நிறைய உள்ளன. ஆட்டின் விதைப்பையை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா? இதுகுறித்து மருத்துவ ஆய்வுகள் என்னென்ன சொல்கிறது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சிக்கன், மட்டன் என எதுவானாலும், அதன் உறுப்பு இறைச்சிகளில் இரும்புசத்து அதிகமாக உள்ளதாம். அதேபோல கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளதாம்.. எனவே, குழந்தைகள், பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியதாகும்..

குறிப்பாக மாதவிடாய் காலத்தில் அதிகமான உதிரப்போக்கு ஏற்படும்போதும், 40 வயதுக்கு மேற்பட்ட மெனோபாஸ் காலத்திலும் வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
ரத்தசோகை
உறுப்பு இறைச்சிகளில் உயர்தர புரோட்டீன் உள்ளதால், தசை வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் உதவுகின்றன.. மூளை, தசை, கல்லீரல், எலும்பு போன்றவற்றில் வைட்டமின் B12, ஃபோலெட் சத்து, இரும்பு சத்து, புரதச்சத்து என மொத்தமாக உள்ளதால், உணவில் தவிர்க்க வேண்டாம் என்கிறார்கள்.
உறுப்பு இறைச்சிகளில் ப்யூரின் அதிகமாக இருப்பதால் யூரிக் அமிலத்தை ஏற்படுத்துகிறது.. இதன்காரணமாக, கீல்வாதம் பாதிப்பு வரலாம்.. ஆனால், கீல்வாதம் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், இதனை தவிர்க்கலாம்.
ஆட்டு ரத்தம்
உதாரணத்துக்கு ஆட்டு ரத்தத்தை எடுத்துக் கொண்டால், சோகை நோய் உள்ளவர்களுக்கு ரத்த விருத்தியை தருகிறது, கால்சியம், ஒமேகா-3 ,இரும்பு சத்து , பாஸ்பரஸ், வைட்டமின்கள், புரோட்டீன் , B12 வைட்டமின், உள்ளதால், வளரும் பிள்ளைகளுக்கு தரலாம். பொறியல் போல செய்து சாப்பிடும்போது உடல் எடை குறையும். இதிலுள்ள B வைட்டமின் கொழுப்பை எரிக்க தூண்டுகிறது.
டயட்டில் உள்ளவர்களும் ஆட்டு ரத்தம் சாப்பிடலாம். அனைத்துக்கும் மேலாக, புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு அமிலம் ஆட்டு ரத்தத்தில் உள்ளது.
ஆட்டின் இதயம்
ஆட்டின் இதயத்தில், Q10 என்ற சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால், இதயத்துக்கு உறுதி தருகிறது. வைட்டமின் E, B உள்ளது, உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதயம் படபடப்பு இருந்தால் ஆட்டின் இதயத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனால் தமணியும் பாதுகாக்கப்படும்.
கிட்னி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு உதவக்கூடியது சுவரொட்டி.. இதனால் கிட்னியில் தொற்றுக்களும் அண்டாது.. கிட்னியில் கற்கள் நெருங்காது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்துதான் ஆட்டின் சுவரொட்டி.
எனினும், இது எடையை அதிகரிக்கக்கூடியது.. டயட்டில் இருப்பவர்கள் இதை தவிர்க்கலாம்.. அதேபோல, ரத்த ஓட்டத்தில் பிரச்சனை, புரோட்டீன், கால்சியம பாதிப்பு இருந்தாலும், சுவரொட்டியை தவிர்க்கலாம்.
ரத்த அணுவின் எண்ணிக்கை
மண்ணீரலிலும், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின் B12 போன்ற சத்துக்கள் உள்ளன. ரத்த அணுவின் எண்ணிக்கைகளும் அதிகமாகும்..
ஆட்டின் கால்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்களின் நிறைவாக இருக்கிறது.. கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலமும் உள்ளதால், கொலஸ்ட்ரால் அளவு மேம்படுகிறது . குறைந்த கலோரி, நிறைய புரோட்டீனும் உள்ளதால், எடை இழப்புக்கு உதவுகிறது.. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்து, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.












Click it and Unblock the Notifications