சம்மர் வந்தாச்சு.. வியர்வை கொட்டோ கொட்டுனு கொட்டுதா.. குறைக்க எக்ஸ்பர்ட் சொல்லும் ஈசி டிப்ஸ்
சென்னை: நாம் சாப்பிடும் உணவுக்கும் வியர்வைக்கும் தொடர்பு இருப்பதாகவும் சில உணவு பழக்கத்தை கடைப்பிடித்தால் அதிகளவில் வியர்த்து கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம் என்றும் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லாவ்னீத் பத்ரா கூறியுள்ளார்.
கோடைக்காலம் வந்தாலே பலருக்கும் வீட்டை விட்டு வெளியே செல்வது என்றாலே வேப்பங்காய் போல கசக்கும். வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வந்தால் அதுவும் மதிய நேரங்களில் போய்விட்டால் அவ்வளவுதான்.. தனியாக வியர்வையில் ஒரு குளியல் போட்டது மாதிரி ஆகிவிடும்.

சட்டை எல்லம் தொப்பென்று தண்ணீரில் முக்கியது போல கூட சிலருக்கு வியர்வை கொட்டும். இதனால், விரைவாக சோர்வும் ஏற்பட்டு விடும். மதிய நேரங்களில் தர்ப்பூசணி, இளநீர் என குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களை தேடி அலைந்து சாப்பிட்டு கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், வியர்வையால் உடல் முழுக்க ஏற்பட்ட ஒரு அசவுகரியம் வீட்டிற்கு போய் குளிக்கும் வரை தீராது.
இதனால், பலரும் இரண்டு முறை குளிப்பது என பல வழிகளை கையாள்கிறார்கள். நமது உணவு பழக்க வழக்கம் கூட எந்த அளவு வியர்வை ஏற்படுகிறது என்பதை தீர்மானிக்கும் ஒரு காரணி என்பது பலருக்கும் தெரியாது.. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லாவ்னீத் பத்ரா சில உணவு பொருள் மூலமாகவும் கோடை முழுவதும் அவஸ்தையை ஏற்படுத்தும் வியர்வையை எதிர்த்து போராடலாம் என்கிறார். அவர் கூறிய சில டிப்ஸ்களை பார்க்கலாம்..
* வெயில் காலத்தில் வியர்வை மூலமாக அதிக நீர் இழப்பு ஏற்படும். எனவே, அதிக தண்ணீர் குடிப்பது நல்ல யோசனைதான். குளிர் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்து, பட்டர் மில்க், ஜல்ஜீரா போன்ற பானங்களை குடிக்கலாம். வெறுமனே தண்ணீர் மட்டும் குடிக்காமல் இதுபோன்ற நீர் ஆகாரங்களை எடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும் என்பதோடு, நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.
* காஃபியை தவிர்க்கலாம். புத்துணர்ச்சி பெறுவதற்கு காஃபி பலருக்கும் தேவைப்படலாம். ஆனால், ஒரே ஒருமுறை மட்டும் கொஞ்சமாக காபி குடிப்பது நல்லது. காஃபின் - அதிக வியர்வை ஏற்பட வழிவகுக்கும். குறிப்பாக உள்ளங்கை, கால்கள், அக்குள் போன்ற இடங்களில் அதிக வியர்வை ஏற்படுவதை இது தூண்டும்.

* காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவு பொருளில் அதிக காரம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். காரமான உணவு பொருளை சாப்பிட்டால் உடனடியாக வியர்வை ஏற்படும். ஏனெனில், வெப்பத்திற்கு எதிர்வினையாற்றுவது போலவே காரமான பொருளை சாப்பிடும் போதும் உங்கள் உடல் செயல்படும்.
* வியர்வை எதிர்ப்பு பொருட்கள் என சொல்லப்படும் Antiperspirants-களை பயன்படுத்தலாம். ஏனெனில் இது வியர்வையை கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, இது அதிக வியர்வை ஏற்படுவதை கொஞ்சம் குறைக்கும்.
* அமைதியை கடைபிடிக்க வேண்டும். அச்சப்படும் போதும் மன உளைச்சல் அடையும் போதும் கூட வியர்க்கும். உங்கள் உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் நீங்கள் பயப்படும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது செயல்படுகின்றன. இது உங்கள் உடலை அதிகமாக வியர்க்கச் செய்கிறது. உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் செயல்பட தொடங்குகின்றன. எனவே அதிக வியர்வையை தவிர்க்க டென்ஷன் இன்றி அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications