அவரு தான் இவரா? டோனிக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் யார் தெரியுமா? ஆஹா இது தெரியாம போச்சே
சென்னை: ஐபிஎல் போட்டியில் கோப்பை வென்ற கையோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் டோனி. இவர் தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது நடந்து முடிந்த 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்றது.

இதனால் டோனி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் தான் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியானது. அதாவது டோனிக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்பது தான் ரசிகர்களின் மனதை வாட செய்தது.
அதாவது ஐபிஎல் போட்டியின்போதே டோனி காயத்துடன் தான் விளையாடினார். இடது முழங்காலில் கட்டுப்போட்டபடி அவர் பங்கேற்றார். இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றி தனது பணியை சிறப்பாக செய்த பிறகு டோனி இறுதி போட்டி நடந்த அகமதாபாத்தில் இருந்து நேரடியாக மும்பை சென்றார். கோகிலாபென் மருத்துவமனையில் டோனிக்கு மூட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
இந்நிலையில் தான் டோனிக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது டோனிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் பெயர் டின்ஷா பார்திவாலா. இவர் பிரபல விளையாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். கார் விபத்தில் சிக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்துக்கும் இந்த டாக்டர் தான் அறுவை சிகிச்சை செய்தார். இதுதவிர பல இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார்.
அதோடு பேட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப், குத்துச்சண்டை வீரர் அகில் குமார், மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார் மற்றும் யோகேஷ்வர் தத், குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன், பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, ரக்பி கேப்டன் ஹிரிஷி பென்ட்சே ஆகியோருக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.
மேலும் டின்ஷா பார்திவாலா பிசிசிஐயின் மருத்துவ குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். ஆர்த்ரோஸ்கோபி, ஸ்போர்ட்ஸ் எலும்பியல் மற்றும் தோள்பட்டை சர்வீஸ் இயக்குனராகவும், விளையாட்டு மருத்துவ மையத்தின் (Centre of Sports Medicine) தலைவராகவும் உள்ளார். இவர் எம்பிபிஎஸ், எம்எஸ்(எலும்பியல்), டிஎன்பி (எலும்பு மருத்துவம்) படிப்புகளை முடித்துள்ளார். டாக்டராக 22 ஆண்டு அனுபவம் கொண்ட இவர் ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய நான்கு மொழிகளைப் பேசும் திறன் கொண்டவர்.
தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அதோடு இந்திய ஆர்த்ரோஸ்கோபி அசோசியேஷன் மற்றும் ஷோல்டர் மற்றும் எல்போ சொசைட்டி ஆஃப் இந்தியா ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2009 ல் ISAKOS ஜான் ஜாய்ஸ் விருது பெற்றார்.
இவர் ஆலோசனை கட்டணமாக ரூ.2,500 பெறுவதாக கூறப்படும் நிலையில் அறுவை சிகிச்சைக்கான கட்டணம் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இருப்பினும் Quora-வில் ஒருவர், டாக்டர் டின்ஷா பார்திவாலாவால் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.4 லட்சம் வரை செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்னொருவரோ ரூ.2 லட்சம் என தெரிவித்துள்ளார். இதனால் டோனியின் அறுவை சிகிச்சைக்கான செலவு, மருத்துவ கட்டணம் பற்றிய விபரம் வெளியாகவில்லை.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications