எலும்பு முறிவை குணமாகும் பிரண்டையின் பல்வேறு பயன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரண்டை கொடி வகையை சேர்ந்ததாகும், வெப்பமான இடங்களில் வளரக்கூடியவை. இதில் இரண்டு வகை உண்டு. ஆண் பிரண்டை கணு 2-3 அங்குலமும், பெண் பிரண்டை 1-1 1/2 அங்குலமும் இருக்கும். பிரண்டைக்கு வச்சிரவல்லி என்ற பெயரும் உண்டு. இது ஒரு ஆயுர்வேத மூலிகை, மிக முக்கியமாக எலும்பு முறிவை குணமாக்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் பசியைத்தூண்ட கூடியது, கழுத்து வலி, முதுகு வலி, முட்டு வலி போன்ற பல்வேறு வலிகளுக்கு நல்ல நிவாரணியாக செயல்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் வைட்டமின் சி, இ, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு (ketosteroids), ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது. பிரண்டை பல்வேறு நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது. பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் என்று உணவில் சேர்த்துகொண்டுவந்தால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல பலன்களை தரும்.

முறிந்த எலும்பு விரைவில் கூடுவதற்கு : பிரண்டையின் மிக முக்கிய மருத்துவ பயன்களில் ஒன்று, விபத்துகளில் ஏற்படக்கூடிய எலும்பு முறிவை விரைவில் இணைக்கக்கூடிய மிக சிறந்த ஆற்றல் உள்ளது. உடைந்த எலும்புகளில் புதிய திசுக்களை உருவாக்கி, விரைவில் சீரமைக்க உதவுகிறது. பிரண்டையின் வேரை நன்கு உலர்த்தி, பொடியாக்கி, வெந்நீரில் குழைத்து, பற்று போட்டுவந்தால், முறிந்த எலும்புகள் விரைவில் கூடும். மூட்டுவீக்கம், மூட்டு தேய்மானம் ஆகிய பிரச்சனைகளுக்கு, பிரண்டை சாரை வீக்கமுள்ள மூட்டுகளில் தடவி வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக வீக்கம் குறையும், மேலும் பிரண்டை சாறுடன், பசும்பால் சேர்த்து குடித்துவந்தால், உடைந்த எலும்புகள் சீக்கிரம் குணமடையும். உணவில் துவையல், சட்னி ஆகிய வகைகளில் உணவில் சேர்த்து வர எலும்புகளுக்கு வலிமையையும், அடர்த்தியும் தந்து, பொதுவான எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

Multiple Medicinal Uses and Benefits of Pirandai Plants

சதை பிரளுதல், வீக்கம் குறைய: நாம் நடக்கும்போது எதிர்பாராமல் கால் சதை பிரளுதல்அல்லது தீடீரென்று கீழே விழுந்து சதை பிரளுதல், வலி மற்றும் வீக்கம் ஏற்படும். அதற்கு பிரண்டை சாறுடன் புளி, உப்பு சேர்த்து சுண்டக்காய்ச்சி, அதை வலி வீக்கம் உள்ள இடத்தில் பற்று போட்டுவந்தால், விரைவில் வீக்கம் குறைந்து, வலியும் குணமாகிவிடும். மேலும் காது வலி, காதில் சீழ் வடிதலுக்கு, பிரண்டையை நன்கு தீயில் வதக்கி, சாறை எடுத்து காதில் சிறு துளிகள் விட்டுவந்தால், வலி மற்றும் சீழ் வடிதல் நின்றுவிடும்.

Multiple Medicinal Uses and Benefits of Pirandai Plants

உடல் எடை குறைய: பிரண்டை தண்டுடன் மாங்காய் சேர்த்து அரைத்து உணவில் சாப்பிட்டுவர, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றது. பிரண்டை உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, இடுப்பு, மற்றும் தொடை பகுதியில் இருக்கும் அதிகப்படியான சதையை குறைக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது, ஏற்படும் உடல் வலி நீங்க, தொடர்ந்து பிரண்டையை உணவில் சேர்த்து கொண்டால், வலியும் குறைந்து, எலும்புகளையும் வலிமைப்படுத்துகிறது. மேலும் அஜீரண கோளாறு, வயிறு பொருமலுக்கு, வயிற்றிலுள்ள புழுக்கள், மற்றும் வாயு தொல்லையும் நீங்கும்.

ஆண்மை குறைவுக்கு, பிரண்டை உப்பு : ஆண்மை குறைவு நீங்க, பிரண்டைலிருந்து செய்யப்படும் பிரண்டை உப்பு, மற்றும் சாதிக்காய் பொடி ஆகிய இரண்டும் சம அளவில் எடுத்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து 3 வேலை தொடர்ந்து ஒரு வாரம் வரை சாப்பிட்டுவந்தால், ஆண்மை பெருகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+