ஆட்டு சுவரொட்டி யாரெல்லாம் சாப்பிடக் கூடாது.. மட்டன் மண்ணீரலின் ஸ்பெஷாலிட்டி.. ரத்தம் விருத்தியாகும்
சென்னை: ஆட்டு மண்ணீரல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? சுவரொட்டியின் முழு சத்துக்களும் உடலில் கிடைக்க வேண்டுமானால், சமையலில் எப்படி சமைத்து சாப்பிடலாம்? ஆட்டு மண்ணீரல் சாப்பிடுவது அனைவருக்குமே நன்மையை தருமா? அல்லது தீமைகள் ஏதேனும் உள்ளதா? இதிலுள்ள முக்கிய சத்துக்கள் என்னென்ன? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், செலினியம் சத்துக்கள் நிறைந்த இம்மண்ணீரலை வதக்கி சாப்பிடலாம். ஹார்மோன் குறைபாட்டினால் அவதிப்படுபவர்கள், வைட்டமின் C நிறைந்த, சுவரொட்டியை வாரமொருமுறை சாப்பிட்டு வரலாம்.. இதனால் நீரிழிவு அபாயமும் அணடாது.

ஆட்டு மண்ணீரல்
இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின் B12 என எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது ஆட்டு மண்ணீரல். ரத்தசோகையால் அவதிப்படுபவர்கள் அல்லது மாதவிலக்கின்போது அதிக ரத்தப்போக்கு உள்ள பெண்கள் அல்லது 40 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியது ஆட்டு மண்ணீரல் ஆகும். தினமும் வெறும் 50 கிராம் சாப்பிட்டு வந்தாலே, அன்றைய தினத்துக்கு தேவைப்படும் இரும்பு சத்தினை பெற்றுவிடலாம். புதிய ரத்தமும் ஊறிவரும். ரத்த அணுவின் எண்ணிக்கைகளும் பெருகும்.
எலும்பு தொந்தரவுகள், முடக்குவாதம் பிரச்சனை உள்ளவர்கள் வாரம் ஒருமுறை ஆட்டு மண்ணீரல் செய்து சாப்பிடலாம்.. பெண்களின் சரும ஆரோக்கியத்துக்கும் சுவரொட்டியே மருந்தாகிறது. வளரும் குழந்தைகளுக்கு சுவரொட்டியை வறுத்து தந்தால், மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். வல்லாரை கீரையை போலவே, நினைவுத்திறன் தரக்கூடியது இந்த ஈரல்.
சுவரொட்டி சத்துக்கள்
சுவரொட்டியை அதிக எண்ணெய்யில் பொரித்தும் வறுத்தும் சாப்பிடாமல், சூப் போல தயாரித்து உப்பு இல்லாமல் குடிப்பது சிறப்பாகும். அல்லது தீயில் வாட்டியெடுத்து சாப்பிடலாம். ஆனால், அதன்மீதுள்ள வெண்மை நிற தோல்லை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும்.
அல்லது சுவரொட்டியை வெட்டாமல் முழுதாகவே எடுத்து, நன்றாக கழுவி கொள்ள வேண்டும். பிறகு உப்பு, மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து அடுப்பில் வைத்து வாட்டியெடுத்து நறுக்கி சாப்பிடலாம். இதனால் சத்துக்கள் வீணாகாது.
யார் யாரெல்லாம் சாப்பிட கூடாது
ஆட்டு சுவரொட்டி சாப்பிடுவதால் சில தீமைகள் இருக்கின்றன. முக்கியமாக கொழுப்புசத்துக்கள் அதிகமாக நிறைந்திருப்பதால், இருதயம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம்.. ரத்த குழாய்களிலும் அடைப்பு ஏற்படலாம்.
சிறுநீரக நோயால் அவதிப்படுபவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த சுவரொட்டி.. இதனால் கிட்னியில் தொற்று இருந்தாலும் விடுபடலாம் என்றாலும், அதிக புரோட்டீன் இருப்பதால், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்லதல்ல. சுவரொட்டியை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது
அதேபோல, ஆட்டு சுவரொட்டி சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அலர்ஜி ஏற்படலாம். சுவரொட்டி செரிமானத்துக்கு கடினமானதாகும்.. எனவே, செரிமானமாக தாமதம் ஆகும்..
சுவரொட்டியில் அதிக அளவில் கொழுப்பு உள்ளதால், உடல் எடை அதிகரித்துவிடும்.. எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆட்டு சுவரொட்டியை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல, ரத்த ஓட்டத்தில் பிரச்சனையில் உள்ளவர்களும், உடலில் நிறைய புரோட்டீன், கால்சியம உள்ளவர்களும், ஆட்டு சுவரொட்டியை அதிகமாக சாப்பிட கூடாது என்பார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications