Vastu: இந்த செடிகளை மறந்தும் கூட வீட்டில் வளர்க்க வேண்டாம்! துரதிருஷ்டம்தான் வந்து சேரும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாஸ்து சாஸ்திரத்தின்படி இந்தெந்த செடிகள் எல்லாம் வீட்டில் இருந்தால் துரதிருஷ்டம் வந்து சேரும் என நம்பப்படுகிறது. அவை என்னென்ன செடிகள் என்பதை பார்க்கலாம். இந்த செடிகளை வீட்டிற்கு அருகிலும் வளர்க்கவே கூடாது என்கிறார்கள்.

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒவ்வொரு வீட்டின் அமைப்பு, திசை, வீட்டில் வைக்கக் கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகளால் நிம்மதியான வாழ்க்க்கையை கொடுக்கின்றன. அழகுக்காக வீட்டில் வைக்கப்படும் ஒரு சில செடிகள் கூட வாஸ்துவால் நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி நிம்மதியை கெடுத்துவிடுகின்றன.

vastu plants

எனவே வீட்டில் செடி வைப்பதில் கூட கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சில செடிகளை வீட்டில் வைத்தால் எதிர்மறை சக்தி உருவாகும், வீட்டில் நிம்மதி, சந்தோஷம் காணாமல் போய்விடும். இந்த குறிப்பிட்ட செடிகளை வீட்டில் மட்டுமில்லை, அலுவலகங்களில் கூட வைக்கவே கூடாது.

ரோஜா செடிகளை தவிர முட்கள் அதிகம் இருக்கும் சப்பாத்திக்கல்லி உள்ளிட்ட செடிகளை வீட்டில் வைக்கவே கூடாது. அது போல் போன்சாய் மரங்களை வீட்டிற்குள்ளே வைக்கக் கூடாது. வேண்டுமானால் வீட்டிற்கு வெளியே வைத்துக் கொள்ளலாம்.

அது போல் புளியமரம், மருதாணி செடி ஆகியவை தீயசக்திகள் குடியிருக்கும் மரம் என்கிறார்கள். இவற்றை வீட்டில் வைக்கவே கூடாதாம். இது கெடுதல்களை ஏற்படுத்தும். அது போல் கருவேல மரங்களை வீட்டில் வளர்க்கவே கூடாது. வீட்டில் மட்டுமல்ல, இவை நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால் அதை திறந்தவெளியிலும் வைக்கக் கூடாது.

அது போல் பருத்திச் செடிகள், பனை மரங்களையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. இந்த செடிகள் நம் வீட்டை சுற்றிலும் இருக்கவே கூடாது. இவை துரதிருஷ்டத்தையே தரும்.

அது போல் பால் வடியும் எருக்கம் செடி, அலமண்டா உள்ளிட்ட செடிகளையும் வீட்டில் வளர்ப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். அதிர்ஷ்ட மூங்கில் செடி வீட்டிற்கு நல்லது என்றாலும் காட்டு மூங்கில் செடிகளை வீட்டிற்குள் வளர்க்கவே கூடாது. அது போல் அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட செடிகளையும் வீட்டிற்குள்ளேயும் வீட்டிற்கு அருகேயும் வளர்க்கவே கூடாது.

வீட்டின் வெளிப்புற சுவர்களில் படரும் வகையில் கொடிகளை வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். சுவரிலும் விரிசலை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+