மிளகோடு தேனை கலந்து சாப்பிட்டால் இவ்ளோ சத்துக்களா? தேனில் ஊற வைத்த மிளகு.. வாவ், சீராகும் செரிமானம்
சென்னை: வெறும் 2 பொருட்கள் நம்முடைய சமையலறையில் இருந்தாலே செரிமான கோளாறு முதல் சுவாச கோளாறுகள் வரை எளிதாக தீர்த்துவிடலாம்.. தேனும், மிளகும் ஊற வைத்து சாப்பிடுவதால், பக்கவிளைவுகள் இல்லாத, இயற்கையான முறையில் ஆரோக்கிய நன்மைகளை நம்மால் பெற முடியும்.. எப்படி தெரியுமா?
மிளகு அற்புதமான உணவுப்பொருளாகும்.. மக்னீசியம், இரும்பு, வைட்டமின் K, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பி உள்ளன. அஜீரணக்கோளாறுகளை தீர்ப்பதில் முதன்மையானது மிளகுதான். உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவதும் இந்த மிளகுதான்.

மிளகில் உள்ள பைப்பரின் என்ற சேர்மம், நம்முடைய உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. இந்த மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்..அதேபோல, தேனை பொறுத்தவரை, வைட்டமின் A, B, B2, B3, B5, C, E, J சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டுள்ளது. வாய்வு தொல்லையிலிருந்து நீங்குவதோடு, வயிற்று உப்புசம் குறைந்து, ஒருவித புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி மற்றும் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.
மிளகு தூள்: இப்படி தேன், மிளகு இரண்டிலுமே ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது, கூடுதல் நலனை பெற்றுத்தரும். அந்த வகையில், மிளகுத் தூளில் தேன் கலந்து சாப்பிடலாம். அதேபோல, முழு மிளகை தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். சளி, இருமல், காய்ச்சல், தலைபாரம் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் இருந்தால், இரவு தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் தேனில், அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட்டால், நெஞ்சு சளி கரைந்து வெளியேறும்.. அல்லது ஒரு வாணலியில் சிறிது நெய், மிளகு இரண்டையும் சேர்த்து வறுத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி குடிப்பதாலும் நிவாரணம் கிடைக்கும்.
கெட்ட கொழுப்புகள்: அதேபோல வாயு பிரச்சனை, அஜீரணம், செரிமான கோளாறுகள் இருந்தால், மிளகுத்தூளை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.. அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள், மிளகை தண்ணீரில் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம். இதனால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.. அத்துடன் இதயத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்களும் அண்டாது.
மிளகில் உள்ள உட்பொருட்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.. மிளகை தேனுடன் சாப்பிட்டு, உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அதேபோல, 1 ஸ்பூன் தேனில் 5 மிளகு பொடியை குழைத்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடுமாம்.
சுவாச கோளாறுகள்: அதேபோல, 10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். இதனாலும் சுவாச கோளாறுகள் நீங்கும். அதேபோல, மிளகு + தேன் இரண்டையும் வேறு விதமாக பயன்படுத்தலாம். ஒரு ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் தேன் ஊற்றிக் கொண்டு, அதில் முழு மிளகையும் போட்டு வைக்க வேண்டும்.. 3 வாரங்கள் அப்படியே வைத்துவிட்டு, 4வது வாரம் பாட்டிலை திறந்து பார்த்தால், மிளகு நன்றாக தேனில் ஊறியிருக்கும்.. மிளகின் காரத்தன்மையும் முற்றிலும் நீங்கி தித்திப்பு சுவை கலந்திருக்கும். உள்ளுறுப்புகள்: இதில், வெறும் வயிற்றில் நான்கைந்து மிளகு எடுத்து, கடித்து சாப்பிடுவதால், வாதம், பித்தம், கபம் மூன்றும், உடலில் சம நிலையில் நிலைத்திருக்கும். சருமம் ஆரோக்கியமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியும், ஆற்றலும் கிடைக்கும். உள்ளுறுப்புகள் அத்தனையும் சுத்தமாகும். முழங்கால், மூட்டு வலிகள் நீங்கும்.. ரத்தநாளங்களில் அடைப்பு இருந்தாலும் சரியாகிவிடும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications