இயற்கை மருத்துவ தினம்! அடுப்பில்லாமல் சமைக்காமல் 1200 டிஷ்! அசத்திய அரசு யோகா மருத்துவர்கள்!
சென்னை: யோகா இயற்கை மருத்துவ தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 18-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் காந்தி ஜெயந்தியையொட்டி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சார்பில் விழா தொடங்கப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த விழா நடந்தது. Nature Cure Fest என்ற தலைப்பில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதையடுத்து 3000-க்கும் மேற்பட்டோர் Go Veg Do Yoga என்ற யோகா செய்தனர். 22 யோகா மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மருத்துவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த விழாவின் முக்கிய நோக்கமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுகளை அடுப்பில்லாமல் எண்ணெய் இல்லாமல் சமைக்காமல் இயற்கையான முறையில் காய்கறிகளையும் பழங்களையும் எப்படி சமைக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நிறைய உணவுகளை சமைக்காமலேயே வைத்திருந்தோம்.

அதிலும் காலை சிற்றுண்டி முதல் மாலை நேர நொறுக்குத் தீனி, இரவு நேர சாப்பாடு வரை அனைத்தையும் அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் செய்யலாம் என்பதை மக்களக்கு தெரியப்படுத்தினோம். இந்த நிகழ்ச்சியில் கண் மருத்துவ முகாம், முக பரிசோதனை, நாக்கு பரிசோதனை, நாடி துடிப்பு உள்ளிட்டவையுடன் இயற்கை மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டது.

மார்பக புற்றுநோயை கண்டறியும் வகையில் மேமோகிராம் ஸ்கிரீனிங்கும் நடந்தது. இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளையும் கண்காட்சிக்காக வைத்திருந்தோம்.

1200 வகையான இயற்கை உணவுகளை பார்த்த மக்கள், சமைக்காமலேயே இத்தனை சுவையாக கொடுக்க முடியுமா என வியந்தனர். இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வந்திருந்தார்.

அவர் பேசுகையில், "இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்வதால் வாழ்வியல் மாற்றங்களை கொண்டு வந்து நோயில்லாமல் வாழலாம். மருத்துவமனைகளுக்கே செல்லாமல் நோய் இல்லாமல் வாழலாம். இந்த இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களை சென்றடைய வேண்டும்" என்றார். ஒவ்வொரு உணவையும் சுவைத்து பார்த்தார். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நிறைய கொண்டு வர வேண்டும் என்றார். ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவமே சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இயற்கை மருத்துவம் எந்தளவுக்கு நோய்க்கான தீர்வாக இருக்கும் என்ற நிறைய பேப்பர் பிரசென்டேஷன் கொடுத்திருந்தார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், ஐடி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்டவைகளில் ஒவ்வொரு நாளும் நடத்தப்படும். இதன் மூலம் மக்கள் நோயில்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் எண்ணமாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications
