சமையல் கேஸ் தட்டுப்பாடா? டயட்டுக்கு நோ எக்ஸ்க்யூஸ்! பேலியோ இருக்கே! 250 ரூபாய் போதும்!
சென்னை: சமையல் கேஸ் தட்டுப்பாட்டால் டயட்டை கடைபிடிக்கமுடியவில்லை என சாக்கு போக்கு சொல்லாமல் பேலியோவை தொடரலாம் என மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஹரிஹரன் என்பவர் கூறியிருப்பதாவது: "அடுப்பு எரியவில்லை, அதனால் டயட் போச்சு" என்று இனி சாக்குப்போக்கு சொல்லத் தேவையில்லை. சமையல் எரிவாயு இல்லாமலே ஆரோக்கியமான பேலியோ உணவுகளை நாம் உட்கொள்ள முடியும்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு!

இதோ உங்களுக்கான சில எளிமையான வழிகள்:
காலை உணவு (Breakfast)
🔹 பாதாம்: 60-70 பாதாம் பருப்புகளை ஊறவைக்காமலே பச்சையாக அப்படியே உண்ணலாம்.
🔹 புல்லட் புரூப் காபி: எலக்ட்ரிக் கெட்டில் (Electric Kettle) இருந்தால் பிளாக் காபி தயார் செய்து, அதில் 30 கிராம் வெண்ணெய் அல்லது நெய் கலந்து பருகலாம்.
🔹 மாற்று: பாதாமுக்கு பதிலாக ஒரு முழு தேங்காயை துருவி அல்லது துண்டுகளாக அப்படியே உண்ணலாம்.
மதிய உணவு (Lunch)
🔹 Cheese: சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் இரண்டு க்யூப் சீஸ் (50g Cheese) அப்படியே சாப்பிடலாம்.
🔹 Natural Fillers: இதனுடன் வீட்டிலிருந்தே கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டம்ளர் கெட்டியான மோர் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவு உணவு (Dinner - No-Gas Options)
சமையல் எரிவாயு இல்லாமலே கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை முயற்சி செய்யலாம்:
1️⃣ முட்டை: ஆன்லைனில் ₹250-க்கு கிடைக்கும் Electric Egg Boiler ஒரு வரப்பிரசாதம். இதில் 4-5 முட்டைகளை எளிதாக வேகவைக்கலாம். (அல்லது கெட்டிலில் வேகவைக்கலாம்).
2️⃣ பனீர்: இண்டக்ஷன் ஸ்டவ் (Induction) இருந்தால், 5 நிமிடத்தில் 200g பனீரை உப்பு, மிளகாய்ப் பொடி தூவி வறுத்து சாப்பிடலாம்.
3️⃣ நவீன கருவிகள்: Air Fryer அல்லது Oven இருந்தால் சிக்கன், மீன் போன்ற இறைச்சி வகைகளை சமைக்கலாம்.
4️⃣ OPOS முறை: பிரஷர் குக்கர் பயன்படுத்தி மிகக் குறைந்த நேரத்தில் சமைக்கும் முறையைப் பின்பற்றலாம்.
ப்ரோ டிப்: வீட்டில் இட்லி சமைக்கும் போது, இட்லி தட்டிற்கு அடியில் தண்ணீர் கொதிக்கும் போதே முட்டைகளையும் உள்ளே போட்டு வேகவைத்து எரிபொருளை மிச்சப்படுத்தலாம்!
இடையில் பசி எடுத்தால் (Snacks)
✅ உப்பிட்ட லெமன் ஜூஸ்
✅ கொய்யாப்பழம்
✅ கீரை ஸ்மூத்தி
✅ பிஸ்தா பருப்புகள்
ஆரோக்கியமான வாழ்விற்கு தேவை திடமான முடிவு மட்டுமே, அடுப்பு அல்ல! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications