மாத்திரையை விடுங்க.. பன்னீர் திராட்சையை எடுங்க.. அனீமியா விலகும்.. வெயிட் லாஸுக்கு கருப்பு திராட்சை
சென்னை: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் முக்கியமானது பன்னீர் திராட்சை.. இந்த பழம் தரும் அதிசய நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மற்ற திராட்சை வகைகளைவிட பன்னீர் திராட்சையில்தான் அதிக சத்துக்கள் இருக்கிறதாம். நம்ம ஊரிலேயே தாராளமாக விளையக்கூடிய, கொட்டையுடன் இருக்கும் இந்த பன்னீர் திராட்சையில், வைட்டமின் C , B1, B2, B3, B6, B12, BC, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து என சத்துக்கள் நிறைந்திருக்கிறதாம்.

உடல் சோர்வு: இதிலிருக்கும் வைட்டமின் A, C சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூண்டுகிறது.. உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் திராட்சையில் உள்ளதால், நீர்ச்சத்து கிடைப்பதுடன், உடல் சோர்வும், களைப்பும் ஏற்படாது.
இது எல்லாவற்றையும்விட "டேரோஸ்டில்பேன்" என்ற உட்பொருள் உள்ளதுதான், இந்த பன்னீர் திராட்சையின் ஸ்பெஷாலிட்டியாகும்.. இதன் பணி என்னவென்றால், நம்முடைய உடலிலுள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, கொழுப்பின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது..
உடல் எடை: அதனால், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பன்னீர் திராட்சை ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆகும். இதைத்தவிர, நீர்ச்சத்து நிறைந்த பழம் என்பதால், ஜீரணம் சிறப்பாக நடக்கும்.. கெட்ட நீரை வெளியேற்றுகிறது.. குடல் ஆரோக்கியமும் தழைக்கும்.. உடல் சூட்டையும் குறைக்கிறது.. தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளவர்களுக்கு அருமருந்தாகிறது.
பித்தம் அதிகமாக உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள், அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள், இந்த பன்னீர் திராட்சை பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள், இந்த பழத்தினை தவறாமல் சாப்பிட வேண்டும்.
திராட்சை கொட்டைகள்: பன்னீர் திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்துக்கள் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்கிறார்கள்.. அதிலும் பெண்களின் மார்பக புற்றுநோய் செல்களின் அழிக்கும் தன்மை இந்த பழத்துக்கு உள்ளதாம்.. இதன் கொட்டையுடன் திராட்சையை அரைத்து, சாறு எடுத்து குடித்துவந்தால், மஞ்சள் காமாலையின் தீவிரம் குறையுமாம். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம், நரம்பகள் பலப்படும்.
ரத்தக்குழாயில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு.. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலுக்கு இந்த பழம் நல்ல மருந்தாகும்.. காரணம், உடல் உஷ்ணத்தை பன்னீர் திராட்சை நிறையவே குறைக்கிறது..












Click it and Unblock the Notifications