அன்னாசி பழத்தில் ஆயிரம் நன்மைகள் இருக்கு.. இனி மிஸ் பண்ணவே மாட்டீங்க.. இதை பாருங்க!
சென்னை: அன்னாசிப்பழம் பார்ப்பதற்கு கரடுமுரடான பூப்போல இருந்தாலும், உள்ளே பலாப்பழ சுளை போல இனிப்பாகவும், சற்று புளிப்பு சுவைகொண்ட கோடைகால பழவகைகளில் ஒன்றாகும். இதில் 75% நீர்சத்தும், மீதம் சர்க்கரை, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், நார்சத்து, ப்ரோமிலைன் (Bromelain) என்ற சக்தி வாய்ந்த வேதிப்பொருள் அதிக அளவிலும், மருத்துவ நன்மைகள் உள்ளது.
இப்பழத்தின் முக்கிய தன்மை உடலில் ரத்தத்தை விருத்தி செய்ய, சிறந்த டானிக் மற்றும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.
அடிக்கடி தலைவலி, ஒற்றை தலைவலிக்கு, விக்கல், தொடர் விக்கல், மூளை கோளாறு, செரிமான பிரச்சனை, மலசிக்கல், கீரைப்பூச்சி வெளியேற, மூட்டு வலி, பற்கள் மற்றும் எலும்புகள் வலிமையாகும், கண் பார்வை தெளிவடைய, பித்தம், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய், தொண்டை கரகரப்பு, தொண்டை அழற்சி உடனடி, நிவாரணியாக செயல்படுகிறது பித்தம் சம்பந்தமான வியாதிகள் குணமாக, அன்னாசிப்பழ வற்றல் சாப்பிட்டுவர நல்ல தீர்வு கிடைக்கும்.

எப்படியெனில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால், உடலுக்கு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு, பல்வேறு நோய் கிருமி தொற்று வராமல் தடுக்கிறது.
வயிற்று பூச்சி வெளியேற: குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது இனிப்பு வகையான தின்பண்டங்கள், சாக்லேட், அதனால் வயிற்று வலி, கீரைப்பூச்சி போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். இதனை சரிசெய்ய, அன்னாசிப்பழ இலையை மைய அரைத்து, ஒரு ஸ்பூன் அளவு அதன் சாறுடன் தேன் கலந்து குடுத்தால், வயிற்று போக்கு ஏற்பட்டு, வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
அசைவ உணவு செரிமானமாக: அசைவ உணவு உட்கொண்ட பிறகு, 1/2 மணி நேரம் கழித்து சிறிதளவு அன்னாசிப்பழம் சாப்பிட்டால், இறைச்சியில் உள்ள புரதசத்து முழுவதும் உறிய செய்து, நன்கு செரிமானம் ஆக உதவும். அன்னாசிப்பழ சாறுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து ஜூஸ் அருந்தினால், இரும்பு சத்து அதிகரித்து ரத்த சோகை நீங்கும். கருபப்பையில் உள்ள நச்சுக்கள், கழிவுகள், மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளும் சரிசெய்து, கருபப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் ஏற்படக்கூடிய உடல் அசதி, சோர்வு, உட்புறக்காயம், மற்றும் வெளிப்புற காயம், விரைவில் குணமாகும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.
அன்னாசிப்பழ வற்றல்: நன்கு பழுத்த பழத்தை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி, வெயிலில் உலர்த்தி, வற்றல் பதத்திற்கு காயவைக்க வேண்டும். தினமும் இரவு படுப்பதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் 3-5 துண்டு அன்னாசிப்பழ வற்றலை 1/2 மணி நேரம் உறவைக்கவேண்டும். ஊறவைத்த அன்னாசிப்பழ வற்றலை தொடர்ந்து 40 நாட்கள் வரை சாப்பிட்டுவந்தால் பித்த கோளாறுகள் நீங்கும். அன்னாசிப்பழ வற்றலை பாலில் ஊறவைத்து, வாரத்தில் 2 முறையாவது குடித்துவந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய் குணமாகும்.
தொப்பை குறைய: உடல் எடை, தொப்பை குறைக்க முயற்சிப்போர், அன்னாசிப்பழம், ஒரு ஸ்பூன் அளவு ஓமம் தண்ணீரில் கலந்து, நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தால், விரைவில் தொப்பை குறைத்துவிடும். நல்ல குரல் வளம் விரும்புவோர் தேநீர், காபி பதிலாக, அன்னாசிப்பழ சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், கரகரப்பு நீங்கி, குரல் இனிமையாக மாறும். தொண்டை அழற்சி சரியாக, அன்னாசிப் பழசாறு கொண்டு கொப்பளித்தால், விரைவில் அழற்சி குணமாகும்.
தவிர்க்கவேண்டியவர்கள்: சர்க்கரை நோயாளிகள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது, மேலும் கர்பிணி பெண்கள் கருவுற்ற ஆரம்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்த்து, 8 மாதத்திற்கு மேல் சாப்பிட்டுவந்தால், சுகப்பிரசவம் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications