மெட்ராஸ் ஐ தெரியும்.. அதென்ன பிங்க் ஐ? சென்னையில் வேகமாக பரவும் இளஞ்சிவப்பு கண் நோய்!
சென்னை: இளம் சிவப்பு நோய் எனப்படும் கண் அழற்சி நோய் சென்னையில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கெனவே எச்3 என்2 வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் வரை மக்கள் அவதியடைந்து வந்த நிலையில் தற்போது இந்த புதிய நோய் பாதிப்பு அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் ப்ளூ காய்ச்சல்கள் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இது மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பும் அதிகளவில் பரவி வருகிறது. மேலும் டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருகின்றன.

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் சரும நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் அழற்சி நோய் கோடை காலங்களில் ஏற்படுவது வழக்கம்.
இந்த நோய் ஏற்பட்டால் கண்கள் சிவக்கும். கண்களில் இருந்து நீர் வெளியேறும். மேலும் தூங்கி எழும் போது கண்களில் நிறைய அழுக்கு சேர்ந்து கொண்டு அவை காய்ந்து கண்களை திறக்க முடியாத நிலை ஏற்படும். இது தொற்று நோய் என்பதால், இந்த நோய் பாதித்தவர்களை நேரடியாக பார்க்கக் கூடாது.
மேலும் அவர்கள் பயன்படுத்திய கைகுட்டை, கண்ணாடி, செல்போன், உடைகள் உள்ளிட்ட எந்த பொருட்களையும் மற்றவர்கள் தொட கூடாது. கண்களில் வலி இருக்கும். அதனால் கண் மருத்துவரை சந்தித்து சொட்டு மருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். தாமாகவே கடைகளில் சொட்டு மருந்து வாங்கி சுயவைத்தியம் செய்தல் கூடாது. அப்படி செய்தால் பார்வையே இழக்கும் அபாயம் நேரிடும் என்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது பிங்க் நிறத்தில் கண் அழற்சி நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நோய் சென்னையில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்த நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு அரசு கண் மருத்துவமனைகளுக்கும் தனியார் கண் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக வருகிறார்கள். பிங்க் நிற கண் அழற்சி ஏன் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.
இதுகுறித்து அகர்வால் மருத்துவமனையின் மருத்துவர் சீனிவாச ராவ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் வெயில் காலங்களில் கண்களில் டிரைனஸ் இருப்பதால் கண் நோய்கள் அதிகரிக்கின்றன. கண்களில் உற்பத்தியாகும் தண்ணீர் விரைவில் ஆவியாகிறது.
கோடை வெயிலின் போது பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக களத்திற்கு சென்று பணியாற்றுவோர், மார்க்கட்டிங் எக்ஸிகூட்டிவ்கள், இரு சக்கர வாகனத்தில் பணியாற்றுவோர் ஒரு பெரிய தொப்பியை போட்டுக் கொள்வது நல்லது. புற ஊதா கதிர்கள் நம் மீது படாமல் இருப்பதை தவிர்க்க விசேஷ கண்ணாடி அணிவது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். இவ்வாறு மருத்துவர் தெரிவித்தார்.
இளம் சிவப்பு நோய் என்பது சென்னையில் கடந்த 2 வாரங்களாக பரவி வருகிறதாம். மேலும் அழுக்கான கைகளை கொண்டு கண்களை தொடக் கூடாது, அழுக்கு துணியில் கண்களை துடைக்க கூடாது, ஏற்கெனவே தொற்று பாதித்தவரின் துணிகளையும் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். வெயில் கொடுமை ஒரு பக்கம் இருக்க, இது போன்ற புது புது நோய்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications