Pregnancy Symptoms: மிஸ்டு பீரியட்ஸுடன் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருப்பது உறுதி!!
சென்னை: மாதவிடாய் தள்ளி போயிருக்கிறதா, அப்போ வாழ்த்துகள்! இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
திருமணமான பிறகு அனைவரும் எதிர்பார்ப்பது வம்ச விருத்தி. பிரசவ வலி மிகவும் வலியது என தெரிந்தும் குழந்தை பெற்றுக் கொள்வதில் பெண்களுக்கு ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. அந்த குழந்தை பிறந்துவிட்டால் போதும் பட்ட வலியெல்லாம் எங்குதான் ஓடி போகுமோ தெரியாது.
திருமணமானதும் மாதவிடாய் தள்ளி போனாலே கர்ப்பம் என சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். இதை கர்ப்பகால பரிசோதனை மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருந்து திடீரென திருமண உறவுக்கு பின்னர் மாதவிடாய் தள்ளி போகிறது என்றால் தள்ளி போன அடுத்த நாளே ஸ்டிரிப்பை கொண்டு சோதனை செய்து கொள்ளலாம்.

அப்போது கர்ப்பமா இல்லையா என்பது தெரிந்துவிடும். இந்த சோதனை செய்வதற்கு முன்பு நம் உடலில் நடக்கும் சில மாற்றங்களை நம் உடலே காட்டிக் கொடுத்துவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி! ஆனால் நாம் தான் கவனிக்க தவறிவிடுகிறோம். எப்போதும் உடல் நம்முடன் ஏதாவது பேசிக் கொண்டே இருக்கும் என்பார்கள்.
அந்த வகையில் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் தொடங்குகின்றன. இந்த அறிகுறிகளின் மூலம் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா இல்லையா என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். கர்ப்பத்தின் முதல் அறிகுறியான மாதவிடாய் தள்ளி போவதை தவிர வேறு என்னென்ன அறிகுறிகள் என்பதை பார்ப்போம்.
கர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். மார்பகத்தில் காம்பு பகுதியில் உள்ள கருப்பு நிறம் பெரிதாகியிருக்கும். லேசான வலி இருக்கும். கை பட்டாலே வலிக்கும். உடல் அசதியாக இருக்கும். மேலும் சிலருக்கு பசி உணர்வு இருக்கும். செரிமானம் நடப்பது குறையும். சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும். இடுப்பில் லேசாக வலி இருக்கும். உடலில் சூடும் இருக்கும். எதற்கெடுத்தாலும் கோபம் வரும்.

பெண்களுக்கு காலையில் எழுந்ததும் பலவீனம் மற்றும் குமட்டல் ஏற்படும். சாப்பிட்டதும் வாந்திவருவதை போல இருக்கும். நிறைய பேருக்கு அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படும். அது போல் வாசனை திறனும் இருக்கும். பசியின்மையும் இருக்கும். கரு கருப்பையில் தங்க தொடங்கியதும் அது விரிவடையும் போது ஒரு வித வலியை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் எல்லாமே எல்லாருக்கும் இருக்கும் என சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் இருக்கும். அது போல் முதல் குழந்தைக்கு இருந்த அறிகுறிகள் இரண்டாவது குழந்தைக்கு மாறுபடலாம். எதுவாக இருந்தாலும் மருத்துவரிடம் சோதனை செய்து அவர் நீங்கள் கர்ப்பம் என சொன்னதும் முழு சந்தோஷத்தை அடையுங்கள்.
அது போல் கர்ப்பிணிகள் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளையும் சொல்லும் உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது போல் குழந்தைக்கு ஸ்கேன் செய்ய கூறினாலும் உடனே செய்துவிட வேண்டும். முதல் 3 மாதங்களும் கடைசி 3 மாதங்களும்தான் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே கருவுறுதலில் பிரச்சினை இருந்தால் அதை உடனடியாக மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications