மருத்துவ குணமிக்க புரோட்டீன் பவுடர்.. ஆரோக்கியம் தரும் புரோட்டீன் உணவு என்னென்ன? அதிக புரதம் நல்லதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரதச்சத்துக்கள் நமக்கு எதற்காக தேவை? புரதம் குறைவாக இருந்தால், உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன? புரோட்டீன் பவுடர் எப்படி தயாரிப்பது? அதை அதிகமாக எடுத்துக் கொள்ளலாமா? என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
புரதச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்போது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஆரம்பித்துவிடுகின்றன. முக்கியமாக தசை வளர்ச்சி பாதிப்பு முதல், செல்கள் சேதம் வரையிலும் ஏகப்பட்ட தொந்தரவுகள் வந்துவிடும்.. எனவே புரோட்டீன் சரியான விகிதத்தில் இருந்தால், கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துக்கொள்வது கட்டுப்படுத்தப்படும்.

புரோட்டீன்: இப்படி புரோட்டீன் உடலில் சேர்ப்பது, உடல் பருமன், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்தும் என்று நிரூபணமாகியிருக்கிறது. அந்தவகையில், பால், சோயா, முட்டை, இறைச்சி, பருப்பு வகைகள், மீன்கள் போன்வற்றில் புரோட்டீன் நிறைய உள்ளது..

health

அதற்காக அனைவருக்கும் ஒரே அளவிலான புரோட்டீன்கள் தேவைப்படுவதில்லை.. ஒவ்வொருவருக்கும் மாறக்கூடியது.. ஒரு ஆரோக்கியமான நபர் தன்னுடைய எடைக்கு ஏற்ப ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் புரதத்தை எடுத்து கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. குறிப்பாக, சுறுசுறுப்பாக இயங்குபவர்கள், தசைகளை வலிமையாக்க விரும்புபவர்கள் புரதம் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சிலர் புரோட்டீன் பவுடர்களை எடுத்துகொள்கிறார்கள்.

உடற்பயிற்சி: குறிப்பாக, உணவு மூலம் சரியான அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்... உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்ளலாம்.. அதாவது, உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரோட்டீன் பவுடர் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை, தசைகளின் வளர்ச்சியை ஆதரிக்க வேண்டுமானால், ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 1.4-2.0 கிராம் வரை மாறுபடும். அதிகமாக புரோட்டீன் பவுடர்களை எடுத்து கொள்ளும்போது, கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்த்திவிடுமாம்.. அல்லது செரிமானத்தை சிக்கலாகிவிடும்.. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்றே, இதுபோன்ற புரோட்டீன் சப்ளிமென்ட்ரிகளை எடுத்து கொள்ளலாம்.

வளரும் குழந்தைகள்: வளரும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே புரோட்டீன் பவுடர் செய்து தரலாம்.. வேர்க்கடலை, பிஸ்தா, பாதாம், வால்நட், பூசணி விதைகள், ஆளி விதைகள், சியா விதைகள், சோயா பீன்ஸ், ஓட்ஸ், போன்றவற்றை தனித்தனியாக வறுத்து அரைத்து இந்த பவுடரை தயாரிக்கலாம்.. இதில் 2 ஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பிள்ளைகளக்கு தந்தால் தசைகள் வலுபெறும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+