ரேஷனில் பாமாயில் வாங்கியாச்சா? சமையலுக்கு எந்த எண்ணெய் யூஸ் பண்றீங்க? நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற எண்ணை
சென்னை: எண்ணெய் என்றாலே அதன் விலையை போலவே ஆபத்துகளும் அதிகம் என்று மனதில் பதிந்துவிட்டது.. வழக்கமாக உடல்பருமனாக இருப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள், சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. அப்படியானால் சமையலுக்கு என்னென்ன வகையான எண்ணெய்களை பயன்படுத்தலாம்? சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் என்ன?
ஆளிவிதை எண்ணெய், வால்நட் எண்ணெய் போன்றவைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது..டைப் 2 நீரிழிவு நோயை இதனால நிர்வகிக்க முடியும். குறிப்பாக, வால்நட் எண்ணெய், டைப் 2 சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுவதாக கூறுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஆல்பா-லினோலெனிக் அமிலம் அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளி சாப்பிடிக்கூடியதாக உள்ளது..

இதய செயல்பாடுகள்
சீசேமோல் என்ற முக்கிய பொருள் நல்லெண்ணையில் உள்ளது. இது இதய செயல்பாட்டுக்கு நல்லது. வாதம், பித்தம், கபம் என அனைத்தையும் ஒரே சீராக வைத்திருக்க நல்லெண்ணெய் உதவுகிறது.. இதிலுள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுத்து நிறுத்தக்கூடியது. அத்துடன், உடலில் சர்க்கரை நோய் வருவதை முன்கூட்டியே தடுக்கக்கூடியது..
லெசித்தின், லினோலிக் போன்ற முக்கிய அமிலங்கள், உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பை பெருக்க செய்கிறது. எனவே நல்லெண்ணெய்யில் சமைப்பதாக இருந்தால், இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றை அதிகமாக சேர்த்து கொள்வதால், பாதுகாப்பு கிடைக்கும்..
ஆலிவ் எண்ணெய்யில் சமைக்கலாமா
ஆலிவ் எண்ணெய் இன்சுலின் எதிர்ப்பை தடுத்து, சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுக்குள் வைக்கும். ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் D அதிகமாக உள்ளதால், டைப் 2 நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்க செய்கிறது. இதனால் ரத்த நாளங்களும் உறுதி பெறுகிறது.
பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய்யும் சமையலுக்கு ஏற்றதுதான்.. அவகேடோ எண்ணெயில் ஒலிக் அமிலம் உள்ளதால், இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.. மூட்டு வலி, முழங்கால் வலியையும் குறைக்க செய்கிறது.. உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க தூண்டுகோலாகிறது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் பனை எண்ணெய் உபயோகிப்பதை தவிர்க்கலாம். இது நீரிழிவு பிரச்சனை மேலும் அதிகரிக்க செய்துவிடும்.
சோளம், சோயாபீன்ஸ் மற்றும் அரிசி தவிடு போன்ற எண்ணெய்கள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. பாலிஅன்சாச்சுரேட்டட், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த கடலை எண்ணெய், கெட்ட கொழுப்பினை கட்டுப்படுத்தும்...
ரேஷன் பாமாயில் நல்லதா?
பாமாயிலில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளதால், ஹார்மோன்களை சமநிலைபடுத்துகின்றன.. வைட்டமின் A, கண்பார்வையை மேம்படுத்துவதால், கண் குறைபாடுகளை குறைக்க செய்கிறது.. எனவே ஹார்மோன் குறைபாடுகள் இருந்தால் பாமாயிலை பயன்படுத்தலாம். இந்த எணணெய்யிலுள்ள வைட்டமின் E, முகசுருக்கத்தை தள்ளி போடுகிறது. ஆன்டி ஆன்ஸிடண்ட், வைட்டமின் A நிறைந்த பாமாயில், தலைமுடிக்கும் நல்லது.
ஆனால், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், பாமாயிலை தவிர்த்துவிடலாம்.. அதிக கொழுப்பு உள்ளதால், பல நோய்களுக்கு இது வித்திடும். அதிலும், சமைக்காத பாமாயிலைவிட, சமைத்த பாமாயில் ரத்த அழுத்தத்தை அதிகமாக்கிவிடும். எனவே, மேற்கண்ட உபாதைகளில் உள்ளவர்கள் மருத்துவர்களை கலந்தாலோசித்தே சிறந்த எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications