Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் வயிற்றில் பச்சை பூண்டு.. கோடி நன்மை கொட்டி இருக்கு! ஆனா "இவங்க" கிட்டக்கூடப் போகக்கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது சமையலில் பூண்டு ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. நமது உடலில் பூண்டு சுவையைக் கொடுப்பது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட மருத்துவ நலன்களையும் கொடுக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது முதல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, எடை இழப்பு என ஏகப்பட்ட விஷயத்திற்கு உதவுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியச் சமையலில் பூண்டுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளாக, நமது உணவுகளுக்குப் பூண்டு சுவையைக் கூட்டி வந்துள்ளது. ஆனால், சுவைக்கு மட்டுமல்லாமல், பூண்டு ஒரு பழமையான வீட்டு வைத்தியமாகவும் பார்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்திலும், பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளிலும் பூண்டு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

Raw Garlic on Empty Stomach What are the Surprising Health Benefits and Who need to avoid

வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டு சாப்பிடுவது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகவும், செரிமானத்தை மேம்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூண்டின் சுவையும் வாசமும் ஸ்ட்ராங்காக இருந்தாலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் அதைவிடப் பலம் வாய்ந்தவை. வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டு சாப்பிடும்போது உடலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது

வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டு சாப்பிடுவது நோய் எதிர்ப்புச் சக்தியை இயற்கையாகவே அதிகரிக்கும். 2023ல் இது குறித்து நடந்த ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சைப் பூண்டில் அல்லிசின் (Allicin) என்ற கலவை இருக்கிறது. பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. வெறும் வயிற்றில் பூண்டைச் சாப்பிடும்போது, நமது உடலில் பூண்டில் இருக்கும் அல்லிசினை மிகத் திறம்பட உறிஞ்சி, நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவாக்குகிறது.

2. இதய ஆரோக்கியம்

பூண்டு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுவதாக 2013ல் நடந்த ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த இரண்டும் தான் இதய நோய்களுக்கான முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், அந்த ஆபத்தை குறைக்கிறது. பூண்டு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.. ரத்த நாளங்களை நிதானப்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

3. செரிமானம்

2019ல் நடந்த ஒரு ஆய்வின்படி, தினமும் பச்சைப் பூண்டைக் காலையில் சாப்பிடுவது செரிமான மண்டலத்தைத் தூண்டி, இரைப்பை நீர் சுரப்பை அதிகரிக்கிறது. இது நமது உடல் உணவைத் திறம்படச் செரிமானம் செய்ய உதவுகிறது. பூண்டில் ப்ரீபயாடிக் (Prebiotic) பண்புகள் இருக்கும் சூழலில், இது ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் அஜீரணம் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் எதுவும் வராது.

4. எடை இழப்பு

2022ல் நடந்த ஒரு ஆய்வில், பூண்டு பசியைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பூண்டு கொழுப்பைக் கரைக்கவும் ஓரளவுக்கு உதவுவதாகத் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சிம்ரன் சைனி கூறுகையில், "பூண்டில் உள்ள அதிகக் கந்தகச் சத்து (Sulphur content) அதற்கு ஆன்டிபயாடிக் பண்புகளை அளிக்கிறது. இது நச்சுக்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது" என்றார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு பச்சைப் பூண்டு சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு பல் பச்சைப் பூண்டைச் சாப்பிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பூண்டு நல்லது என்றாலும் அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றின் உட்புறத்தை அது பாதிக்கலாம். எனவே, உங்கள் உணவில் பச்சைப் பூண்டு சேர்க்கும்போது அளவோடு இருப்பது அவசியம். பச்சைப் பூண்டுகளை அளவாகச் சாப்பிட்டால் எதுவும் ஏற்படாது. அதேநேரம் அதிகமாகச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம், நெஞ்செரிச்சல், வாயு, வயிற்றுப்போக்கு, தோல் எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

யார் சாப்பிடக்கூடாது

அதேநேரம் ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது GERD உள்ளவர்கள், ரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள், மற்றும் பூண்டு அலர்ஜி உள்ளவர்கள், ஹெபடைடிஸ் உள்ளவர்கள் பூண்டைத் தவிர்க்க வேண்டும்

இது சாதாரணச் செய்தி மட்டுமே. இதை மருத்துவ ஆலோசனையாக யாரும் கருதக்கூடாது. உடலுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை நாடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+