செவ்வாழை சிறப்பு.. பற்களை காக்கும் சூப்பர் பழங்கள்.. வலுவான பல்லுக்கு, தினம் ஒரு ஆப்பிள் போதுமே
சென்னை: பற்களை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக்கூடிய பழங்கள் என்னென்ன? பல் கிடுகிடுவென ஆடாமலும், பற்களின் நிறம் மாறாமலும் காக்ககூடிய பழங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
பற்களை பாதுகாக்கக்கூடியதில், வாழைப்பழங்கள் முதன்மையானவை.. காரணம், மக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள், பற்களிலுள்ள அழுக்குகளை போக்கக்கூடியவை. அதிலும் செவ்வாழையில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.

முக்கிய பழங்கள்: கால்சியம் சத்துக்கள் அதிகமாக செவ்வாழையில் உள்ளதால், பற்களுக்கு பலம் தருகிறது.. பலவீனமான பற்கள் இருந்தாலே அல்லது பல் ஆடுவது போல இருந்தாலோ, ஈறுகள் பலவீனமாக இருந்தாலோ, அத்தனைக்கும் செவ்வாழை மருந்தாகிறது.. எனவே, தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்கின்றன.
அதுமட்டுமல்ல, செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது என்கிறார்கள். பேக்கிங் சோடா, வாழைப்பழம், விர்ஜின் தேங்காய் எண்ணெய் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து தினமும் பல் துலக்கிவந்தாலே, பல் சொத்தைகள் வராமல் தடுக்கலாம்.பற்களும் பளிச்சென்று வெண்மையாக இருக்கும்.
நார்ச்சத்து: அடுத்ததாக, ஆப்பிளில் உள்ள சத்துக்களை பற்களை காத்து, பற்களிலுள்ள கறைகளையும் போக்குகின்றன.. மேலும், ஆப்பிளில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் பற்கள் மட்டுமல்லாது வாய் சுகாதாரமும் பேணப்படும்.. வாயில் துர்நாற்றமும் இருக்காது. கிருமிகள், இருந்தாலும் அவை வெளியேறிவிடும். ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம், அதிக உமிழ்நீர் சுரக்க செய்து பற்களை சுத்தமாக்க செய்கிறது..
ஆரஞ்சு பழத்திலுள்ள வைட்டமின் C, இரும்புச்சத்துக்கள், பற்களிலுள்ள அழுக்குகளை வெளியேற்றி, ஈறுகளுக்கும் பலத்தை தருகிறது. தர்பூசணியிலுள்ள மாலிக் அமிலமும், பற்களின் கறைகளை போக்க உதவுகின்றன.. ஈறுகளில் பாக்டீரியா தொற்று இருந்தாலும் அவை வெளியேறிவிடும். உலர் பழங்கள் என்று சொல்லப்படும் டிரை ஃப்ரூட்ஸ் சாப்படுவதும் நமது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
நெல்லிக்காய்: ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் C உள்ளதால், பற்களின் சேதாரத்தை தடுத்து நிறுத்துகின்றன. அதேபோல, நெல்லிக்காய், பற்களுக்கு உறுதி அளிக்கும் பழமாகும். நெல்லிக்காயை தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுப்பெறும். நெல்லிக்காயை பொடி செய்து தண்ணீரில் கலந்தும் வாயை கொப்பளித்து வரலாம். அல்லது நெல்லிக்காய் பேஸ்ட் செய்து பற்களில் மசாஜ் போல செய்யலாம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications