Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருங்குடல் கேன்சரின் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்!காலம் தாழ்த்த வேண்டாம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலமாக மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் கேன்சர் முதலிடத்தில் இருக்கிறது. கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. இதில் பெருங்குடல் புற்றுநோய் குறித்து பரவலாக எந்த தகவல்களும் பொதுவெளியில் காணப்படுவதில்லை. இந்நிலையில் பெருங்குடல் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் 6 பேரில் ஒருவருக்கு கேன்சர் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது சராசரியாக ஆண்டுக்கு ஒரு கோடி பேர் கேன்சர் நோயால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 14 லட்சம் பேர் கேன்சர் நோயால் உயிரிழக்கின்றனர். கேன்சரில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. இதில் பெருங்குடல் புற்றுநோய் அனைவரும் பாதிக்கும் தன்மை கொண்டதாகும். இதுநாள் வரை இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள் சரிவர தெரிய வராத நிலையில் தற்போது இதனை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

Researchers release new report on colon cancer symptoms

அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சி நிறுவனம் இந்த பெருங்குடல் புற்றுநோய் குறித்து புதிய ஆராய்ச்சி ஒன்றை சமீபத்தில் மேற்கொண்டிருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சில அறிகுறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு அறிக்கை கூறியதாவது, "அதாவது கடந்த 1995 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்த பெருங்குடல் புற்றுநோய் சுமார் 11 சதவிகிதத்திலிருந்து 20% ஆக அதிகரித்துள்ளது. இதற்கு பிரதான காரணம் இதுகுறித்த அறிகுறிகள் அறியப்படாததுதான்.

அதன்படி வயிற்று வலி, மலக்குடல் இரத்தபோக்கு, தொடர்ந்து வயிற்றுப்போக்கு, இரும்புச்சத்து குறைவு போன்ற அறிகுறிகள் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, முறையாக உடற்பயிற்சி இல்லாமை, நார்ச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ளாதது, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஏற்கெனவே மார்பகம் அல்லது கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதுபோன்று பாதிப்பு ஏற்படும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இளைஞர்கள் மத்தியில்தான் இந்த பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது" என்று கூறியுள்ளனர்

இந்தியாவை பொறுத்த அளவில் இந்த பெருங்குடல் புற்றுநோய் குறித்து போதுமான விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. நாடு முழுவதும் புற்றுநோய் காரணமாக ஆண்டுக்கு சுமார் 14,61,427 பேர் உயிரிழக்கின்றனர். மேற்குறிப்பிட்டதைபோல விழிப்புணர்வு குறைவாக இருப்பதே புற்றுநோய் உயிரிழப்புக்கு அடிப்படையான காரணம். அதேபோல ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலானோருக்கு இப்படி பரிசோதனை மேற்கொள்ள போதுமான அளவு பணம் இருப்பதில்லை. எனவே இந்த புற்றுநோய் பாதிப்பை உடனடியாக அடையாளம் காணமுடிவதில்லை.

Researchers release new report on colon cancer symptoms

அடிப்படையான மருத்துவ பரிசோதனைகளை அனைவருக்கும் இலவசமாக்க வேண்டும் என்பதே இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னர் வரை புற்றுநோய் வயதானவர்களை அதிகம் பாதித்து வந்தது. ஆனால் தற்போது இது இளைய தலைமுறையை கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது. எனவே இனியாவது மருத்துவ பரிசோதனைகளை அனைவருக்கும் இலவசமானதாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. எனவே இந்த உலக நாடுகளின் அரசு ஒன்று சேர்ந்தால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரேயடியாக இந்த பாதிப்பிலிருந்து மீட்டுவிட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+