கொள்ளு பயிறு பயன்கள்.. உடல் எடையை குறைக்கும் 3 ஜூஸ்கள்.. ஊளைச்சதையை கரைக்கும் சப்ஜா விதைகள்.. மாஸ்
சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு, ஏராளமான பானங்கள் உதவியாக உள்ளன.. அந்தவகையில், இயற்கை முறையில் ஊளைச்சதையையும், கொழுப்பையும் கரைக்கக்கூடிய 3 வகையான சூப்பர் டிரிங்க்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பார்கள்.. அந்த அளவுக்கு கொள்ளு பயிறில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. அதிலும் முளைகட்டிவிட்டு கொள்ளு பயன்படுத்தும்போது, இரட்டிப்பான பலனை பெறலாம்.

முதலில் கொள்ளு பயிறை கல் எதுவும் இன்றி சுத்தம் செய்து கொண்டு, 12 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.. பிறகு, அதனை ஒரு வெள்ளைத்துணியில் முளைக்கட்ட வேண்டும். இந்த முளைகட்டிய கொள்ளுவை, மிக்சியில் சேர்த்து அரைக்க வேண்டும்.. இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கொள்ளலாம்.
கொள்ளு சாறு: பிறகு அரைத்த விழுதினை மெல்லிய துணியில், பால் மட்டும் பிழிந்து எடுக்க வேண்டும். இந்த பாலை 100 கிராம் அளவு அப்படியே குடிக்கலாம்.. வாரம் 3 நாள் இதை குடித்து வந்தாலே, உடல் எடையில் மாற்றம் தெரியும். கொள்ளு உஷ்ணத்தை தரக்கூடியது என்பதால், அதிகமாக குடிக்க கூடாது.
அதேபோல சுரைக்காய் சாறு தவிர்க்கக்கூடாது.. கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடிய சக்த, சுரைக்காய்களுக்கு உண்டு.. இதற்கு சுரைக்காய்களின் தோல், விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதைகளை மட்டும் மிக்சியில் அரைத்து, சிறிது எலுமிச்சம் சாறு சேர்த்து, வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வரவேண்டும். 10 நாட்களிலேயே கண்ணெதிரே ஊளைச்சதை குறைவதை காணலாம்..
சுரைக்காய் சாறு: இதனால், சருமம் பொலிவாவதுடன், மன அழுத்தமும் நீங்கிவிடும்.. இதனால், உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், நீர்ச்சத்துக்களும் கிடைத்துவிடும்.
சப்ஜா விதைகளையும் நாம் தவறவிடக்கூடாது. இந்த விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவு.. ஆனால் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன. குறிப்பாக, சப்ஜா விதைகளில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளதால், இது உடலில் கொழுப்பை எரிக்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும், அதிகமான நார்ச்சத்து கொண்டவை என்பதால், உடல் எடை குறைப்புக்கு மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது.
சப்ஜா விதை: 1 கப் வெதுவெதுப்பான தண்ணீரில், 2 ஸ்பூன் சப்ஜா விதைகளை 15 நிமிடங்கள் ஊறவைத்து குடித்தாலே போதும்.. உடலுக்கு தேவையான சக்தி கிடைத்துவிடும். நல்ல கொலஸ்ட்ராலை மேம்படுத்துகின்றன.. இந்த விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும்.. இந்த சப்ஜா விதைகள். நார்ச்சத்து நிறைந்த பொருள் என்பதால், நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற நீரையேற்றுகிறது.
இந்த பானங்களை குடிப்பதால் மட்டுமே உடல் எடை குறைந்துவிடாது.. இவைகளை உட்கொள்வதொடு, எப்போதும் முறையான உணவு முறை, தவறாமல் உடற்பயிற்சி, போதுமான தண்ணீர், நிறைவான தூக்கம், மகிழ்ச்சியான மனநிலை போன்றவைகளும் கட்டாயம் இருந்தால் மட்டுமே உடல் எடை இழப்பு சாத்தியமாகும்.












Click it and Unblock the Notifications