மீனை வாங்கினால் சால்மன் பெஸ்ட்.. எலும்பு வலு பெற, மூட்டுவலி குறைய, ஆரோக்கியம் தரும் சால்மன் மீன்கள்
சென்னை: எலும்புகள் உட்பட உள்ளுறுப்புகளுக்கு பலம்தரக்கூடிய சால்மன் மீனின் நன்மைகள் என்னென்ன? உடல் எடை குறைய விரும்புபவர்கள் சால்மன் மீனை சாப்பிடலாமா? சால்மன் மீன்கள் குறித்து ஆய்வுகள் சொல்வதென்ன? சுருக்கமாக பார்ப்போம்.
ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு கலரில், சற்று சதைப்பாங்குடன் காணப்படும் மீன்கள்தான் சால்மன்.. அபாரமான சுவையை கொண்ட மீனை விரும்பாதவர்களே இருக்க முடியாது..

சத்தான மீன்கள்: நன்னீர் ஓடைகளில் குஞ்சுகளை பொரிக்கும் தன்மை கொண்டவை இந்த சால்மன் மீன்கள்.. இந்த குஞ்சுகள் பெரிதானதுமே, அவை கடலுக்கு இடம் பெயர்க்கப்பட்டு, சத்துள்ள மீனாக மாறுகிறது.. இது மறுபடியும் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும்போது நன்னீருக்கு கொண்டுவரப்படுகிறது.
சால்மன் மீன்களில் பல வகைகள் உண்டு. இதில், பசிபிக், அட்லாண்டிக் பகுதியில் காணப்படும் மீன்கள் தான் உண்மையான சால்மன் மீன்கள்.. இதனை காலா மீன் அல்லது கிழங்கான் மீன் என்கிறார்கள்.
கொலஸ்ட்ரால்: புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் இதுவென்பதால்தான், உலகளவில் உணவாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. ரத்த அழுத்தத்தை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தக்கூடியவை.. இதன்காரணமாக, இதய நோய் ஆபத்தை சால்மன் மீன்கள் குறைக்கின்றன..
இதைத்தவிர, வைட்டமின் B, பொட்டாசியம், துத்தநாகம், B1, B2, B3, B5, B12 வைட்டமின்கள், செலினியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சால்மனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளை செயல்பாட்டுக்கு பேருதவி புரிபவை.. குறிப்பாக நினைவுத்திறனை அதிகரிக்கக்கூடியது..
உள்ளுறுப்புகள்: சால்மனிலுள்ள பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம் தாதுக்கள், இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை காக்க சென்கின்றன.. முக்கியமாக, இதிலுள்ள செலினியம் சத்தானது, தைராய்டு நோய்களை நெருங்கவிடாமல் தடுக்கிறது.
மீன்கள் சாப்பிடுவதே கண்களுக்கு நல்லது என்பார்கள்.. ஆனால், சால்மன் மீனை சாப்பிட்டு வருபவர்களுக்கு, வயதினால் ஏற்படும் மாகுலர் சிதைவின் அபாயம் குறைகிறதாம்.. அதேபோல வாத நோய் உள்ளவர்களுக்கு சாலமன் மீன்கள் மிகவும் நல்லது என்கிறார்கள்.. காரணம், இவற்றின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாகவும், இவை கீல்வாதத்தின் அறிகுறிகளை குறைப்பதாகவும் கூறுகிறார்கள்.
மூட்டுவலிகள்: மூட்டுகள் பிரச்சனைகளை சால்மன் மீன்கள் சரி செய்வதாகவும், ஒமேகா 3 உட்கொள்ளுவதால் இருதய ஆரோக்கியம் மேம்படுவதாகவும் ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுவர்கள் இந்த மீனை அடிக்கடி சாப்பிடலாம்.
ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவும் சால்மன் மீனில் வைட்டமின் D அபரிமிதமாக உள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக செயல்பட்டு, பலவீனமான எலும்புகளை பாதுகாத்து, வலுவாக்க செய்கின்றன. சால்மன் மீனிலுள்ள இந்த வைட்டமின் D சத்துக்கள், எலும்புகள் மட்டுமல்லாமல், பற்கள், தலைமுடி ஆரோக்கியத்துக்கு தூண்டுகோலாக விளங்குகின்றன.. இதனால், சிலவகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
ஹை புரோட்டீன்கள்: சால்மன் மீனின் ஹை புரோட்டீன்கள் உள்ளதால், பசி உணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைப்பை ஊக்குவிக்க செய்கின்றன.. புரதம் அதிகமாக உள்ளதால், "லீன் மீட்" என்று இந்த மீனுக்கு சிறப்பு பெயர் உள்ளது.. அதாவது, 100 கிராம் சால்மனில் 22-23 கிராம் அளவுக்கு புரதம் உள்ளதாம்..
சருமத்துக்கு பளபளப்பை தந்து, பாதுகாப்பையும் தரக்கூடியது இந்த சால்மன்.. நரம்பு மண்டலத்தை இந்த சால்மன் மீன் பலப்படுத்துவதுடன், சருமத்தையும் சேதமில்லாமல் காக்கிறது..












Click it and Unblock the Notifications