பட்டென்று அவிழ்ந்தது.. 50 வருஷமாக இருந்த மர்ம முடிச்சு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த MAL தான்.. வாவ்
பிரிஸ்டல்: இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒரு மர்ம முடிச்சை அவிழ்த்து விஞ்ஞான உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.. கடந்த 50 வருஷத்துக்கு முன்பு கண்டறியப்பட்ட AnWj ரத்தக் குழு ஆன்டிஜன் தொடர்பாக நிலவி வந்த மர்மத்தைத்தான் இந்த குழு இப்போது சுக்குநூறாக உடைத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஆய்வுக் குழுவானது MAL என்ற புதிய ரத்தக் குழுவை கண்டறிந்துள்ளது... இந்த கண்டுபிடிப்பானது, AnWj ஆன்டிஜன் மர்மத்தை உடைத்துள்ளதுதான் விஞ்ஞானிகளின் வியப்புக்கு காரணமாகும்.

புதிய ஆய்வு: பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் என்எச்எஸ் ரத்தம் மற்றும் ரத்த மாற்றுத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ரத்த குழுக்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளது. லூயிஸ் டில்லி என்ற மூத்த விஞ்ஞானி தலைமையில் இந்த ஆய்வு நடந்து வருகிறது.
இந்தக் குழுவினர், ரத்தத்தில் AnWj ஆன்டிஜன் இல்லாமல் உள்ள நோயாளிகளைக் கண்டறியும் வேலையில் முக்கியமாக ஈடுபட்டுள்ளனர். இந்த AnWj ஆன்டிஜன் கடந்த 1972ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பான பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருந்து வருகிறது.
ஆய்வுகள்: இதுகுறித்து லூயிஸ் டில்லி, பிபிசிக்கு ஒரு பேட்டியை தந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "எங்களது ஆய்வின்போது நாங்கள் கண்டறிந்த புதிய வகை ரத்தக் குழுவானது, AnWj ஆன்டிஜன் மர்மத்தை போக்கும் வகையில் உள்ளது... நாங்கள் நடத்திய ஒரு மரபணு சோதனையில்தான் இது தெரிய வந்தது. இது எத்தனை பேருக்கு உதவியாக இருக்கும் என்று உறுதியாக தெரியவில்லை... ஆனால் கண்டிப்பாக, வருஷத்துக்கு 400 பேருக்கு இது உதவும் என்று உத்தேசமாக கணித்துள்ளோம்" என்றார்.
இருந்தாலும், இந்த ஆய்வுகளின் முடிவுகள் தொடக்க நிலையில்தான் உள்ளதாம். இன்னும் நிறைய ஆய்வுகள் தேவைப்படுகிறதாம். தற்போது நடந்துள்ள ஆய்வின் மூலமாக சில முக்கியமான முடிவுகளை இந்தக் குழு எட்டியுள்ளது.
ஆன்டிஜன்: அதாவது AnWj ஆன்டிஜனின் மரபணு பின்னணியை கண்டறிந்துள்ளனர்.. இதுதான் மிக மிக முக்கியமானது. இதன் மூலம் இந்த ஆன்டிஜன் இல்லாதவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தரலாம் என்பது குறித்த ஆய்வுகள் இனிமேல்தான் வேகம் பிடிக்கும் என்றும், அதில் மிகப்பெரிய பலனும் கிடைக்கும் வாய்ப்பும் பெருகியுள்ளது.
MAL ரத்தக்குழு என்பது AnWj ஆன்டிஜனை உற்பத்தி செய்யும் மூலம் ஆகும்... இப்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரத்தக் குழுக்களில் இது 47வது ரத்தக் குழுவாகும்.
மரபணு சோதனையின்போது AnWj நெகட்டிவ் வந்த நோயாளிகளுக்கு ரத்த மாற்று சிகிச்சையின்போது பல சிக்கல்கள் நிலவுகின்றன. அந்த சிக்கல்கள் இனி குறைய வாய்ப்புள்ளது.
ரத்தக்குழு: சரி, ரத்தக் குழு ஆன்டிஜன் என்றால் என்ன அப்படின்னு நாம தெரிஞ்சுக்கணும் இல்லையா? அது வேற ஒன்னும் இல்லைங்க... நம்முடைய ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் காணப்படும் புரதங்கள்தான் இந்த ரத்தக் குழு ஆன்டிஜன்கள் ஆகும். இது எல்லோருக்கும் இருக்க வேண்டும்... அப்படி இருந்தால்தான், நாளைக்கு ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது எந்த சிக்கலும் வராது..
அதுமட்டுமல்ல, இல்லாதவர்களுக்கு ரத்த மாற்று சிகிச்சை சிக்கலில் முடியும் அபாயம் உள்ளது. அந்த வகையில் இப்போது பிரிஸ்டல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள முடிவுகள் ரொம்ப ரொம்ப முக்கியமானவை.. மருத்துவ துறையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இது கருதப்படுகிறது..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications