எள்ளோடு வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் என்னாகும்? மூலம், அனீமியாவை குணப்படுத்தும் எள் விதைகள்
சென்னை: எள் விதைகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன? விதைகள் எப்போதுமே நமக்கு ஆரோக்கியம் தரக்கூடியவையே.. ஏனென்றால், சம்பந்தப்பட்ட மரங்களின் ஒட்டுமொத்தமான சத்துக்களையும் ஒருசேர உள்ளடக்கி வைத்திருப்பதுதான் அதன மரங்கள்.. அந்தவகையில், எள் விதைகளின் பயன்பாடுகள் என்ன? யாரெல்லாம் சாப்பிடலாம்? யாரெல்லாம் தவிர்க்கலாம்? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எள் விதையில், கருப்பு, வெள்ளை என 2 வகையான எள் உண்டு.. எந்த நிற எள்ளாக இருந்தாலும் அத்தனையும் சத்துக்கள் நிறைந்தவையாகும்.. எள்ளில் கால்சியம், வைட்டமின் B, E, இரும்புச் சத்து, செஸமின், செஸமோலின், பைட்டோஸ்டீரால் போன்ற வேதிபபொருள், லினோலியிக், ஒலியிக் போன்ற அமிலம் மற்றும், சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.

இரும்புச்சத்துக்கள்
பெரும்பாலும் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் இருப்பதால்தான், சமையலில் தவிர்க்க முடியாத விதையாக உள்ளது.. எனவே எலும்புகள், பற்கள் வலுப்பட வேண்டுமானால், எள்ளை தொடர்ந்து பயன்படுத்தலாம்.. அதிலும் குழந்தைகளுக்கு இந்த எள் விதைகள் மிகவும் நல்லது. ஞாபகசக்தியை தரக்கூடியது.
இரும்புச்சத்துக்கள் அதிகமாக உள்ள எள்ளினை, ரத்த சோகை உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள், பனைவெல்லம் கலந்து சாப்பிட்டால், ரத்தம் ஊறிவரும்.. அல்லது கருப்பு எள் விதைகளை நீரில் ஊற வைத்து குடித்தும் வரலாம். இதனால் மாதவிடாய் சிக்கலும் விலகும்.
இதயம் ஆரோக்கியம்
குளிர்ச்சி தரக்கூடிய எள் விதை, கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடியது. ரத்த அழுத்தமும் சீராக இருக்க துணை புரிகிறது.. புரதம் நிறைந்த எள் விதைகள், உடலிலுள்ள காயத்தை ஆற்றக்கூடியது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் தீர்கிறது. குடலின் ஆரோக்கியம் மேன்மைப்படுகிறது.
இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஒரு டீஸ்பூன் வறுபட்ட எள்ளை, ஒரு டீஸ்பூன் வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். ஏனென்றால், வெல்லத்திலும், எள்ளிலும் நிறைவுறா கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால், இதயத்துக்கு வரும் ஆபத்து நீங்குகிறது. இதனை ரத்தசோகை உள்ளவர்களும் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளும் மருத்துவர் ஆலோசனையை பெற்று அரை ஸ்பூன் மட்டுமே சாப்பிடலாம்
சிறுநீரகம், கல்லீரல்
கல்லீரல், சிறுநீரகம் என முக்கிய உறுப்புகளுக்கு வலுவை தருகிறது.. குறிப்பாக கிட்னியில் கல் சேருவதை தடுக்கும் சக்தி இந்த எள் விதைகளுக்கு உண்டு. சர்க்கரை நோயாளிகள் துவர்ப்பு நிறைந்த எள்ளின் விதைகளை சாப்பிடும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு வீதம் குறைகிறது. கணையத்தில் இன்சுலின் சுரப்பியையும் பெருக்க தூண்டுகிறது.
சருமத்துக்கு கவசம் போல நின்று காக்ககூடிய சக்தி எள்ளின் விதைகளுக்கு உண்டு. இதனால் புண்கள், படை, அரிப்புகள் போன்ற தொந்தரவுகளும் சீராகும். சரும சுருக்கத்தை எளிதில் அண்டவிடாது இந்த விதைகள்.
புற்றுநோய் பாதிப்பு விலகும்
15 சதவீதம் நிறைவுற்ற கொழுப்பு, 41 சதவீதம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 39 சதவீதம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ள இந்த விதைகளை தினந்தோறும் 40 கிராம், இரு மாதத்துக்கு சாப்பிட்டு வரலாம். இதனால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் மெல்ல மெல்ல குறைவதுடன், நுரையீரல் புற்று, வயிற்று புற்று, என புற்றுநோய் செல்களையும் நீக்கிவிடும்.
இத்தனை நன்மைகள் இருந்தாலும், அனைவருக்குமே எள் சேர்வதில்லை.. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே, அலர்ஜி பாதிப்பிருப்பவர்கள், கீல்வாதம் பாதிப்பிருப்பவர்கள், எள்ளை தவிர்க்கலாம். மற்றவர்களும், 40 முதல் 50 கிராம் எள் விதயை வாரம் ஒருமுறை உணவாக சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications