"50% கீழ் சரிந்த விந்தணுக்கள்.." உலகம் முழுக்க இதே பிரச்சனை தான்! அதிர்ச்சியில் இளசுகள்! தீர்வு என்ன
வாஷிங்டன்: உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 45 ஆண்டுகளில் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்துள்ளது உறுதியாகி இருக்கிறது.
சர்வதேச அளவில் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதில் பல மாற்றங்கள் நமது உடலுக்குத் தீங்கு தருவதாகவே இருக்கிறது.

இதற்கிடையே Human Reproduction Update என்ற ஆய்விதழில் ஆண்களில் விந்தணுக்கள் எந்தளவுக்குக் குறைந்துள்ளது என்பது குறித்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
குறையும் விந்தணுக்கள்: கடந்த 1973 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மனிதர்களின் சராசரி விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் விந்தணுக்களின் அடர்த்தி 51.6 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை 62.3 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
1973 மற்றும் 2018 வரையில் வெளியான 223 ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்து ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆய்வுகள் 53 நாடுகளில் 57,000 ஆண்களின் விந்தணு மாதிரிகளை ஆய்வு செய்து வெளியிட்டன. அதைப் பகுப்பாய்வு செய்யும் போதே ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை 62% வரை குறைந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த விந்தணுக்கள் குறைவது என்பது ஏதோ ஒரே ஒரு பகுதியில் மட்டும் நடக்கும் சம்பவம் இல்லை. உலகெங்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவது தொடர்கதையாகவே இருக்கிறது. இந்த ஆய்விலும் கூட 53 நாடுகளில் ஆண்களின் விந்தணுக்கள் குறைந்தது உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications