தினசரி இந்த டீ குடிங்க போதும்.. சல்லுனு எடை குறையும்.. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்த ரகசியம்
சென்னை: உடலில் எடை கூடுவது.. குறிப்பாகத் தொப்பை என்பது இப்போது பலருக்கும் இருக்கும் பிரச்சினையாக இருக்கிறது.. அது எளிதாக வந்துவிடும் என்ற போதிலும் அதைக் குறைப்பது எவ்வளவு ஈஸியான வேலை இல்லை. இந்தச் சூழலில் ஒரு கலக்கலான டீ உங்கள் எடை இழப்பிற்கு உதவும் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கல்லூரியைத் தாண்டினாலே இப்போதெல்லாம் வயிற்றில் தொப்பை வந்துவிடுகிறது. இந்த தொப்பை மிக ஈஸியாக வந்துவிடும்.. அதேநேரம் இதைக் குறைப்பது அவ்வளவு ஈஸியான காரியம் ஒன்றும் இல்லை.

பல மாதங்கள் தீவிர உடற்பயிற்சி, கட்டுக்கோப்பான உணவுகள் இருந்தால் மட்டுமே தொப்பையைக் குறைக்க முடியும். இதன் காரணமாகவே எடை இழப்பு பயணம் என்பது அனைவரும் முடிக்கவே முடியாத ஒன்றாக இருக்கிறது.
எடை குறைப்பு: இந்தச் சூழலில் நீங்கள் தூங்கும் போதே உங்கள் எடை இழப்பு பயணத்தை விரைவானதாக மாற்ற ஒரு சுவையான மற்றும் கலக்கலான வழி இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது தொடர்பான தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர் கியாதி ரூபானி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். டீயை இதுபோல செய்து தினசரி குடித்து வந்தால் தொப்பை கொழுப்பு மடமடவென குறையும். மேலும், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு தொடங்கி பல்வேறு உடல்நிலை பாதிப்புகளைத் தீர்க்க இது உதவும்.
இரவு நேரங்களில் சர்க்கரையுடன் கூடிய உணவுகளைத் தவிர்த்துவிட்டு இந்த டீயை சூடாக ஒரு கிளாஸ் குடியுங்கள்.. உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைப்பது மட்டுமின்றி, உங்கள் எடை குறைப்பு பயணத்தையும் இது விரைவாக்கும். உடல் எடையைச் சட்டெனக் குறைக்க உதவும் இந்த டீயை செய்வது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அஜ்வைன் மற்றும் பெருஞ்சீரகம் விதைகள்: பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் இந்த இரண்டும் முக்கியமானது. அஜ்வைன் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.. இது உடலில் ஏற்படும் வீக்கம்.. வயிற்றில் சேரும் நீரைக் குறைக்கும். மறுபுறம் பெருஞ்சீரகம் செரிமானத்தை விரைவுபடுத்த உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
மஞ்சள்: இதில் ஏகப்பட்ட ஆன்டிஆக்ஸிடன்ட் அழற்சி எதிர்ப்புச் சக்திகள் உள்ளன. இது உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.. பசியைக் குறைக்கிறது இதன் மூலம் சாப்பிடும் உளவு தானாகக் குறையும். இப்படி இது மறைமுகமாக எடை இழப்பை ஊக்குவிக்கிறது..
கொத்தமல்லி விதைகள்: இந்த சிறிய விதைகள் சுவை மட்டுமின்றி உடலுக்கும் பல நன்மைகளைத் தரும். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்த இரண்டும் எடை குறைக்க ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.
பலன்கள்: இரவு தூங்கச் செல்லும் போது நீங்கள் டீ குடித்தால் அது உங்கள் தொப்பையைக் குறைப்பதைத் தாண்டி பல நன்மைகளை ஏற்படுத்தும். முதலில் ஹார்மோன் சமநிலைக்கு இது பெரியளவில் உதவும்.. குறிப்பாக 30 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஹார்மோனை சீர் செய்ய இந்த டீ உதவும். இதில் உள்ள மஞ்சள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும். மேலும், PCOS, அடினோமயோசிஸ் சிகிச்சைக்கும் உதவும்.
இது உங்களுக்கு நல்ல தூக்கத்தையும் தரும். இதில் உள்ள பொருட்கள் நல்ல அமைதியான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் மற்றும் எடையைக் கட்டுப்படுத்த முக்கியமாக உதவுகிறது.
எப்படிச் செய்ய வேண்டும்: எடை குறைப்பிற்குப் பயன்படும் இந்த டீயை செய்வதும் ஈஸி.. முதலில் 1 டீஸ்பூன் அஜ்வைன் விதை மற்றும் பெருஞ்சீரக விதைகள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ளவும். அடுத்து இந்த கலவையில் 500-600 மில்லி சூடான கொதிக்கும் நீரை ஊற்றவும். இந்த கலவையை அடுப்பில் வைத்து, குறைந்த வெப்பத்தில் 5 நிமிடங்கள் லேசாகக் கொதிக்க விட வேண்டும். அடுத்து 15 நிமிடங்களுக்கு டீயை அப்படியே விடவும்.. பிறகு டீயை வடிகட்டி, படுக்கைக்கு முன் மிதமான சூட்டில் அதைக் குடிக்கவும்.
இந்த கலக்கலான பானத்தை நீங்கள் தினசரி குடித்து வந்தால்.. அது எடை இழப்பிற்கு பெரியளவில் உதவும். அதேநேரம் ஒவ்வொருவரின் உடலும் தனித்துவமானது. எனவே, இதை நீங்கள் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடலில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications