வெயிலால் கருத்த முகத்தை சிவப்பாக்க பேஷியல் செய்யலாமா.. என்ன சோப்பை பயன்படுத்தலாம்.. டாக்டர் டிப்ஸ்!
சூரிய வெளிச்சத்தில் போனால் ஸ்கின் டிரையாகுமா?- டாக்டர் விளக்கம்
சென்னை: சூரிய வெளிச்சத்தில் போனால் ஸ்கின் டிரையாகுமா, அதெல்லாம் தவறு என்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் முருகுசுந்தரம்.
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகுசுந்தரம் அளித்த கேள்வி பதில் வடிவ பேட்டி.
கேள்வி: சூரிய வெளிச்சத்தில் போகும் போது ஸ்கின் டிரை ஆகும் என்பதால் சிலர் மாய்ச்சரைஸரை பயன்படுத்துவார்கள் அது நல்லதா?
பதில்: சூரிய வெளிச்சத்தில் போனால் ஸ்கின் டிரையாகும் என்பதே தவறானது. நான் சொன்னது போல் காற்றில் வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால் வியர்வைதான் அதிகமாக வரும். எனவே ஸ்கின் ஆயிலாகவும் மாய்ச்சரைஸிங்காகவும் தான் இருக்கும். அதற்கு மேல் எந்த மாய்ச்சரைஸிங் கிரீமையும் போட வேண்டிய அவசியம் இல்லை.

சிகிச்சை
கேள்வி: தோல் கருப்பாவதால் அதற்கான சிகிச்சைகளை சிலர் எடுக்கிறார்கள். அது நல்லதா
பதில்: தோல் நிறம் மாறுவதற்கு முன்னர் அதை நாம் தடுத்தாக வேண்டும். அப்படி தடுக்க முடியவில்லை, தோல் நிறம் மாறிவிட்டது என்றால் அதற்கு சூரிய ஒளி மட்டுமே காரணம் என நாம் சொல்லிவிட முடியாது. உடல் பருமன், விட்டமின் சி குறைபாடு, இரும்பு சத்து, புரத சத்து குறைபாடு, தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கும் தோல் நிறம் மாறலாம். எல்லாரும் வெயிலில் போகும் போது ஒரு சிலர் மட்டும் ஏன் கருக்கிறார்கள் என்பதை பார்த்து நாம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கருப்பிலிருந்து வெள்ளையாகுறேன் என சிலர் சில கிரீம்களை பயன்படுத்துவார்கள். ஆனால் அது நமக்கு ரிசல்ட்டை கொடுக்காமல் ஒவ்வாமையைதான் கொடுக்கும்.

பேஷியல்
இந்த தோல் டார்ன் ஆவது என்பது தோலையும் தாண்டி உள்ளே ஏற்படக் கூடிய ஒன்று. உள்ளுக்குள்தான் மருந்து கொடுத்து சரி செய்ய வேண்டும். கெமிக்கல் பீலிங், பேஷியல் இவையெல்லாம் பலவிதமான ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஒருவரின் தோல் கருக்கிறது என்றால் அவருடைய தோல் சென்சிட்டிவ்வாக இருக்கிறது என அர்த்தம். சூரிய ஒளியினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு பேஷியல் கிரீம், பீல்ஸ் இவையெல்லாம் கொடுத்தால் அவர்களுடைய பாதிப்பு அதிகரிக்கும்.

வெயில் நேரம்
கேள்வி: வெயில் நேரத்தில் போகும் போது நமது உடல் நீர் சத்தை அதிகமாக இழக்கும். தோலுக்கென ஏதாவது டயட் இருக்கிறதா?
பதில்: உடல்நலத்தை வெளிப்படுத்துவதுதான் தோல்நலம். தோலுக்கென தனியா ஒரு வியாதி ஏற்படுவதோ, அதற்கென தனியாக ஒரு கேரோ கிடையாது. உடல்நலம், மனநலம் இரண்டும் சீராக இருந்தால் தோல், முடி, நகம் நன்றாக இருக்கும். நாம் பெரும்பாலும் மாவு சத்து உள்ள உணவுகள், துரித உணவுகளைதான் பெரும்பாலும் சாப்பிடுகிறோம். நாம் எடுத்துக் கொள்ளகூடிய உணவில் பெருமளவு புரதம் இருக்க வேண்டும். எல்லா உறுப்புகளுமே புரதத்தால் கட்டமைக்கப்படுகிறது. கார்போஹைடிரேட் நமக்கு அவ்வளவாக தேவையில்லை. ஏனென்றால் உடல் உழைப்பு நம்மிடம் இல்லை. வைட்டமின் சேர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் தோலுக்கு முக்கியமானது விட்டமின் சி. தோலை புத்துயிர் பெற வைப்பதற்கு விட்டமின் சி முக்கியம். விட்டமின் இ, ஏ, பி12, டி(தோலால் உருவாக்கக் கூடிய ஒரு பிரத்யேக விட்டமின்) ஆகியவை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சோப்பு எப்படி தேர்வு செய்வது?
கேள்வி: சோப்புகளில் நாம் எப்படிப்பட்டவை தேர்வு செய்ய வேண்டும்?
பதில்: சோப்புகளில் பலவிதமான சோப்புகள் இருக்கின்றன. தோலுக்கு உகந்த சோப்புகளை பயன்படுத்த வேண்டும். ஒரு சோப்பின் பிஎச் (ph) வேல்யூ 5.5, 6 அல்லது 7 க்குள் இருக்க வேண்டும். இதை கண்டுபிடிக்க லிட்மஸ் பேப்பரை சோப்பின் மீது வைத்தால் பிஎச் அளவு தெரிந்து விடும். கட்டி சோப்புகளைவிட லிக்விட் சோப்புகள் சிறந்தவை. எல்லா சோப்புகளின் பிஎச் அளவும் 9க்கு மேல் இருக்கிறது. நீரின் பிஎச் அளவு 7. எனவே சோப்பு, நீரில் கலக்கும் போது காரத்தன்மை அதிகமாகிறது. லிக்விட் சோப்பில் நாம் அதிக அளவு தண்ணீரை சேர்க்க தேவையில்லை என்பதால், அமிலத்தன்மையை குறைக்க வாய்ப்பிருக்கிறது. அதிக வாசனை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது தவறு. இவ்வாறு டாக்டர் முருகுசுந்தரம் தெரிவித்துள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications