எல்லோரையும் சிரிக்க வைக்க மனோபாலா..கல்லீரலை கவனிக்காமல் விட்டது ஏன்? இதை மறக்காம சாப்பிடுங்க
சென்னை: நடிகர் மனோபாலா எல்லோரையும் சிரிக்க வைத்தவர். மரணத்தை கூட இயல்பாக எடுத்துக்கொண்டு பேசியவர். சினிமாவில் சிரிக்க சிரிக்க பேசி நடித்து அனைவருக்கு உதவி செய்த மனோபாலா தனது உடல் நலத்தை கவனிக்காமல் விட்டு விட்டார். கல்லீரல் பிரச்சினையே அவரது மரணத்திற்கு காரணமாகி விட்டது. மனித உடலின் முக்கிய பாகமான கல்லீரலை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் ராஜேஸ்குமார் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
எழுத்தாளர் ராஜேஸ்குமார் தனது முகநூல் பக்கத்தில், Gastro டாக்டர் ஒருவர் சற்று முன்பு என்னிடம் செல்போனில் பேசும் போது ரொம்பவுமே கவலைப்பட்டார்."ஏப்ரல் 19 ம் தேதி லிவர் டே ( Liver Day) வந்தது. அதை யாருமே கண்டு கொள்ளவில்லை. லிவர் மட்டும் தனியாக தன்னுடைய நாளை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு போய் விட்டது.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் லிவர் சிரோஸிஸ் (Liver cirrhosis) எனப்படும் கல்லீரல் சுருக்க நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இளைஞர்களிடையே பல மடங்கு அதிகரிக்கும். காரணம் இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் மது குடிப்பவர்களாக மாறி வருவதுதான்.லிவர் சிரோஸிஸ் வந்து விட்டால் அதற்குப் பிறகு வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் நரகம்.
உயிரோடு இருக்கும் வரை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்
மது குடிக்கும் பழக்கத்தை உடனடியாக நிறுத்தி கல்லீரலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க காட்டும் ஆர்வத்தில் பாதியாவது லிவரைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் காட்ட வேண்டும். இதை உங்கள் முகநூல் பக்கத்தில் போடுங்கள் " என்றார். போட்டுவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
கல்லீரலை பாதுகாக்க நாம் சில உணவுகளை சாப்பிட வேண்டும். சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை உணவுகளில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள குளோரோபில் நச்சு ரசாயனங்களை நீக்க உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்துவது, புரதத்தை உருவாக்குவது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை சீராக பயன்படுத்துவது என பலவிதமான வேலைகளை செய்வது கல்லீரல். ஆண்களைப் போலவே, பெண்களும் கல்லீரல் தொடர்பான நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு கல்லீரலில் உண்டாகும் நோய்களில் முக்கியமானது 'சிரோசிஸ்' எனும் 'கொழுப்பு கல்லீரல் நோய்'. அதிகப்படியான கொழுப்பினால் ஏற்படும் வீக்கம் 'சிரோசிஸ்' எனப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் மது அருந்துவதாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும், அதிக உடல் எடையாலும் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு வைட்டமின் பி, சி, தாதுக்கள் மற்றும் குளுட்டோதயோனின் நிறைந்த உணவுகள் உதவும்.
கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை உணவுகளில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள குளோரோபில் நச்சு ரசாயனங்களை நீக்க உதவும். காபியில் உள்ள காபின், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகமாக உள்ளன. இவை சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்கும்.
பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகளில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், கல்லீரலில் கெட்டக் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன. வெள்ளைப்பூண்டில் உள்ள அல்லிசின், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் நச்சு நீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அல்லிசின் என்பது ஒரு கந்தக கலவை ஆகும். இது ஆன்டிஆக்ஸிடன்டு மற்றும் ஆன்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. செலினியம், இயற்கையாகவே நச்சு நீக்கும் கனிமமாகும். இது ஆன்டிஆக்ஸிடன்டுகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம், கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.
பீட்ரூட்டில் இதில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளன. இவை நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இதனால் நச்சுக் கழிவுகள் விரைவாக உடலில் இருந்து வெளியேறுகின்றன.
முட்டை, சிட்ரஸ் பழங்கள், இஞ்சி, மஞ்சள், தேநீர் மற்றும் மீன் போன்ற உணவுகளும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவையாகும்.

வெள்ளை சர்க்கரை, ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது. மது, சிகரெட் போன்றவை முற்றிலும் தவிர்த்து விட்டாலே போதும் கல்லீரலை கவனமாக பத்திரமாக பாதுகாக்கலாம்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications