அதிக குறட்டை.. திடீர் உடல் எடை குறைவு.. அசால்ட்டாக இருக்கக் கூடாத சில அறிகுறிகள்.. என்னென்ன பாருங்க
சென்னை: பெரும்பாலான நோய்கள் ஆரம்ப நிலையில் உடலுக்குள் வந்ததும் சில அறிகுறிகளை உடல் காட்டும். இதை அஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ளாமல், உடனே தேவையான மருத்துவ ஆலோசனையை பெற்றால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அந்த வகையில், தவிர்க்க கூடாத சில அறிகுறிகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல்வார்கள்.. அதேபோலத்தான், நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், எந்த ஒரு செயலையும் நம்மால் நினைத்தபடி செய்ய முடியும். மனிதனுக்கு உடல் ஆரோக்கியமே மிகப்பெரிய பாக்கியமாக பார்க்கப்படுகிறது.

இன்றைய நவீன யுகத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் போன்றவற்றால் பல நோய்களும் அழையா விருந்தாளியாய் உடல் எனும் நமது உடலுக்குள் வந்து செட்டில் ஆகிவிடுகின்றன. எப்போதும் பரபரப்பு,... எதிலும் பிசியாக இருக்கும் மக்கள்... நம் உடல் காட்டும் சின்ன சின்ன அறிகுறிகளை கவனிப்பது இல்லை..
இத்தகைய அறிகுறிகளே.. உடலுக்குள் வரப்போகும் பெரிய ஆபத்தை காட்டுவதாக அமைகின்றன... அந்த வகையில் அவசியம் தவிர்க்க கூடாத சில அறிகுறிகளைத்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.
பேச்சு குளறுதல்: பேச்சு குளறுதல் - திடீரென பேச்சில் ஏற்படும் மாற்றம் சரிவர பேச முடியாத நிலை ஏற்படுவது பக்கவாதம், வளர்ச்சிதை மாற்றங்களுக்கான அறிகுறிகளில் ஒன்றாகும் என்று பிரபல மருத்துவ நிபுணர் ரூஹி பிர்சதா கூறியுள்ளார்.
மனநிலையில் மாற்றம்.. அதாவது குழப்பமான நிலை ஏற்படுவது போன்றவையும் அசால்ட்டாக விடக்கூடாத அறிகுறிகளில் ஒன்று என்கிறார் டெல்லியை சேர்ந்த மருத்துவ நிபுணர் ஷலிமர் பாக். ஏனெனில், இந்த அறிகுறிகள், மூளையில் ஏற்பட்ட காயம், பக்கவாதம் ஆகியவை ஏற்படுவதற்கான அறிகுறிகளாக உள்ளது. எனவே, நீண்ட காலமாக இதுபோன்ற அறிகுறிகள் இருந்து கொண்டே இருந்தால் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
நெஞ்சு வலி: இந்தியாவில் இருதயம் தொடர்பான நோய்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 2022 ஆம் ஆண்டில் மட்டும் மாரடைப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 12.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அந்த ஆண்டில் மட்டும் 32,457-க்கும் மேற்பட்டவர்கள் மாரடைப்பால் பலியாகியுள்ளனர்.
திடீரென ஏற்படும் நெஞ்சுவலி, நெஞ்சு பகுதியில் ஏற்படும் இறுக்கமான நிலை, இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் வரை அதே இறுக்கமான நிலை தொடர்வது போன்ற அறிகுறிகள், உங்களுக்கு இருதய பிரச்சினைகள் இருப்பதை காட்டும் அறிகுறிகளில் ஒன்று என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
உடல் எடை குறைதல்: திடீரனெ உடல் எடை குறைதல் அதாவது எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்யாமல் 6 மாதங்களில் 4.5 கிலோவிற்கு மேல் குறைந்தால் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. அதேபோல், சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் கலந்து செல்வது போன்றவை தொடர்ந்து தென்பட்டால் சிறுநீர் நோய்த்தொற்று, பெருங்குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே ஆரம்ப நிலையில் மருத்துவர்களிடம் சென்றால் எந்த சிக்கலும் இன்றி தவிர்க்க முடியும்.
தொடர் இருமல்: தொடர்ந்து இருமல் நீடித்துக்கொண்டே இருப்பது, கரகரப்பான குரல் போன்றவை சுவாச பிர்ச்சினைகள், அலர்ஜிகள், ஏன் தொண்டை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக கூட இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அதுபோக அசாதாரண சத்தத்தில் குறட்டை விடுதல், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான அறிகுறிகளில் ஒன்றாக உள்ளதாம். எனவே, மிகவும் திவீரமான உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதிகப்படியான களைப்பு: உடல் உழைப்பு ஏற்படும் போது, வெளிப்புற தட்பவெப்ப நிலையை வைத்து களைப்பு ஏற்படுவது மிகவும் சாதாரண விஷயமாகும். எனினும், அதிகப்படியான களைப்பு உங்கள் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் இருந்தால், அனீமியா, தைராய்டு கோளாறுகள், மனசோர்வு ஆகியவைக்கான அறிகுறிகளாக இருக்கலாம்
உடலில் ஏற்படும் அதிகப்படியான அரிப்புகள், உதடுகளில் ஏற்படும் புண்கள் போன்றவையும் அலர்ஜியை காட்டும் அறிகுறிகளாக உள்ளன. இந்த பாதிப்புகள் மிக அதிகமாக தொடர்ச்சியாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது கட்டாயம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications