என்னங்க சொல்றீங்க.. தர்ப்பூசணி சாப்பிட்ட உடன் தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சாப்பிட கூடாதா.. ஏன்?
சென்னை: தர்ப்பூசணி சாப்பிட்ட உடன் சாப்பிடும் சில உணவு பதார்த்தங்களால் செரிமான பிரச்சினைகள் உள்பட வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனவே தர்ப்பூசணி சாப்பிட்ட உடன் சில உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. அந்த உணவுகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலால் வெளியில் சென்று விட்டு வீடு திரும்புவதற்கும் மக்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. அதுவும் நண்பகல் வேளைகளில் வெளியில் செல்ல நேர்ந்தால் கண்டிப்பாக குளிர்ச்சியான பானங்களை அருந்தியே ஆக வேண்டும் என்ற அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது.

இதனால் சாலையோரங்களில் தற்போது பல இடங்களிலும் இளநீர், சர்பத் போன்ற உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் பானங்கள் விற்கப்படுவதை காண முடிகிறது. அதேபோல், வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் தர்பூசணி பழங்களின் விற்பனையும் வெயில் காலத்தில் படு ஜோராக இருக்கும். மக்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்த தர்பூசணி பழங்களை வாங்கி விரும்பி சாப்பிடுவதுண்டு.
நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஏராளமான நன்மைகள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. நம் உடலுக்கு நீர்ச்சத்து கொடுக்கக் கூடிய இந்த பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைவதோடு...வைட்டமின் சத்துக்களும் கிடைக்கின்றன. குறிப்பாக தர்பூசணியில் வைட்டமின் சி சத்து உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் தர்பூசணி பழத்தில் உள்ளது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் விருப்பமான பழமாக இருக்கும் இந்த தர்பூசணியில் ஏராளமான ஊட்டசத்துக்கள் நிறைந்து இருந்தாலும் தர்ப்பூசணி சாப்பிட்ட பிறகு சில உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில், தர்ப்பூசணி சாப்பிட்ட உடன் சாப்பிடும் சில உணவு பதார்த்தங்களால் செரிமான பிரச்சினைகள் உள்பட வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனவே தர்ப்பூசணி சாப்பிட்ட உடன் எந்தெந்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது என்ற விவரங்களை பார்க்கலாம்.
1. தர்பூசணி சாப்பிட்ட உடன் பால் அருந்தக் கூடாது:
தர்ப்பூசணி பழம் சாப்பிட்டுவிட்டு உடனடியாக பால் சாப்பிடக்கூடாது. ஏனெனில், தர்ப்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. எனவே உடனடியாக பால் பொருட்களை சாப்பிட்டால் இரண்டும் ஒன்று வினை புரிந்து வயிறு உப்புசம் மற்றும் வாய்வு பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. செரிமானக் கோளாறையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
2. புரோட்டீன் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்:
புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த மீன்கள், பயிறு வகைகள் , இறைச்சி போன்ற உணவு பொருட்களை தர்ப்பூசணி சாப்பிட்ட உடன் எடுத்துக்கொள்ளக் கூடாது. தர்ப்பூசணியில் வைட்டமின்களும் மினரல்களும் உள்ளன. மாவுச்சத்தும் தர்ப்பூசணியும் உள்ளது. எனவே புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது செரிமானத்தை பாதிக்கும்.
3. முட்டை சாப்பிடக்கூடாது:
தர்ப்பூசணி சாப்பிட்ட உடன் முட்டை சாப்பிடுவது வயிறு சார்ந்த பல பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது. புரோட்டின் மட்டும் இன்றி முட்டையில் ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இதனால், தர்ப்பூசணி சாப்பிட்டு விட்டு முட்டை சாப்பிடுவதால் செரிமானம் ஏற்படுவதை சிக்கல் ஏற்படுவதோடு.. மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும்.
எனவே, தர்ப்பூசணி சாப்பிட்ட உடன் மேற்சொன்ன உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆகும். அதாவது தர்ப்பூசணி சாப்பிட்டுவிட்டு 30 நிமிடங்கள் கழித்த பிறகே இத்தகைய உணவுகளை சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications