"பெரிய தப்பு.." பிரிட்ஜில் தப்பி தவறியும் வைக்க கூடாத பொருட்கள்.. அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
சென்னை: இந்த காலத்தில் பெரும்பாலானோர் மீதியாகும் உணவுகள் மட்டுமின்றி பிரஷ்ஷாக வாங்கும் அனைத்து காய்கறிகளையும் கூட பிரிட்ஜில் வைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி வைக்கத் தேவையே இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சில பொருட்களை பிரிட்ஜில் வைத்தால் அது பாதிப்பையே ஏற்படுத்தும். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நம்மில் பெரும்பாலானோர் ஃபிரிட்ஜ் தான் அனைத்து விதமான உணவுகளையும் பாதுகாக்க ஒரே வவி என நம்புகிறோம். குளிர்ச்சியாக வைத்தால் உணவு நீண்ட காலம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என நினைக்கிறோம். ஆனால், இது எப்போதும் உண்மையல்ல. ஃபிரிட்ஜ் பாக்டீரியா வளர்ச்சியை மெதுவாக்கினாலும், சில உணவுப் பொருட்களை இது சேதப்படுத்தவும் கூடும்.

10 பொருட்கள்
அப்படி பிரிட்ஜில் ஒருபோதும் வைக்கக்கூடாத 10 முக்கியமான பொருட்களையும் அதற்கான காரணங்களையும் இங்கே விரிவாகப் பார்ப்போம்.
1. தக்காளி: பிரிட்ஜில் தக்காளியை வைக்கும்போது, அதன் குளிர் காற்று தக்காளியின் அமைப்பைச் சிதைத்து, செல் அமைப்பை உடைத்து மென்மையாக்கும். இதனால் அதன் இனிப்பும் சுவையும் மங்கக்கூடும். தக்காளியை நேரடியாகச் சூரிய ஒளி படாத ரூமில் வைப்பதே போதுமானது. வெளியே இருந்தாலே சில நாட்கள் வரை நன்றாகவே இருக்கும்.
2. உருளைக்கிழங்கு: ஃபிரிட்ஜில் வைக்கும்போது, மாவுச்சத்து விரைவாகச் சர்க்கரையாகி, இனிப்பு தன்மையை கூட்டும். சமைக்கும்போது சீரற்ற பழுப்பு நிறமாகும். எனவே, அவற்றைச் சூரிய ஒளி படாத, உலர்ந்த கூடைகளில் வைக்கவும். பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, காகிதப் பைகளை பயன்படுத்துங்கள்.
வெங்காயம் & பூண்டு
3. வெங்காயம்: இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் வெங்காயத்தைக் கூட பிரிட்ஜில் வைக்கிறார்கள். வெங்காயம் ஃபிரிட்ஜில் வைக்கும்போது ஈரப்பதத்தை உறிஞ்சி, சீக்கிரம் மென்மையாகவும், பூஞ்சை பிடித்தும் கெட்டுப்போகும். குளிர்ந்த சூழல் அதன் சுவையையும் இழக்கச் செய்யலாம். எனவே, வெங்காயத்தை எப்போதும் உலர்ந்த, நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தனியே சேமிக்கவும்..
4. பூண்டு : ஃபிரிட்ஜில் பூண்டு வேகமாக முளைத்து, ரப்பர் போன்றதாக மாறிவிடும். கசப்புச் சுவையும் ஏற்படலாம். எனவே, பூண்டுக் கட்டிகளைக் குளிர்ந்த, உலர்ந்த, நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் சேமிப்பதே அதன் சுவையையும், புதிய தன்மையையும் பாதுகாக்கும்.
5. ரொட்டி: பலரும் ரொட்டியை ஃபிரிட்ஜில் வைக்கிறார்கள். இதன் மூலம் பூஞ்சையைத் தடுக்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் பிரிட்ஜில் வைக்கும்போது, அது ரொட்டியை வேகமாக உலர்த்தி, பழையது போன்ற சுவையைக் கொடுக்கும். எனவே, ரொட்டியை ரூம் வெப்பநிலையில், காற்றுப் புகாத வகையில் வைக்க வேண்டும்..
தேன் & காபி
6. தேன்: பொதுவாகவே தேன் கெட்டுப்போகாது. ஆனால் ஃபிரிட்ஜில் வைக்கும்போது, அது தடிமனாகவும் மணல் போன்றதாகவும் மாறும்.. பயன்படுத்துவதும் கடினமாகும். இதைத் தவிர்க்க, தேனை காற்று புகாதபடி இறுக்கமாக மூடி அறை வெப்பநிலையில் சேமிப்பதே சிறந்தது.
7. காபி: ஃபிரிட்ஜில் காபியை வைக்கும்போது, அது உள்ளே இருக்கும் மற்ற வாசனைகளையும், ஈரப்பதத்தையும் உறிஞ்சி, அதன் சுவையைக் கெடுக்கும். எனவே, காபியை காற்றுப் புகாத குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிப்பதே அதன் மணத்தையும் சுவையையும் பாதுகாக்கும்.
தேவைப்படும் நேரத்தில் வைக்கலாம்
8. வாழைப்பழம்: குளிர்ந்த வெப்பநிலை வாழைப்பழங்களை வைக்கும்போது, அது தோலை கருமையாக்கிவிடும். உள்ளே உள்ள பழம் சரியாகப் பழுக்காமலும் சுவை குறைந்தும் போகலாம். இவற்றை அறை வெப்பநிலையில் வைக்கவும். முழுமையாகப் பழுத்தவுடன், விரைவாகக் கெட்டுப்போவதைத் தடுக்க வேண்டும் என்றால் சில நாட்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
9 அவகாடோ: பிரிஜ்ஜில் அவகாடோ காயாக வைத்தால்.. அது எவ்வளவு நாள் ஆனாலும் பழுக்காது.. இயற்கையாகப் பழுப்பதற்கு அறை வெப்பநிலை தேவை. பிரிட்ஜ் அதன் பழுக்கும் தன்மையைத் தடுத்துவிடும். எனவே, அவகாடோக்கள் காயாக இருக்கும்போது சமையலறையிலேயே வைக்கவும். பழுத்தவுடன், தேவைப்பட்டால் ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
10. சமையல் எண்ணெய்கள்: சமையல் எண்ணெய்யை யார் வைப்பார்கள் எனச் சந்தேகம் வரலாம்.. ஆனால், இதையும் சிலர் பிரிட்ஜில் வைக்கவே செய்கிறார்கள். சமையல் எண்ணெய்கள் ஃபிரிட்ஜில் கெட்டியாகி, கலங்கலாக மாறக்கூடும்.. இது பயன்படுத்துவதைக் கடினமாக்கும். சுவையையும் பாதிக்கலாம். எண்ணெய்களை வெப்பம், சூரிய ஒளியில் இருந்து விலக்கி, குளிர்ந்த இருண்ட அலமாரியில் சேமிப்பதே தரத்தை உறுதி செய்யும்.
எதற்குப் பயன்படும்!
அதேநேரம் பிரிட்ஜ் தேவையே இல்லை எனவும் சொல்ல முடியாது. ஒவ்வொரு உணவும் வெப்பநிலைக்கு ஒவ்வொரு விதமாக எதிர்வினையாற்றுகிறது. பால் பொருட்கள், இறைச்சி, சமைத்த மீதமுள்ள உணவுகள் பாதுகாப்பிற்காக பிரிட்ஜ் கட்டாயம் தேவை. அதேநேரம் புதிய காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் பிரிட்ஜில் வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
-
1000 கிமீ நீண்ட மழை மேகங்கள்.. கொட்டி தீர்க்குதே கனமழை.. இப்படி ஒன்று நடந்ததே இல்லை போல -
கோடை காலம் வந்தாச்சு! சுட்டெரிக்கும் வெயில்! சருமம் கருப்பாகாமல் இருக்க 7 டிப்ஸ்! நோட் பண்ணிக்கோங்க -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?














Click it and Unblock the Notifications