தொடை சதை டேஞ்சர்.. பெரிய தொடைகள் இருக்கா? தொடை கொழுப்பை குறைக்கணுமா? பெண்களுக்கு குட் நியூஸ்.. குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு பெரிய தொடைகள் உள்ளனவா? அப்படியானால் பயப்படவே வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.. என்ன காரணம்?

பெண்கள் சிலருக்கு அகலமான தொடைகள் இயற்கையாகவே அமைந்துவிடுவதால் பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.. உடல்எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த பெரிய தொடையை மட்டும் முதலில் குறைத்தால் போதும் என்றாகிவிடுகிறது.. அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும் அமைந்துவிடுகிறது...

Super Benefits of Big Thighs Fat for Women and Are these the Health reasons of big thighs for women


அசௌகரியம்:
அதிலும் ஜீன்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்ட மார்டன் டிரஸ்களை அணியவும் அசௌகரியமாக நினைப்பார்கள்.. பெரிய தொடைகள் காரணமாக, இப்படி சங்கடங்கள் நிறைய இருந்தாலும், சில நன்மைகளும் இருக்கிறதாம்.

ஹார்வர்ட் ஹெல்த் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், "பெண்களின் தொடைகளில் எடை அதிகரிப்பதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் முக்கிய காரணமாக உள்ளது. இந்த ஹார்மோன் பெண்களின் கொழுப்பு செல்களை அதிகரிக்க செய்வதால், தொடைகளைச் சுற்றி கொழுப்பு சேருகிறது. பருவமடையும்போது பெண் ஹார்மோன்களின் அளவுகள் அதிகரிக்க துவங்குகிறது" என்று தெரிவித்திருந்தது.

ஆய்வுகள்: அதுபோலவே, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சர்ச்சில் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

அதில் உடலின் மற்ற உறுப்புகளை விட, தொடை அல்லது பிட்டம் அதிக எடை கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள்..

கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிக்கும்.. அவர்களுக்கு உண்டாகும் பெரிய தொடைகள் உடல் எடையை சுமக்க உதவுகின்றன.. பிரசவ காலத்திலும், குழந்தை பம்ப் செய்வதில் அதிக சிரமம் இருக்காது.. பிரசவத்தின்போது பெரிய தொடைகள் பெரிதும் உதவுகின்றன. கர்ப்பத்திற்குப் பிறகு உடல் பலவீனமடைய தொடங்கிவிடும்.. அப்போதும்கூட, கீழ் உடலை தாங்கி பிடிப்பது, பெரிய தொடைகள்தானாம்.

அதாவது, கொழுப்புச்சத்தை எடுத்துக்கொண்டோமேயானால், ஆண்கள், பெண்கள் இவர்களில் யாருக்கு அதிக கொழுப்பு உடம்பில் சேர்ந்தாலும் அது பிரச்சனைதான்.. ஆனால், பெண்களை பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. இதில் ஆண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். காரணம், ஆண்களுக்கு இந்த கொழுப்புகள், தொப்புளை சுற்றித்திரளும்.. இது மிகவும் ஆபத்தானது.. இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அதிகமாக தாக்கவும் வாய்ப்புள்ளது.

பிரச்சனையில்லை:
இதுவே, பெண்களுக்கு, கொழுப்புகள், பிட்டங்களிலும், தொடைகளிலும் சேர்ந்துவிடுகிறது.. எனினும், தோலுக்கு அடியில் மட்டுமே கொழுப்புகள் திரளும்... இதனால் பெரிய அளவுக்கு பிரச்சனை இல்லையாம்.

ஏனென்றால், நம்முடைய உடலிலுள்ள தசைகளிலேயே மிகப்பெரியது தொடை தான்.. பரம்பரை, வயது, சில சமயங்களில் உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் தொடைகள் பெரியதாக உணர வைக்கும். ஆனால், இந்த பெரிய தொடையின் உதவியால்தான், எடையை நம்மால் பராமரிக்க முடிகிறது..

எப்படி குறைப்பது: வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை செய்வதால், தொடைகள் வலுவாக இருக்கும்... இதைத்தவிர, தினமும் ஸ்குவாட் (squad), லஞ்சஸ் (lunges) சிறிது நேரம் செய்வதால் தொடை தசைகளின் இயக்கம் ஏற்படுகிறது... இது நீண்ட நேரம் உட்கார்ந்த பிறகும் அவர்களை உறுதியாக வைத்திருக்கும்... அதேபோல, மாடிப்படிக்கட்டு ஏறுவது தொடைகளுக்கு மிகப்பெரிய பலத்தை தருகிறதாம்..

எனவே, பெரிய தொடைகள் இருந்தால் பெண்கள் கவலையேப்படவேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.. அதேசமயம், வாக்கிங், ஜாக்கிங்கும், தினசரி முக்கியம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+