கொய்யா இலை டீயில்.. கொட்டி கிடக்கும் நன்மைகள்.. ஆரோக்கியமான, வலுவான விந்தணுக்களை பெற உதவும் உணவுகள்
சென்னை: ஆண்களின் விந்தணு உற்பத்தி எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வுகள் பகீரை கிளப்பி வரும்நிலையில், விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
சமீபகாலமாகவே, உலகமெங்கும் ஆண்களின் விந்தணுக்கள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.. 53 நாடுகளில் ஆண்களின் விந்தணுக்கள் குறைந்தது உறுதியாகி இருப்பதாக ஆய்வுகளும் சொல்கின்றன.
சில நாட்களுக்கு முன்புகூட, Human Reproduction Update என்ற ஆய்விதழில், ஆண்களில் விந்தணுக்கள் குறைவு குறித்து சர்வே ஒன்று வெளியாகியிருந்தது.. அதில், எந்த அளவுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது பற்றின முடிவுகளும் வெளியாகியிருந்தன.

ஆய்வுகள்: அதாவது, கடந்த 1973 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாம்.. குறிப்பாக, விந்தணுக்களின் அடர்த்தி 51.6 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம்.. மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கையும் 62.3 சதவீதமாக குறைந்துள்ளதாக அந்த ஆய்வுல் தெரியவந்துள்ளது.
1973 முதல் 2018 வரையில் வெளியான 223 ஆவணங்களை பகுப்பாய்வு செய்து, இந்த ஆய்வினை ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.. அந்தவகையில் மொத்தம் 53 நாடுகளில் 57,000 ஆண்களின் விந்தணு மாதிரிகளை ஆய்வு செய்து வெளியிடப்பட்டன.. அதை பகுப்பாய்வு செய்யும்போதே ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை 62 சதவீதம் வரை குறைந்தது தெரிய வந்ததாம்.
சத்து நிறைந்த உணவுகள்: விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு ஃபோலேட் அல்லது வைட்டமின் B9 இன்றியமையாததாக உள்ளது.. ஃபோலேட் நிறைந்த உணவுகள், அதாவது இலை கீரைகள், பருப்பு வகைகள், வலுவூட்டப்பட்ட தானியங்கள் போன்றவை முக்கியமானதாகும்.
வைட்டமின் E சத்தானது, கொழுப்பில் கரையக்கூடிய ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்... மலட்டுத்தன்மையுடைய ஆண்களில் இது விந்தணுக்கள் இயக்கம் விந்தணு முட்டைகளின் நீந்தும் திறன் ஆகியவற்றை அதிகரிக்க செலினியத்துடன் வைட்டமின் E பயனுள்ள சத்தாக இருக்கும் என்று 2011ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீரையானது, கருவுறுதலை சாதகமாக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.. ஃபோலிக் அமிலத்தின் சரியான அளவையும் ஆண்கள் சரியாக பராமரிகக வேண்டும்.. காரணம், விந்தணுக்களின் வடிவத்தை பாதுகாப்பதிலும் அசாதாரணங்களை தடுப்பதிலும் முக்கிய பங்கு இந்த ஃபோலிக் அமிலத்துக்கு உண்டு என்கிறார்கள்.
விந்தணு ஆரோக்கியம்: விந்தணு ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துவதில், வால்நட்களுக்கு பெரும்பங்கு உண்டு.. அவற்றில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், விந்தணுக்களை அதிகரிக்க உதவுகிறது.. ஆளி விதை, சியா விதைகளும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம். பழங்களில் காணப்படும் வைட்டமின் C, போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆண்களின் கருவுறுதலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதேபோல, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பூசணி விதைகளும் பெரிதும் உதவுகின்றன.. இந்த பூசணி விதைகளில் பாஸ்பரஸ், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாமிரம், துத்தநாகம் சத்துக்கள் உள்ளதால், உடல் வலிமை பெறுகிறது.. முக்கியமாக, பூசணிக்காயின் விதைகளில் ஜிங் சத்து அதிகளவில் இருப்பதால், ஆண்கள் இந்த பூசணிக்காயின் விதைகளை தவிர்க்கக்கூடாது என்கிறார்கள்.
பூசணி விதைகள்: இந்த பூசணிக்காயின் விதைகள் ஆண்களின் ஹார்மோன்களுக்குத் தேவையான சத்துக்கள் அடங்கியிருப்பதால், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் பெருக்கக்கூடியது..
மீன்களை பொறுத்தவரை, சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாக உள்ளன.. இந்த அத்தியாவசிய கொழுப்புகள் விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன.
பாதிப்பு குறைவு: ப்ரோக்கோலியில் சல்ஃபோராபேன் என்ற கலவை உள்ளதால், விந்தணு இயக்கத்தை மேம்படுத்தவும் டிஎன்ஏ பாதிப்பைக் குறைக்கவும் பேருதவி புரிகின்றன. அவகேடோவில் கொழுப்புகளும், வைட்டமின் E போன்றவையும் நிறைந்துள்ளதால், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.. அத்துடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கிறது.
அதேபோல, சிகரெட் பிடிப்பவர்களுக்கும், மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கும் விந்து உற்பத்தி பாதிக்கப்படும்' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
கொய்யா இலைகள்: கொய்யா இலைகளும் விந்தணு உற்பத்திக்கு உதவுகின்றன.. கொய்யா இலையில் டீ தயாரித்து குடிப்பதால், விந்தணு உற்பத்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.. இதனால் கருத்தரிப்பதற்கும் உதவுகிறது.ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு, 4, 5 கொய்யா இலைகளை கழுவி தண்ணீரில் போட்டு கொதிக்கவிட விடவும். மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் வற்றிய பிறகு, இறக்கி, தேன் கலந்து குடிக்கலா.












Click it and Unblock the Notifications