பாலும் + பழமும்.. வியப்பூட்டும் நன்மை.. இரவில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அருமை
சென்னை: வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? எந்த நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்தது?
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன.. ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது என்கிறார்கள்.

ஒரு சாதாரண அளவுள்ள வாழைப்பழத்தில் மட்டுமே 105 கலோரிகள் உள்ளதால், பலவீனமான உடல் வாகு கொண்டவர்கள், வாழைப்பழத்தை தாராளமாகவே சாப்பிடலாம். மற்றபடி உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள் வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள தேவையில்லை. அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
ஒற்றை தலைவலி: மைக்ரேன் என்று சொல்லப்படும் ஒற்றைத்தலைவலிக்கு உடலில் சுரக்கும் தைரமின் என்ற சுரப்பி காரணமாக உள்ளது.. நிறைய வாழைப்பழம் சாப்பிட்டால் இந்த சுரப்பி சுரக்குமாம்.. இந்த பழத்திலுள்ள டைரோசின் அமினோ அமிலம் ஒற்றை தலைவலியை தூண்டக்கூடியது என்பதால், கண் நரம்பு பிரச்சனை இருப்பவர்கள் அதிக பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்துகள் வாயு பிரச்சனை மற்றும் வயிறு வீக்கத்தை தந்துவிடுமாம். வைட்டமின் B6 நிறைய உள்ளதால், நரம்புகளையும் பாதிக்கக்கூடும். நம்முடைய ரத்தத்தில் அதிகப்படியான பொட்டாசியம் இருந்தாலும் அலர்ஜி உள்ளிட்ட வயிறு உபாதைகளும் வரலாம்... அத்துடன் நிறைய ஸ்டார்ச் இருப்பதால் பல் சொத்தைகளும் வந்துவிடும்.
மூளை செயல்பாடு: எனினும், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்ற விவாதம் நடந்துகொண்டேயிருக்கிறது.. வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோபான் மற்றும் அமினோ ஆசிட்கள், மூளையின் செயல்பாடுகளை மழுங்க செய்துவிடும்.. இதன்காரணமாக, தூக்கமின்மை பிரச்சனையும் நம்மை தாக்கிவிடும். அதனால்தான், காலை நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, அமிலத்தன்மை உள்ளதால், குடல் இயக்கங்களை பாதிப்படைய செய்யக்கூடும்... வேண்டுமானால் மற்ற பழங்களுடன் சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
நன்மைகள்: எனினும், வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம்.. புரோட்டீன், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் பாஸ்பரஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. பால் மற்றும் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுமாம். தீவிரமான நோய்களிலிருந்து விலக்கி வைக்க இந்த வாழைப்பழங்கள் உதவுகின்றன.
ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், பால் மற்றும் வாழைப்பழத்தை கலந்து சாப்பிடலாம். இந்த கலவை ஆற்றலை பராமரிக்க உதவுவதுடன், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. சீரான செரிமானமும் நடக்கும்.. கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த இந்த கலவையானது, உடலுக்கு பலத்தை பெற்றுத்தரும்.
எந்த நேரம் சாப்பிடலாம்: வாழைப்பழத்தை எப்போதுமே காலை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது என்கிறார்கள்.. இதனால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருப்பதுடன், அசிடிட்டி , கால்களில் ஏற்படும் பிடிப்பை தடுக்க முடியுமாம்..
மதிய நேரத்தில் வாழையை சாப்பிட்டால், ஹைப்போ தைராய்டிசம் நிலைமை சீராகுமாம்.. இதனால் மனநிலையும் மேம்படும் என்கிறார்கள்.. இரவு நேரத்தில் வாழைப்பழங்களை சாப்பிடுவது, மலச்சிக்கலை போக்குகிறது.. நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த பழம், குடலியக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications