விர்ன்னு ஏறும் மினுமினுப்பு.. மக்காச்சோளத்தில் ஒரே ஆச்சரியம்.. கடகடன்னு வெயிட் குறைக்க மக்காச்சோளம்
சென்னை: உடல் எடையை குறைக்கக்கூடிய தன்மை கொண்டது மக்கா சோளங்கள்.. மக்காச்சோளத்தை அடிக்கடி சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மக்காச்சோளத்தில் மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், வைட்டமின் B, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டீன், பெருலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் நிறைந்துள்ளன.

இந்த சோளத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.. வேக வைத்தும் சாப்பிடலாம்.. எப்படி சாப்பிட்டாலும், நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைத்துவிடும். இந்த நார்ச்சத்துக்கள்தான், வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்கின்றன. அத்துடன் மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை காக்கிறது..
மூலநோய்: மூலநோய் ஏற்படாமல் தடுப்பதில் இந்த மக்காச்சோளத்துக்கு பெரும் பங்கு உள்ளது. அதேபோல, வயிறு புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி, இந்த மக்காச்சோளத்தில் நிரம்பியிருக்கின்றன..
மக்காச்சோளத்தை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாப்பிடலாம்.. அதிலும் கர்ப்பிணிகளுக்கு இந்த மக்காச்சோளம் மிகவும் நல்லது.. வயிற்றிலுள்ள குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க இந்த சோளம் உதவுகிறது.. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று மக்காச்சோளத்தை குறிப்பிட்ட அளவு சாப்பிடலாம்.
ரத்த அழுத்தம்: மக்னீசியம் கால்சியம் நிறைந்துள்ள இந்த சோளம், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது.. இதயத்துடிப்பை சீராக்குகிறது.. ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. சிறுநீரை அதிகமாக பெருக்கும் சக்தி மக்காச்சோளத்திற்கு இருப்பதால், உடம்பிலுள்ள உப்பை கரைக்கும் தன்மையும் உண்டு.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு, மக்காச்சோளம் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதுடன், மாவுச்சத்து இல்லாதது.. அத்துடன் கொழுப்பும் இல்லாதது.. நார்ச்சத்தும் அதிகம் என்பதால், மக்காச்சோளம் சாப்பிட்டதுமே பசியை குறைத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது..
உடல் எடை: இந்த மக்காச்சோளத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதயத்துக்கும் சீரான ரத்த ஓட்டத்தை செல்ல தூண்டுகிறது. எனவே, மக்காச்சோளம் எடை குறைப்புக்கு பெரிதும் துணைபுரிகிறது. ஆனால், சோளத்தை வெறுமனே வேகவைத்து சாப்பிட வேண்டுமே தவிர, வெண்ணெய், சீஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க பலன் கிடைக்காது.
ஊட்டச்சத்துக்கள்: அதேபோல, எடை குறைவாக இருப்பவர்களும், அடிக்கடி மக்காச்சோளம் சாப்பிட்டு வந்தால், உடலில் பலத்தை பெற முடியும்... ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த சோளம்தான்.
ஏனென்றால், 100 கிராம் சோளத்தில் 365 கலோரி இருக்கின்றது. கோதுமை,அரிசியை விட சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்.. இதிலுள்ள மஞ்சள், வெள்ளை நிறப்பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறதாம்.
பச்சை சோளம்: கார்போஹைட்ரேட், கலோரிகள் இரண்டுமே சரியான அளவில் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் இதிலிலிருந்து கிடைக்கின்றன.. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.. ரத்தசோகை உள்ளவர்கள், சோளத்தை பச்சையாக சாப்பிட்டு வரும்போது, உடலில் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யுமாம். இதனால் ஹீமோகுளோபின் பிரச்சனை தீருகிறது.
அடிக்கடி மக்காச்சோளம் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்பார்வை கூர்மையாக இருக்குமாம். காரணம் கரோடெனாய்டுகள், வைட்டமின் C, E உள்ளதால் பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. கார்போஹைட்ரேட் மட்டுமல்லாமல், புரோட்டீனும் நிறைந்துள்ளதால், மனஅழுத்தத்தை இந்த சோளம் விரட்டியடிக்கிறது.
சுருக்கங்கள்: தோலில் சுருக்கங்களை நீக்கி, சருமத்துக்கு ஈரப்பதம் தருகிறது இந்த மக்காச்சோளம். அதனால்தான், முகம் பொலிவு பெற, பலரும் சோள மாவை பயன்படுத்துகிறார்கள்.. கார்ன்பிளார் மாவு என்று சொல்லப்படும் சோள மாவை சிறிது பாலில் கலந்து, முகத்தில் பூசி கழுவி வந்தால், முகம் பொலிவு பெரும்.. தழும்புகள், கருமை நிற திட்டுக்கள் இருந்தாலும் நீங்கிவிடும்.












Click it and Unblock the Notifications