நீண்ட தலைமுடி வளர்ச்சிக்கு தொண்டான் மீன்கள்.. புதுஸ்ஸா இருக்கே? சத்துக்கள் நிறைந்த தொண்டான் கருவாடு
சென்னை: மீன்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கடல் உணவுகளை தவிர்க்கக் கூடாது என்று உணவு நிபுணர்கள் சொல்ல என்ன காரணம்? தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் மீன்கள் என்னென்ன? தொண்டான் மீனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
மற்ற அசைவு உணவுகளில் இல்லாத அளவுக்கு, கடல் மீன்களில் கொஞ்சம் அதிகமாகவே சத்துக்கள் இருக்கிறதாம். ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் உள்ளன.

மீன்களை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு, கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயங்கள் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள். நரம்புத்தளர்ச்சி பிரச்சனையும் விலகுகிறது..
மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.. அதேபோல, மீன்களை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு, கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயங்கள் வெகுவாக குறைந்துவிடுகின்றன.
தலைமுடி வளர்ச்சி: அதேபோல, தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானால் சில வகை மீன்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். அந்தவகையில்,. சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களை தேர்ந்தெடுக்கலாம்..
இதில், சால்மன் மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இவை அனைத்தும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அவசியமான தேவையாகும்.. காரணம், இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்தான் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கின்றன..
சால்மன் மீன்கள்: உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் இந்த மீன்களே உதவுகின்றன.. அத்துடன், தலைமுடி உறுதியாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க செய்கின்றன. தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தால், சால்மன் மீனை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
அதேபோல, இதில் தொண்டான் மீன்களையும் சேர்த்து கொள்ளலாம். அதிகமாக பலராலும் அறியப்படாத அரிய மீன் இதுவாகும்.. பார்ப்பதற்கு வெள்ளி நிறத்தில் காணப்படும் இந்த மீனின் முதுகில் நீல பச்சை நிறத்திலும், வாய் பகுதி முக்கோணம் போன்று கூர்மையாகவும் காணப்படும்.. இந்த மீனின் கை அங்குலம் நீளத்தில் மட்டுமே இருக்கும்.. அதேபோல, தொண்டான் மீனின் துடுப்புகள் இன்றி பிளவுபட்ட வால் மட்டுமே இருக்கும்.. இதனை வைத்துதான் கடலில் நீந்தி கொண்டு செல்லும்.
கருவாடு ருசி: அதிகப்பட்சமாக 21 செ.மீ நீளம் வரை வளரக்கூடிய இந்த வகை மீன்கள், இந்திய பெருங்கடல் மற்றும் மேற்கு பசுபிக் பெருங்கடலில் வாழ்கின்றன. சிறிய வகை உயிரினங்கள், மீன்களின் முட்டைகள், கடல் தாவரங்களில் படிந்திருக்கும் பாசிகள் தான் இந்த தொண்டா மீனின் உணவாகும். ஆனால் மீனைவிட தொண்டான் கருவாடு என்றால் கூடுதல் ஃபேமஸ்.. கிலோ ரூ.50 ரூபாய்க்குகூட கிடைக்கிறதாம்.
மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கக்கூடியது தொண்டான் மீன்கள்.. எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை தரக்கூடியது. எலும்பு தேய்மானம் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மீன் இதுவாகும்.. இந்த மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், எலும்பு தேய்மானமும் அண்டாது.. கண்பார்வை, மன அழுத்தம் ஏற்படுவதை தடுத்து, சரும நோய்களும் வராமல், சருமத்தை பளபளக்க செய்வது இந்த தொண்டான் மீன்கள்.
தலைமுடி உதிர்வு: இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த மீன்கள், தலைமுடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறதாம்.. முடி அதிகமாக கொட்டினால், இதனை சரிசெய்ய தொண்டான் மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனால் முடி உதிர்வு உடனடியாக கட்டுக்குள் வரும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications