ஆட்டிறைச்சி டிட்டோ.. சிக்கனை ஒருமுறை இப்படி செய்யுங்க.. ஆட்டுக்கால் போலவே ஆச்சரியம் தரும் கோழிக்கால்
சென்னை: கிட்டத்தட்ட மட்டன் கால்களை போலவே, சிக்கன் கால்களிலும் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.. எப்படி தெரியுமா?
ஆட்டுக்கால்களில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.. ஆண்களுக்கு மிகவும் சக்தியையும், பலத்தையும் தருகிறது. கலோரி கட்டுப்பாட்டை இந்த ஆட்டுக்கால் சூப் ஊக்குவிக்கிறது. மூட்டுவலி, முழங்கால் வலி, முதுகுவலி, மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நிவாரணம் தருகிறது.

கொலாஜன்: இதய தசைகளையும் பலப்படுத்துகிறது இந்த ஆட்டுக்கால் சூப்.. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவைகளுடன், கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் என எண்ணற்ற சத்துக்களின் ஆதாரமாக இந்த ஆட்டுக்கால் சூப் விளங்குகிறது..
இதனால், உடம்பிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் நீங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் சீராக்குகிறது.. இதயநோய், நீரிழிவு அபாயமும் குறைக்கப்படுகிறது. ஆட்டுக்கால் சூப்பில் குறைந்த அளவிலான கலோரியும், ஊட்டச்சத்தும், அதிக அளவிலான புரோட்டீனும் உள்ளது..
சரும பாதுகாப்பு: ஆட்டுக்கால் எலும்புகளினால், கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க செய்கிறது. இந்த கொலாஜன் நம்முடைய சருமத்தை பாதுகாக்கிறது.. கிட்டத்தட்ட இதுபோலவே நன்மைகளை தான் கோழிக்கறியின் கால்களும் தருகின்றனவாம்.
கோழிக்கறியை பொறுத்தவரை, வைட்டமின் B, A, D, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் உள்ளன.. வைட்டமின் B5 நிரம்பியிருப்பதால், மன அழுத்தத்தை இந்த கோழிக்கறி நீக்குகிறது.
பெண்கள்: வைட்டமின் B6 உள்ளதால், இதய நோய்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்த உதவுகிறது.. பாஸ்பரஸ், கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. மக்னீசியம் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலியை போக்குகிறது.
கோழியின் கால்களிலும் சத்துக்கள் நிரம்பி உள்ளன.. ஆட்டுக்கறி கால்களுக்கு இருக்கும் மவுசு, கோழிக்கறி கால்களுக்கு இருப்பதில்லை. அதேசமயம், நொறுங்கிய எலும்புகளை ஒன்றுசேர்க்க, ஆட்டுக்கால் எப்படி உதவுகிறதோ, அதுபோலவே, சில உள்சார்ந்த கோளாறுகளை தீர்ப்பதற்கும் இந்த கோழிக்கால்கள் உதவுகின்றன.
கொழுப்பு சத்துக்கள்: கோழிக்கால்களில் குறைந்த அளவே, கொழுப்பு சத்து இருக்கிறது.. கோழியின் மார்பகத்தில் உள்ள கொழுப்பு, கலோரிகளைவிட, கோழியின் கால்களில் உள்ளது மிகவும் குறைவுதான்.. அதுமட்டுமல்ல, கோழி மார்பகங்களை தோலுரித்த பிறகு, கோழி கால்களில் உள்ள கொழுப்பின் அளவு, மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டு இறைச்சியைவிட குறைவாகவே உள்ளதாம்.
அதேபோல, கோழி கால்கள் இரும்புச்சத்து நிறைந்தவை. "கொலாஜன்" நிரம்பியிருக்கின்றன... இதனால், வயதான தோற்றம் தள்ளிப்போடப்பட்டு சருமம் காக்கப்படுகிறது.. கெட்ட கொழுப்பை வெளியேற்றவும் இந்த கொலாஜன் உதவுகிறது..
கோழியின் கால்கள்: கோழியின் கால்களை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, சருமம் தொடர்பான பிரச்சனைகள் நெருங்குவதில்லையாம். ரத்த சிவப்பணுக்கள் அளவும் அதிகரிக்கின்றன..
புரோட்டீனும், கால்சியமும் சிக்கன் கால்களில் அபரிமிதமாகவே உள்ளது.. எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் அத்தனையும் இந்த கால்களிலிருந்தும் கிடைக்கின்றன. உடலில் ஏற்படும் காயங்களை விரைந்து குணமாக்க இந்த கால்கள் பயன்படுகின்றன..
கால் சூப்: இந்த கால்களை கிரேவி போல செய்யலாம்.. அல்லது குழம்பு செய்யலாம் அல்லது சிக்கன் 65 செய்யலாம்.. ஆனால், சூப் செய்து குடிக்கலாம். கோழியின் கால்களில் உள்ள மெல்லிய மஞ்சள் நிற தோலை கையாலேயே உரித்து எடுத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, கால் விரல்களை வெட்டித்தள்ளி விட்டு, கால்களை மட்டும் சிறுசிறு துண்டுகளாக்கி கொண்டு, விருப்பம்போல சமைக்கலாம்.












Click it and Unblock the Notifications