கொத்துக்கொத்தா கொட்டுதா.. உங்க தலைமுடி அடர்த்தியாக வளர "இது" போதுமே.. சும்மா கருகருனு வளரும் பாருங்க
சென்னை: இன்றைய சூழலில், இளநரையும், தலைமுடி கொட்டுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை சரி செய்ய முடியும்.
நாம் உண்ணும் உணவிற்கும், தலைமுடிக்கும் நேரடி தொடர்பு உள்ளது.. ஆரோக்கியமான உணவை பின்பற்றாதபோது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அது தலைமுடியில் காட்டி தந்துவிடும். இதனால் ஏற்படுவதுதான் நரைமுடி பிரச்சனையும், தலைமுடி உதிர்தல் பிரச்சனையும்.
மன அழுத்தம்: மாசுபாடு, அசுத்தமான தண்ணீர், போன்றவைகளும் தலைமுடியின் தரத்தை வெகுவாகவே பாதிக்கிறது. மேலும், மன அழுத்தமும், சரியான தூக்கமின்மையும் மிக முக்கியமான காரணங்களாகிவிடுகின்றன.

தலைமுடிக்கு "கண்டிஷனராக" சிலவகை பொருட்களும் கைகொடுத்து உதவுகின்றன. ஆனால், இவையெல்லாம் தலைமுடியின் மேற்பகுதிக்கு உதவுகிறதே தவிர, தலைமுடி வளர்ச்சிக்கு முழுமையாக உதவுவதாக இல்லை.
தலைமுடி: தலைமுடி வறண்டு போகாமல் இருப்பதற்காக, இத்தகைய பொருட்கள் கைகொடுப்பதை மறுக்க முடியாது. ஆனால், உணவில் சிலவகை சத்துக்களை சேர்ப்பதன்மூலம், தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்துவதுடன், தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.. அந்தவகையில், உணவாகவும் + தலைமுடிக்கு கண்டிஷனராகவும் பயன்படக்கூடிய 3 பொருட்களை மட்டும் இப்போது பார்ப்போம்.
குறிப்பாக, உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் A, C, E, B5, B6, B12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் போன்றவை அடங்கிய உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
கோழி முட்டைகள்: இதில், முதலாவதாக, கோழி முட்டைகள் உதவுகின்றன.. ஏகப்பட்ட புரோட்டீன்களும், வைட்டமின் B12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் போன்றவை இந்த முட்டையில் உள்ளன.. இதிலுள்ள "அல்புமின்" என்ற புரோட்டீன், தலைமுடி வளர்ச்சியை தூண்டிவிடுகிறது.. இதிலுள்ள பயோட்டின் என்கிற வைட்டமின் முடிஉதிர்தலை கட்டுப்படுத்துகிறது. எனவே, தினமும் உணவில் முட்டையை சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த முட்டைகள் சிறந்த கண்டிஷனராகவும் பயன்படுகிறது.. தேங்காய் எண்ணெய் + 1 முட்டை இரண்டையும் கலந்து, தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தாலே பலன் கிடைக்கும்.
பாலக்கீரை: அடுத்ததாக, பாலக்கீரையில் நிறைய இரும்புச்சத்து, வைட்டமின் A, C, புரோட்டீன்கள் உள்ளன. தலையிலுள்ள எண்ணெய் சுரப்பியை இந்த கீரை தூண்டிவிடுகிறது. உணவில் பசலைக்கீரை எனப்படும் இந்த பாலக்கீரையை தவறாமல் சாப்பிட வேண்டும். மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இந்த கீரையை தலைக்கு பயன்படுத்தினால், சிறந்த பலன் கிடைக்கும். பளபளப்பும் கிடைக்கும்.
அடுத்ததாக கறிவேப்பிலை.. இந்த கறிவேப்பிலையை எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும் தலைமுடி வளர்ச்சிக்கு நன்மைதான்.. வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை சாப்பிட்டாலே எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். செம்பருத்தி, தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை இவைகளை வைத்து, வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கலாம்.
கறிவேப்பிலை: செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதையும், கறிவேப்பிலையும் விழுதையும் சேர்க்க வேண்டும். இதில், சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கருகாமல் கொதிக்கவிட வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்துகொண்டு பயன்படுத்தி வரலாம்.
மொத்தத்தில், முடி உதிர்வை தடுக்க இரும்பு சத்து அதிகம் காணப்படும் கீரைகள், பச்சை இலை காய்கறிகள், பூசணி விதைகள், பருப்பு வகைகளையும், ஆளி & சோயாபீன்ஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவையும், சால்மன், டுனா, மத்தி, கானாங்கெளுத்தி போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களையும் தவறாமல் சாப்பிட வேண்டும்.
நிறைய தண்ணீர்: இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலே, தலைமுடி வளர்ச்சியில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். தண்ணீர் அதிகமாக குடிப்பதுடன் ஆரோக்கியமான உணவு + போதுமான தூக்கம் + நிம்மதியான மனநிலை இருந்தாலே, தலைமுடி தானாகவே வளர ஆரம்பித்துவிடும்.












Click it and Unblock the Notifications