இடுப்பு சதை சர்னு கரையணுமா? அப்ப இந்த 2 பொருள் போதுமே.. மளமளன்னு உடல் எடை குறைக்கும் ஆச்சரிய இலைகள்
சென்னை: எவ்வளவு கலோரியை உணவின் மூலம் நாம் உடலுக்குள் கொண்டு வருகிறோம்? அதில் எவ்வளவு கலோரித்திறனை செலவழிக்கிறோம்? என்பதை பொறுத்தே இடுப்பு சதை குறையுமாம். அதாவது, கலோரி குறைவான உணவை சாப்பிடுவதுடன், இடுப்பிற்கு அதிக அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இதில் முதலாவதாக, வெற்றிலையை எடுத்துக் கொண்டால், வயிற்று சதையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.. காலையில் வெற்றிலை, பாக்கு போடுவதாக இருந்தால், பாக்கு அளவை அதிகமாக சேர்த்து கொண்டாலே, துவர்ப்பு சுவையான பாக்கு, மலமிளக்கியாக செயல்பட்டுவிடும்.

வெற்றிலை: இளம் கொழுந்து வெற்றிலையுடன் நான்கைந்து மிளகுடன் சேர்த்து, வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும். அதுவும் வெறும் வயிற்றில், தொடர்ந்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள கழிவுகள் நீங்குவடன், வயிற்றுப்பகுதியிலுள்ள கொழுப்பு கரைய துவங்கும்.
அல்லது, இரவு தூங்க போகும்போது, 2 வெற்றிலை, 2 மிளகு, 5 உலர்திராட்சை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்றாலும் பலன் கிடைக்கும்.. அதேபோல, இரவு நேரங்களில், வெற்றிலைகளை நசுக்கி, தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை மட்டும் குடித்தாலும், குடல் இயக்கம் எளிதாகும்.
சின்ன வெங்காயம்: அடுத்ததாக, சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், ஊளைச்சதை குறையுமாம்.. குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் தேன் வெங்காயம் உதவியாக உள்ளது..
காரணம், சின்ன வெங்காயம், தேன், இந்த இரண்டிற்குமே நச்சுக்களை முறிக்கும் தன்மை உண்டு. அதாவது, சின்ன வெங்காயங்களை தோல் உறித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும்வரை தேன் ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்துவிட்டு, 3வது நாள் பயன்படுத்த துவங்கினால், கெட்ட கொழுப்பு நீங்கும்.
மரவள்ளிக்கிழங்கு: இந்த லிஸ்ட்டில் மரவள்ளிக்கிழங்கினையும் சேர்த்து கொள்ளலாம்.. ரத்த விருத்திக்கும், சிவப்பணுக்களை அதிகரிக்கவும் உதவ தூண்டுகிறது. இந்த கிழங்கில் கஞ்சி செய்து குடித்தால், உடலில் எனர்ஜி கிடைக்கும்.
உடல் எடையை குறைக்கவும் இந்த கிழங்கு உதவுகிறது. எப்படி தெரியுமா? இந்த கிழங்கில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளதால், கெட்ட கொழுப்புகளை உடலிலிருந்து நீக்குகிறது.. மேலும், உடலிலுள்ள கழிவுகள் மட்டுமல்ல, குடலிலுள்ள கழிவுகளையும் நீக்கி, வயிற்று பகுதிகளிலுள்ள கொழுப்பையும் கரைக்க தூண்டுகிறதாம்.
பெஸ்ட் சாய்ஸ்: அடுத்ததாக இஞ்சியை சேர்த்து கொள்ளலாம்.. உடல் இளைக்க வேண்டுமானால், இஞ்சியை விட பெஸ்ட் சாய்ஸ் வேறில்லை.. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து குடித்து வந்தால், இடுப்பு பகுதியில் கொழுப்புகளை நெருங்க விடாது என்கிறார்கள்.. அதுவும் இல்லாமல் ஏற்கனவே இடுப்பு பகுதிகளிலுள்ள கொழுப்பையும் கரைத்துவிடும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவந்தாலும், இடுப்பு சதை கரைய பேருதவி புரியுமாம்.












Click it and Unblock the Notifications