மீனில் பெஸ்ட் இதுவே.. பார்க்கறதுக்கு பச்சையா இருக்கும்.. பலபல பலன் தரும் அற்புத மீன்.. சூப்பர் ருசி
சென்னை: மேலோட்டமாக தோற்றத்தையும், நிறத்தையும் பார்த்து, பலரும் சாப்பிடாமல் ஒதுக்கும் மீன்களில் முக்கியமானது முரல் மீன்கள்.. இதன் மருத்துவ குணங்களும், முரல் மீன்களின் வகைகளும் என்னென்ன தெரியுமா?
முரல் மீன்கள் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், பல வகைகள் இருக்கின்றனவாம்.. எனினும் மற்ற மீன்களை காட்டிலும், தோற்றத்தில் வித்தியாசமாகவும், அபார சுவையுடனும், நிறைந்த சத்துக்களுடனும் காணப்படும் மீன் இதுவாகும்.

வகைகள்: வடிக்கிலி முரல், வாழியபோத முரல், வாளையா முரல் (வாளா முரல்), வரயி முரல், கருமுரல், பிள்ளை முரல், கோழியாமுரல், பாம்பு முரல், செல்ல முரல், இரங்க முரல், கலிங்க முரல், பைத்தங்கா முரல், நெடு முரல், பாசி முரல், படுக்கா முரல், பரவை முரல், கட்ட முரல், பரவை முரல், கூறைமேதல் முரல், அலமுரல், வாடையா முரல் இப்படி பல வகைகள் உள்ளனவாம். முரல்களிலேயே கலிங்கன் என்ற ஒருவகை மீன்களுக்கு முதலைக்கு இருப்பது போல் கூரிய பற்களும் இருக்குமாம்..
மெலிதான நீலம் தோய்ந்த பச்சை கலர் மீன் இது.. உடம்பெல்லாம் மட்டுமல்லாமல், முரல் மீனின் எலும்புகளும் கூட பச்சை கலரிலேயே காணப்படும்.. முரலின் முதுகும், வால் பகுதியும் ஒரே மாதிரியாக காணப்படும்.. அதேபோல, இவை இரண்டும், உடலின் பின்பகுதியில் வாலையொட்டி எதிரும்புதிருமாக அமைந்திருக்கும்.
தோற்றம்: இந்த மீனின் தோற்றம் பாம்பு போலவும், கடல் குதிரை போலவும் இருக்கும்.. குறுகிய நீண்ட தாடைகளுடன் கூடிய கூரான பற்கள் காணப்படும்.. மூக்கு பகுதி குறுகி காணப்படும்.. பற்கள் நீளமாக இருந்தாலும், மூக்குதான் கத்தி போல நீட்டிக் கொண்டிருக்கும். இந்த நீண்ட அலகு மனிதர்களுக்கு காயத்தையும், சிலவேளைகளில் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடும்.. அதேபோல, இந்த மீனின் ஊசி போன்ற அலகு, உடைந்து துண்டுதுண்டாகவும் வாய்ப்புள்ளதாம்.
கடலுக்குள் மீனவர்கள் படுவேகமாக படகுகள் சென்றாலோ, அல்லது படகுகளிலிருந்து வெளிச்சம் தென்பட்டுவிட்டாலோ, இந்த மீன்கள் பயந்துகொண்டு வேகமாக தண்ணீருக்குள் பாய்ந்து சென்றுவிடுமாம்.. அப்படி பாயும்போதும், படகில் மனிதர்களுக்கு சில சமயம் காயத்தை ஏற்படுத்திவிடும். வெயில் அடித்தாலும் கடலுக்குள் சென்றுவிடும். எனினும், மனிதர்களை வேண்டுமென்றே தாக்குவது கிடையாது.
முரல் மீன்கள்: இந்த முரல் மீன்களுக்கு எப்போதுமே நல்ல கிராக்கி இருந்து வருகிறது.. ஆனாலும் இந்த மீனின் பச்சை நிறத்தை பார்த்து ஒதுக்கிவிடுவார்கள். மற்ற மீன்களை காட்டிலும் இந்த முரல் மீன்களில் ருசியும் அபாரம் சத்துக்களும் அபாரம் என்கிறார்கள்.
வைட்டமின் D, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்தது இந்த முரல் மீன்கள். ஒமேகா-3 அமிலம் அதிகமுள்ள மீன்களில், இந்த முரலும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இந்த மீனை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளி: இதய செயல்பாட்டை முரல் மீன்கள் சீராக்குகிறது.. சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த முரல் மீன்கள் நல்லது.. அத்துடன், ரத்தத்திலிருக்கும் சர்க்கரையின் அளவையும் குறைக்கின்றன.. கால்சியம் நிறைந்த மீன் என்பதால், எலும்புகள் உறுதிக்கும், பற்களின் பலத்துக்கும் உறுதிதரக்கூடியது.
பெரும்பாலும் தேங்காய்ப்பால் விட்டு முரல் மீன் குழம்பு செய்வார்கள்.. தேங்காய்ப்பால் கலக்காமலும் இந்த மீனை சமைப்பார்கள்.. வழக்கமாக மீன் வறுவல் போல, இந்த முரல் மீன்களையும் மசாலா சேர்த்து வறுத்து எடுத்து கொண்டு, பிறகு மீன் குழம்பு செய்து, அதில், இந்த வறுத்த முரல் மீன்களை சேர்ப்பார்கள்..
முரல் மீன்களின் கருவாடுகளுக்கும் நல்ல கிராக்கி இருந்து வருகிறது.. மிகக்குறைந்த விலையில் நிறைந்த சத்துக்களை உடைய முரல் மீன்கள் கிடைத்தால், அதை தவறவிடக்கூடாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications