காஸ்ட்லி மீன்.. நரம்பு கோளாறு, எலும்புகள் பலம்பெற வஞ்சிரம் மீன்.. நிறைய புரோட்டீன்.. அசத்தல் பலன்கள்
சென்னை: பார்ப்பதற்கே சுண்டியிழுக்கும் இந்த வஞ்சிரம் மீனில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? கர்ப்பிணிகள் வஞ்சிரம் மீன் சாப்பிடலாமா?
வஞ்சிர மீனில் புரோட்டீன், ஒமேகா 3, வைட்டமின் A, D, B6, B12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.. இந்த மீனிலிருக்கும் வைட்டமின் A சத்தானது, ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுவதுடன், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் தீர்த்து வைக்கிறது.அத்துடன், B12 நிறைந்த இந்த வஞ்சிர மீன், ஆரோக்கியமான நரம்பு மற்றும் ரத்த அணுக்களை பராமரிக்க உறுதுணையாகிறது.

வஞ்சிரம் மீன்: வஞ்சிர மீனை சாப்பிடுபவர்களுக்கு இதயம் சீராக செயல்படுகிறது.. நுரையீரல் பலம்பெறுகிறது.. அவ்வளவு ஏன்? சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த வஞ்சிரம் மீன் சிறந்த மருந்தாகும்.
வஞ்சரம் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.. இந்த 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துகின்றன.. முக்கியமாக அல்சைமர் நோய் போன்ற நரம்பியல் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது.
சத்துக்கள்: பாஸ்பரஸ், செலினியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இந்த மீன் திகழ்வதால், எலும்புகள், பற்கள், தசைகளுக்கு ஆரோக்கியமாக உதவுகின்றன.. உடலில் சரியான திரவ சமநிலையை பராமரிக்கவும் வஞ்சிர மீன் உதவுகிறது. நல்லவகையான கொழுப்புகளும் உள்ளதே இந்த வஞ்சிர மீனின் தனித்துவமான ருசிக்கு காரணமாகிறது. கிரில்லிங் அல்லது ஸ்டீமிங் முறையில் வஞ்சிர மீனை சமைத்தால், கூடுதல் ஆரோக்கியமானது.
வஞ்சரம் மீனில் கலோரிகள் குறைவு, புரதச்சத்து அதிகம் என்பதால், உடல் எடை குறைய விரும்புபவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.. மீனின் அளவு மற்றும் அது தயாரிக்கப்படும் விதத்தைப் பொறுத்து வஞ்சரத்தின் ஊட்டச்சத்து மதிப்பு மாறுபடும் என்றாலும், சத்தான உணவாகவே வஞ்சிரம் கருதப்படுகிறது.
நன்மைகள்: நன்மைகள் பல வஞ்சிர மீனில் இருந்தாலும், ஆழ்கடலில் அதிகமாக வாழ்நாட்களை கொண்ட ஒரு மீனாக இருப்பதால் மெத்தில் மெர்குரி அளவும் இதில் நிறையவே உள்ளது... மெர்குரி அளவு அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தவிர்க்க வேண்டும் என்பார்கள்..
அதேபோல இந்த வஞ்சிரம் வாங்கும்போது, இதே போல ஒரு மீனை விற்றுவிடுவார்கள்.. "அரைகோலா மீன்" என்று அதற்கு பெயர்.. இந்த அரைகோலாவை பார்ப்பதற்கு, அப்படியே வஞ்சிரத்தை போலவே இருக்குமாம்.. அடையாளமே கண்டுபிடிக்க முடியாதாம்.. ஆனால் சுவை வஞ்சிரத்துக்கு நேர் மாறானது. அதனால் கவனமாக பார்த்து ஒரிஜினல் வஞ்சிரம் வாங்க வேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications